Press "Enter" to skip to content

பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்: இன்சமாம் உல் ஹக் விவரிக்கிறார்

பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றால் அவர் ஜாவித் மியான்தத்துதான் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர் இன்சமாம் உல் ஹக். அதேபோல் அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ஹனிஃப் முகமது, ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்பர், முகமது யூசுப், யூனிஸ் கான் போன்றோர் பாகிஸ்தான் நாட்டின் தலைசிறந்த பேட்மேஸ்களாக கருதப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஜாவித் மியான்தத்துதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘என்னைத் பொறுத்த வரைக்கும் பாகிஸ்தான் உருவாக்கிய தலைசிறந்த பேட்ஸ்மேன் ஜாவித் மியான்தத்துதான். நான் அவருடன் இணைந்து ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளேன. அவர் மீது அவருக்கு ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது, அது அவரை மிகவும் சிறப்பான வீரராக மாற்றியது.

நான் ஒருமுறை முஷ்டாக் அகமதுடன் பேசும்போது, அவர் என்னிடம் ஒருமுறை ஆஸ்திரேயாவுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது மியான்தத் இளம் வீரர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்க மற்ற வீரர்கள் பயந்தனர். ஆனால், மியாத்தத் களம் இறங்க தயாராக இருப்பதாக கூறியதாக கூறினார். அவர் எப்போதும் பயப்படாமல் அணுகக்கூடியவர்.

பேட்ஸ்மேன்கள் எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவார். அதுதான் அவருடைய கோச்சிங். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் எல்லோரும் டெக்னிக்கலை விட ரன்கள் அடிப்பதில்தான் கவனம் செலுத்துவார்கள்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »