Press "Enter" to skip to content

கொரோனாவிற்குப் பிறகு ஆண்களின் பொறுப்பு மாறிவிட்டது: சுரேஷ் ரெய்னா

கொரோனா தொற்றுக்குப் பிறகு ஆண்களின் பொறுப்பு மாறிவிட்டது என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியபோது நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

புத்தகங்கள் படித்தும், வீட்டு வேலைகளை செய்தும், பண்ணைத் தோட்டத்தை பராமரித்தும் நேரத்தை செலவழித்தனர். மேலும், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவிட முடிந்தது.

இந்த நிலையில் கொரோனாவிற்குப் பிறகு ஆண்களின் பொறுப்பு மாறிவிட்டதாக இரண்டு குழந்தைகளின் தந்தையான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘ஏராளமான ஆண்கள் கொரோனா காலத்தில் தங்களுடைய முழு வாழ்க்கை ஸ்டைலையும், பொறுப்புகளையும் மாற்றிக் கொண்டனர். இதற்கு முன் இதுபோன்று ஒருபோதும் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்திருக்கமாட்டார்கள். கொரோனா தொற்றால் ஒவ்வொருவரும் அதிகமான நேரத்தை வீட்டில் செலவழித்தனர்.

குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பது, அவர்களுக்கு சாப்பாடு ஊட்டுவது உள்பட பல்வேறு பழக்கத்தில் ஈடுபட்டது, அவர்களது வேலையை சரியாக அளவிடுவது, டெலிவிசன் பார்ப்பது, காணொளி கேம் என நேரத்தை செலவிட முடிந்தது’’  என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »