Press "Enter" to skip to content

காட்டுக்கு போனவருக்கு முள் குத்திடுச்சாம்பா: ரஜினியை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

Samayam Tamil | Updated:

ரஜினிகாந்த் காட்டுக்கு சென்றதை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ரஜினிகாந்த்

image

இங்கிலாந்தை சேர்ந்த பியர் கிரில்ஸ் நடத்தும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் ஷூட்டிங் நடந்தது. அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்றதை பார்த்து ரசிகர்கள் பயங்கர குஷியாகிவிட்டனர். புலி, சிங்கம் எல்லாம் தலைவருக்கு சாதாரணம் என்று தெரிவித்தார்கள்.

நட்டி

image

தர்பார் ரிலீஸில் இருந்து விஜய் ரசிகர்கள் ரஜினி பற்றி ஏதாவது செய்தி வெளியானால் இந்தா வந்துட்டோம் என்று கிளம்பி வந்துவிட்டுகிறார்கள். ரஜினியை கலாய்த்து ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் நடிகர் நட்டியோ, ஒன்னும் ஆகாது.. போனது சிங்கம்…. காட்ட மட்டும் இல்ல நாட்டையும் ஆளும்….என்று ட்வீட் போட்டார். அதை பார்த்த ரஜினி ரசிகர்கள் பெருமை அடைந்தார்கள். விஜய் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள்

image

ரஜினிக்கு காயம் என்று வெளியான செய்தியை பார்த்து நட்டி போட்ட ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன… என்று கலாய்த்து கமெண்ட் போட்டுள்ளனர்.

சிங்கம்

image

அது என்னவோ ரஜினி என்றாலே நெட்டிசன்கள் ஒன்று கூடிவிடுகிறார்கள். ரஜினி என்ன சொன்னாலும், செய்தாலும் கலாய்க்க ஒரு பெரிய கூட்டமே உள்ளது. இந்நிலையில் தான் ஒருவர் இப்படி கமெண்ட் போட்டுள்ளார்.

செருப்பு

image

ஏம்பா, ரஜினிகாந்த் வீட்டில் இருக்கும்போது எல்லாம் செருப்புடன் இருக்கிறார். காட்டில் சுற்றும்போது செருப்பு போட வேண்டும் என்று கூடவா தெரியாது. இதுவே தெரியாத ரஜினி எப்படி தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும் என்று விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »