Press "Enter" to skip to content

டெல்லி கேப்பிடல்ஸ் பொறுத்துகொள்ளாது- வாட்ஸன் கண்டனம்

நேற்று நடைபெற்ற பேட்டியில் நடுவர் நோ பால் கொடுக்காததால் சர்ச்சை ஏற்பட்டது.

மும்பை:

ஐபிஎல் தொடரின் 15-வது பருவம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் அணி 222 ஓட்டங்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய டெல்லி அணிக்கு கடைசி சுற்றில் 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

அப்போது களத்தில் இருந்த ரோவ்மேன் போவல் முதல் 3 பந்துகளில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார். இந்நிலையில் 3வது பந்தை அவர் எதிர்கொண்ட போது ஃபுல்டாஸுக்கும் மேல் வந்தது போல தெரிந்தது. இதனால் நோ பால் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவர்கள் நோ பால் எதுவும் கொடுக்காமல், 3-வது நடுவரிடமும் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த டெல்லி கேப்பிடல் அணியின் துணை பயிற்சியாளர் பிரவின் அம்ரே நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய களத்திற்கு வந்தார்.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த செயல் தனக்கு வருத்தத்தை தருவதாக டெல்லி அணியின் மற்றொரு துணை பயிற்சியாளர் ஷேன் வாட்ஸன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கடைசி சுற்றில் நடந்த சம்பவம் வருந்ததக்கது. நடுவரின் முடிவு, அது சரியோ தவறோ அவற்றை ஏற்றுகொள்ள வேண்டும். நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய ஒருவர் களத்திற்கு வருவது ஏற்றுகொள்ளக்கூடியது அல்ல. நடுவர்கள் தான் விளையாட்டின் போது ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளனர். அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளக்கூடாது.

இவ்வாறு ஷேன் வாட்ஸன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »