தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமான நடிகை கர்ப்பமான நிலையில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ‘பகல்நிலவு’. இந்த சீரியலில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா முக்கிய வேடங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
காதலர்களாக இருந்த அன்வர் மற்றும் சமீரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் மூலம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீரா தற்போது சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமான இருக்கும் நிலையிலும் அவர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ’என்ஜாய் என்ஜாமி’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த காணொளி தற்போது இணையதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டு வருகிறது.
[embedded content]
Source: Malai Malar