Press "Enter" to skip to content

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிப்புற மைதானத்தில் பயிற்சி

கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் முதன்முறையாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

வீரர்கள் சமூக இடைவெளியுடன் வெளிப்புற மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் லங்காஷைர் அணி வீரர்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஜூலை 8-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் பயிற்சி மேற்கொள்வார்கள். டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இன்றி நடத்தப்படும்.

பயிற்சியில் லங்காஷைர் அணி வீரர்கள்

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிப்புற மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். அதபோல் லங்காஷைர் கவுன்ட்டி கிரிக்கெட் அணியின் வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »