Press "Enter" to skip to content

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு கார்னெட் தகுதி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் 34-ம் நிலை வீராங்கனை அலிஸ் கார்னெட் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 34-ம் நிலை வீராங்கனை அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்)-13-ம் நிலை வீராங்கனை எலெனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா) மோதினர். இதில் கார்னெட் 6-0, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த ஒஸ்டா பென்கோ, 2017-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்னெட் 3-வது சுற்றில் சீனாவின் கின்வென் ஜெங்க்யுடன் மோதுகிறார். இன்று ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் 3-ம் சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்களான ஜோகோவிச் (செர்பியா), நடால் (ஸ்பெயின்), ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் களம் காணுகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »