Press "Enter" to skip to content

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 மட்டையிலக்குடுகளை இழந்து 194 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

கிறிஸ்ட்சர்ச்:

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகள் உள்ளன.

இன்று நடந்த 26-வது ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 265 ஓட்டத்தை குவித்தது. தொடக்க வீராங்கனை சுசிபேட்ஸ் 126 ஓட்டத்தை எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நிதா தர் 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார்.

266 ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 194 ஓட்டத்தில் 9 மட்டையிலக்கு இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஹன்னா ரோவ் 5 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »