Press "Enter" to skip to content

ருதுராஜ், ஜடேஜா ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானுக்கு 190 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் 60 பந்தில் 101 ரன்களும், ஜடேஜா 15 பந்தில் 32 ரன்களும் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 190 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்து வருகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வழக்கம்போல் இந்த தொடக்க ஜோடி அதிரடியை வெளிப்படுத்தியது. இருந்தாலும் டு பிளிஸ்சிஸ் 19 பந்தில் 25 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6.5 சுற்றில் 47 ஓட்டங்கள் சேர்த்தது.

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 3 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த மொயீன் அலி 21 ரன்னிலும், அம்பதி ராயுடு 2 ரன்னிலும் வெளியேறினார்.

ஆனால் தொடக்க வீரர் ருதுராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 42 பந்தில் அரைசதம் அடித்தார். அப்போது சென்னை 13.4 சுற்றில் 100 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அரைசதம் அடித்தபின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அவருடன் இணைந்து ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சென்னை அணிக்கு 15-வது சுற்றில் 15 ரன்களும், 16-வது சுற்றில் 17 ரன்களும், 17-வது சுற்றில் 8 ரன்களும், 18-வது சுற்றில் 14 ரன்களும் கிடைத்தன. ருதுராஜ் ஒருபக்கம் சதம் நோக்கி செல்ல, மறுமுனையில் ஜடேஜா வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

19-வது சுற்றில் 12 ஓட்டங்கள் கிடைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 167 ஓட்டங்கள் அடித்தது. அப்போது ருதுராஜ் 58 பந்தில் 95 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

கடைசி ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜடேஜா, 2-வது பந்தில் இமாலய சிக்ஸ் விளாசினார். 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார்.

95 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ருதுராஜ் 5-வது பந்தை எதிர்கொண்டார். ஐந்தாவது பந்தில் ஓட்டத்தை அடிக்காத நிலையில் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி சதம் அடித்தார் ருதுராஜ் கெய்க்வாட். கடைசி சுற்றில் 22 ஓட்டங்கள் கிடைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தது.

ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 101 ஓட்டங்கள் எடுத்தும், ஜடேஜா 15 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »