Press "Enter" to skip to content

லிங்குசாமி படத்தில் இணைந்த இளம் நடிகை

தமிழ் திரைப்படத்தில் சண்டக்கோழி, பையா படங்களை இயக்கிய லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் இளம் நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி, சண்டக்கோழி, பையா, வேட்டை படப்புகழ் இயக்குனர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.

ஒரு சில வாரங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று படக்குழு படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி ஜோடியாக நடிக்கிறார்.

ரபோ19 (RAPO19) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »