Press "Enter" to skip to content

கணினிமய மூலம் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் திட்டம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஏற்பாடு

வீரர்களுக்கு தொழில் நுட்ப திறன் பயிற்சியுடன் மேலும் பல திறன்களை பயிற்சிவித்து பன்முக கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாகும்.

தமிழகத்தை சேர்ந்தவர் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். கிரிக்கெட் வென்சர்ஸ் நிறுவனரான இவர் கணினிமய மூலம் இளம் வீரர்களின் திறமையை கண்டறிந்து இலவசமாக பயிற்சி அளிக்கிறார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் டில் பயிற்சியாளராக பணியாற்றிய போது தமிழகத்தில் ஏராளமான இளம் வீரர்களிடம் அபார திறமை ஒளிந்து கிடப்பதை அறிய முடிந்தது. இத்தகைய வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்துவதோடு உயர்தர பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ‘கணினிமய டேலண்ட் ஹண்ட்’ என்ற பெயரில் இணைய தளத்தில் வீரர்களின் திறமையை கண்டறியும் திட்டத்தை தொடங்கி உள்ளேன்.

விளையாட்டோடு எனக்கு உள்ள தொடர்புகளை பயன்படுத்தி இந்த திட்டத்தின் மூலம் தேர்வாகும் இளம் வீரர்களை அவர்களது வயது மற்றும் திறமை அடிப்படையில் சில அணிகளில் சேர்த்து விளையாட வைக்க முடியும் என்பது என்னுடைய எண்ணமாகும்.

லாப நோக்கமின்றி தொடங்கப்படும் இந்த திட்டத்தில் சேர கிரிக்கெட் வீரர்கள் பணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசமாகும்.

இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் விதமான காணொளி பதிவுகளை www.cricitventures.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த காணொளி பதிவுகளை நானும் எனது பயிற்சியாளர் குழுவினரும் பார்த்து, திறமையான இளம் வீரர்களை கண்டறிவோம்.

வீரர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப பிரித்து ‘எலைட் குரூப்’ ஒன்று உருவாக்கப்படும்.

இதில் இடம்பெறும் வீரர்கள் எங்களது மேம்படுத்தப்பட்ட பயிற்சி பெறுவதோடு, ஊக்கத் தொகை உதவியும் கிடைக்கும். இவர்களுக்கு பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சரிய மில்லை. எலைட் குரூப்பில் இடம் பெறாத வீரர்களுக்கு வேறு சில பயிற்சிகள் அளித்து செம்மைப்படுத்தப்படுவர்.

வீரர்களுக்கு தொழில் நுட்ப திறன் பயிற்சியுடன் மேலும் பல திறன்களை பயிற்சிவித்து பன்முக கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாகும்.

இவ்வாறு பத்ரிநாத் கூறினார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »