Press "Enter" to skip to content

அன்று மைக் டைசன், தற்போது மொராக்கோ வீரர்: ஒலிம்பிக்கில் பரபரப்பு

ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியில் நிதானத்தை இழந்த மொராக்கோ வீரர், நியூசிலாந்து வீரரின் காதை கடிக்க முயன்ற சம்பவம் ஒலிம்பிக்கில் நடைபெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் நியூசிலாந்தின் டேவிட் நிகா- மொராக்கோவின் யூனெஸ் பால்லா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

போட்டி தொடங்கியதில் இருந்து நியூசிலாந்து வீரர் டேவிட் மோராக்கோ வீரருக்கு பஞ்ச் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் யூனெஸ் போட்டியில் தொடர்ந்து பின்தங்கி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் 0-3 என பின்தங்கியதால் யூனெஸ் நிதானம் இழந்து டேவிட்டின் காதை கடிக்க முயன்றார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட டேவிட், யூனெஸ்-ஐ தள்ளிவிட்டு காதை காப்பாற்றிக்கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் டேவிட் 5-0 என வெற்றி பெற்றார்.

இந்த சம்பவம் மைக்டைசன் ஹொலிபீல்டு காதை கடித்தது ஞாபகத்திற்கு வந்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »