Press "Enter" to skip to content

பத்மஸ்ரீ விருது பெற்றார் நீரஜ் சோப்ரா

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல் கட்டமாக 54 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பத்ம விருதுகளை வழங்கினார்.

புதுடெல்லி:

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. 

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தலைநகர் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இரண்டாம் கட்டமாக நேற்று நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »