முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.
புனே:
ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்குகிறது. கொல்கத்தா சார்பில் பாட் கம்மின்ஸ், ஷெல்டன் ஜாக்சனுக்கு பதிலாக உமேஷ் யாதவ், சாம் பில்லிங்ஸ் இணைந்துள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar