Press "Enter" to skip to content

சஹா, திவாட்டியா, ரஷீத்கான் அபாரம் – ஐதராபாத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் விருத்திமான் சஹா, ஷுப்மான் கில் ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 69 ஓட்டங்கள் சேர்த்தது.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு  செய்தது. 

அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் ஐதராபாத் 6 மட்டையிலக்குடுக்கு 195 ஓட்டங்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அபிஷேக் சர்மா 65 ரன்களிலும், மார்க்ராம் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

குஜராத் சார்பில் முகமது ஷமி 3 மட்டையிலக்குடும், யாஷ் தயாள், ஜோசப் தலா ஒரு மட்டையிலக்குடும் எடுத்தனர்.

இதையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 22 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 10 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ராகுல் திவாட்டியா நிதானமாக ஆடினார்.

குஜராத் வெற்றி பெற கடைசி சுற்றில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. திவாட்டியா, ரஷீத் கான் ஜோடி போராடியது. கடைசி பந்தில் சிக்சர் அடித்து குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐதராபாத் சார்பில் உம்ரான் மாலிக் 5 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »