Press "Enter" to skip to content

சீனர்கள், சீனாவிலிருந்து வருவோருக்கு இ-விசா சேவை தற்காலிக ரத்து.. இந்திய தூதரகம் அதிரடி முடிவு

டெல்லி: சீனா நாட்டினர் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு இ-விசா வசதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

சீனாவில் 300க்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. 14,562 பேரைத் தொற்றிக் கொண்டு பாடாய் படுத்துகிறது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 25 நாடுகளுக்கு பரவியுள்ள கொடூரமான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு சீனாவை சேர்ந்தவர்கள், சீனப் பயணிகள் மற்றும் அங்கிருந்து இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினருக்கான இ-விசா வசதியை இந்தியா இன்று தற்காலிகமாக நிறுத்தியது.

imageமீட்புக்கு வாய்ப்பு இல்லை.. மருத்துவ வசதியும் இல்லை.. சீனாவிலேயே இருங்கள்.. பாக். தூதர் அதிர்ச்சி

அறிவிப்பு

“தற்போதைய சில நிகழ்வுகள் காரணமாக, இ-விசாக்களில் இந்தியாவுக்கான பயணம் தற்காலிகமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, “என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதனால் சீனாவிலிருந்து வரக்கூடிய அந்த நாட்டு பயணிகள் மற்றும், அந்த நாட்டிலிருந்து இந்தியா வர விரும்பும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ-விசா கொடுக்கப்படாது.

சீன பாஸ்போர்ட்

“சீன பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் மக்கள் சீனக் குடியரசில் வசிக்கும் பிற நாடுகளின் விண்ணப்பதாரர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். ஏற்கனவே வழங்கப்பட்ட இ-விசாக்களை வைத்திருப்பவர்கள் இவை இனி செல்லுபடியாகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், “என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவை

“இந்தியாவுக்கு வருகை தந்தேயாக வேண்டிய கட்டாய காரணம் இருந்தால், அவர்கள் அனைவரும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காய் அல்லது குவாங்சோவில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் இந்த நகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களை தொடர்பு கொள்ளலாம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2வது விமானம்

இந்தியா, இன்று, 2வது முறையாக விமானத்தை அனுப்பி, கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வுஹான் நகரத்தில், சிக்கித் தவிக்கும், 323 இந்தியர்கள் மற்றும் ஏழு மாலத்தீவு குடிமக்களை இந்தியா அழைத்து வந்தது. இதன் மூலம், சீனாவிலிருந்து இந்தியா அழைத்துவரப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது. ஏர் இந்தியாவின் ஜம்போ பி 747 வுஹான் நகரத்திற்கு இரண்டு விமானங்களை அனுப்பி இவர்களை மீட்டது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »