Press "Enter" to skip to content

கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்… ஐ.பி.எல். கோப்பையை 5-வது முறை வெல்லுமா சி.எஸ்.கே.

சி.எஸ்.கே.வின் சிறப்பான செயல்பாட்டுக்கு டோனியின் தலைமை தான் காரணம் என்று கூறி வரும் நிலையில், கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.

ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிறந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில் சி.எஸ்.கே. 9 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதில் 4 தடவை (2010, 2011, 2018, 2021) ஐ.பி.எல் கோப்பையை வென்று மும்பைக்கு அடுத்த படியாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 முறை ஐ.பி.எல்.லில் பங்கேற்றுள்ளது. சஸ்பெண்டு காரணமாக 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதில் ஒரு தடவை தவிர தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி முத்திரை பதித்தது. 2020-ல் மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் 7-வது இடத்தை பிடித்தது.

4 முறை சாம்பியன், 5 தடவை 2-வது இடம் என யாரும் தொட முடியாத வகையில் சி.எஸ்.கே. உச்சநிலையில் இருக்கிறது. 2020-ல் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையாத அந்த அணி அதில் இருந்து மீண்டு கடந்த ஆண்டு கோப்பையை வென்றது பாராட்டதக்கதாகும்.

சி.எஸ்.கே.வின் சிறப்பான செயல்பாட்டுக்கு டோனியின் தலைமை தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. அணியை வழிநடத்தி செல்லும் விதம், முடிவுகள், யுக்தி, வீரர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அவர் அபாரமாக திகழ்ந்து வந்தார். ஆனால், தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. 

ஜடேஜா - டோனி

ஜடேஜா – டோனி

5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கே. வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகி இருப்பதால், கோப்பையை வெல்லுமா… என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இருப்பினும் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜடேஜா தலைமையில், சி.எஸ்.கே.வின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாகவும் இருக்கிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »