Press "Enter" to skip to content

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு தகுதி

வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் புள்ளிகள் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

கிறிஸ்ட்சர்ச்:

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

மகளிர் உலக கோப்பையில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

வெலிங்டனில் இன்று காலை நடந்த 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

மழையால் இந்தப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை விட்டதும் போட்டி தொடங்கியது. இதனால் ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா மட்டையிலக்குடுகள் சரிந்தன.

அந்த அணி 5.3 ஓவர்களில் 22 ஓட்டத்தை எடுப்பதற்குள் 4 மட்டையிலக்குடை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 10.5 ஓவர்களில் 4 மட்டையிலக்கு இழப்புக்கு 61 ஓட்டத்தை எடுத்து இருந்த போது ஆட்டம் மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. ஆஸ்திரேலியா 12 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 9 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. இன்றைய ஆட்டத்தின் மூலம் தென்ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறியது. தென்ஆப்பிரிக்கா கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தியாவை வருகிற 27-ந் தேதி எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 7 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு போட்டிகள் முடிந்து விட்டன. மற்ற அணிகள் ஆட்டத்தின் முடிவை பொறுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரை இறுதி நிலை இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »