Press "Enter" to skip to content

ஒரு வீரரால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது- விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஹசன் அலி

நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் எனக்கு ஆதராவாக இருந்தார் என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. அவர் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒரு சில போட்டியை வைத்து எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹசன் அலி 58 போட்டிகளில் விளையாடி 89 மட்டையிலக்குடுகளை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் 49 ஆட்டத்தில் விளையாடிய அவர் 60 மட்டையிலக்குடுகளை கைப்பற்றியுள்ளார். சராசரி 23.15. மேலும் 19 சோதனை போட்டிகளில் விளையாடி 23.60 சராசரியில் 74 மட்டையிலக்குடுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:-

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் நான் சிறப்பாக செயல்பட்டேன். பாகிஸ்தான் அணியில் நான் அறிமுகமானதில் இருந்து இரண்டாவது சிறந்த பந்து வீச்சாளர் நான் தான்.

ஒவ்வொரு போட்டியிலும் அல்லது தொடரிலும் ஒரு வீரரால் சிறப்பாக செயல்பட முடியாது. கடந்த காலங்களில் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல் தான் நானும். கடின உழைப்பும் முயற்சியும் என் கையில் உள்ளது. எனது குறைபாடுகளை சரிசெய்ய முயற்சிப்பேன்.

நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் எனக்கு ஆதரவளித்தார். 2021 டி 20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட்டின் கேட்சை தவறவிட்டதில் மனதளவில் சோர்வடைந்தேன். ஒரு வீரரின் செயல்பாட்டிற்காக அவரது குடும்பத்தினரை குறிவைப்பது சரியல்ல.

நான் ஒரு போராளி என்பதை பாபர் அசாம் அறிவார், அதனால்தான் அவர் என்னை ஆதரிக்கிறார். டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் கேட்சை தவறவிட்டது குறித்து ரசிகர்களின் விமர்சனம் நியாயமானது. பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடிய போதிலும் என்னால் இறுதிப் போட்டிக்கு வரமுடியவில்லை. இதனால் இரண்டு இரவுகள் என்னால் தூங்க முடியவில்லை. ஆனால் குடும்பத்தை குறிவைப்பது சரியல்ல. 

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »