Press "Enter" to skip to content

காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் தி.மு.க.வினர் கருப்பு கொடியுடன் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் இன்று (20-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், மத்திய அரசை கண்டித்து தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. சாலவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

இதில் ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதே போல் காஞ்சீபுரத்தை அடுத்த சிறுவேடலில் எம்.பி. ஜி.செல்வம் தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

காஞ்சீபுரம்தொடர்வண்டித் துறை சாலையில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கமலக் கண்ணன் தலைமையில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாபு, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், திருலோகசந்தர், ராமதாஸ், கருணாகரன், சுரேஷ், சீனு, அஜித் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் பூண்டி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கிளை செயலாளர் கே.வி.எஸ். குபேரன் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், அத்திப்பட்டு ஊராட்சி செயலாளர் எம்.டி.ஜி. கதிர்வேல், பழவேற்காட்டில் முகமது அலவி, மீஞ்சூரில் தமிழ் உதயன், வேம்பாக்கம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் சீனு, பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படியுங்கள்…கர்நாடக மாநிலத்தில் மோடி அலையால் மட்டும் பா.ஜனதா ஜெயிக்கவில்லை – எடியூரப்பா

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »