Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால…

தேர்தல் செயல்முறை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி… ஹர்ஷ் வர்தன் தகவல்

இந்தியாவில் தேர்தல் செயல்முறையின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்டு தடுப்பூசி விரைவில்…

புதுவையில் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டம்- முதல்-அமைச்சர் அலுவலகம் தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரே‌‌ஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டமிட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு்ள்ளது. புதுச்சேரி: முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவை…

டெல்லி போராட்டக்களத்தில் பார வண்டியை சொகுசு வீடாக மாற்றிய விவசாயி

டெல்லி போராட்டக்களத்தில் விவசாயிகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு சீக்கிய விவசாயி, தனது பார வண்டியை வீடு போன்று மாற்றி தங்கியிருக்கிறார். புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற…

யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரிக்க ஈரான் முடிவு

போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது. டெஹ்ரான்: அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். புதுச்சேரி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில்…

காவிரி உப வடிநிலத்தை புனரமைக்க ரூ.224 கோடி நிதி அனுமதி- தமிழக அரசு உத்தரவு

காவிரி ஆற்றுப்பாசன வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ், காவிரி உப வடிநிலத்தைப் புனரமைத்து நவீனப்படுத்துவதற்கு ரூ.224 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை: காவிரி ஆற்றுப்பாசன வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ், காவிரி உப…

கணினிமய கந்துவட்டி கடன் மோசடி- சீன நாட்டினர் உள்பட 4 பேர் கைது

கணினிமய கந்துவட்டி கடன் மோசடி வழக்கில் சீன நாட்டினர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னை: கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், ஊரடங்கு…

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறையை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்- முக ஸ்டாலின் பாய்ச்சல்

தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தவன் தான் என்றும், இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் அந்த துறை அசிங்கப்படுத்தப்பட்டு, கேவலப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் பேசினார். கோவை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை வடக்கு மாவட்டம் –…

குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா

குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆமதாபாத்: இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய புதிய வகை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது.…

தி.மு.க.வுக்கு எடுத்துத்தான் பழக்கம், கொடுத்து பழக்கம் இல்லை- எடப்பாடி பழனிசாமி பேச்சு

தி.மு.க.வுக்கு எடுத்துத்தான் பழக்கமே தவிர கொடுத்து பழக்கம் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ராமநாதபுரம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டத்தில், நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருவாடானை சட்டமன்ற தொகுதியில்…

பிரேசிலில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்தது

பிரேசில் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77 லட்சத்தைக் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால்…

தடுப்பூசியை பாதுகாப்பாக பெற வழிமுறைகள் என்ன? – நிபுணர்கள் விளக்கம்

கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பான முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை நிபுணர்கள் விளக்கி உள்ளனர். புதுடெல்லி: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி…

நியூசிலாந்துடனான 2வது சோதனை – உணவு இடைவேளையில் பாகிஸ்தான் 4 மட்டையிலக்குடை இழந்து திணறல்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது சோதனை போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கிறிஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர்…

அருணாசல பிரதேசத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

அருணாசல பிரதேசத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்போது யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இடாநகர்: இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பரவல் சரிந்து வருகிறது. சில குறிப்பிட்ட மாநிலங்களை தவிர, பிற மாநிலங்கள்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயி தற்கொலை – வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடிதம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய கா‌‌ஷ்மீர் சிங் என்ற விவசாயி நேற்று தற்கொலை செய்துகொண்டார். காஜியாபாத்: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில்,…

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை…

கொரோனா தடுப்பூசி எந்த கட்சிக்கும் சொந்தமானதல்ல – உமர் அப்துல்லா சொல்கிறார்

எந்த ஒரு தடுப்பூசியும் எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. அவை மனிதகுலத்துக்குச் சொந்தமானவை என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகர்: நாட்டில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியிருக்கும் நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலே‌‌ஷ்…

பைசர் தடுப்பூசி போட்ட பெண் மருத்துவர் அரை மணிநேரத்தில் ஐசியுவில் அனுமதி

கொரோனா பாதிப்பை தடுக்க பைசர் தடுப்பூசி போட்டு கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் அரை மணிநேரத்தில் ஐசியுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் வசித்து வரும் 32 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு…

என் மாவட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் வேலுமணி

என் மாவட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை: கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க.…

கேரளாவில் 5-ந் தேதி திரையரங்கம்கள் திறக்க அனுமதி

கேரளாவில் 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் திரையரங்கம்கள் மீண்டும் திறக்கப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேரளாவில்…

அயோத்தியில் ராமர்கோவில் கட்டுமான பணி 15-ந்தேதி தொடக்கம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. 2023-ம் ஆண்டு இது நிறைவு அடையும். அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது உலகளாவிய இந்துக்களின் விருப்பம் ஆகும். இந்த…

முதல் மந்திரியை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு – பஞ்சாப்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

பஞ்சாப் முதல் மந்திரியை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்த சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கைக் கொல்பவர்களுக்கு 1…

சென்னையில் மற்றொரு நட்சத்திர ஓட்டலிலும் கொரோனா பரவியது – 16 ஊழியர்களுக்கு தொற்று

சென்னையில் உள்ள மற்றொரு நட்சத்திர ஓட்டலிலும் கொரோனா பரவியது. அங்கு பணியில் இருந்த 16 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த…

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு நடக்கிறது

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 66 காலியிடங்களுக்காக…

டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது

அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கை மசோதாவில் ஜனாதிபதி டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது. வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன்வெற்றி பெற்றார்.…

இத்தாலியில் பட்டாசு சத்தத்தால் கொத்து கொத்தாக செத்து மடிந்த பறவைகள்

இத்தாலியில் பட்டாசு சத்தத்தால் சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நூற்றுக்கணக்கான பறவைகள் கொத்து கொத்தாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரவு 10…

வார நாட்களில் கூடுதலாக 160 மின்சார தொடர் வண்டி சேவை – தெற்குதொடர்வண்டித் துறை

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதலாக 160 மின்சார தொடர் வண்டி சேவை இயக்கப்படும் என தெற்குதொடர்வண்டித் துறை அறிவித்துள்ளது. சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னையில் புறநகர் மின்சார…

இங்கிலாந்தில் உச்சத்தை தொட்ட கொரோனா – ஒரே நாளில் 57725 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 57,725 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல்…

கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர நிபுணர் குழு பரிந்துரை

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. புதுடெல்லி: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அதிகம் பரவிய நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில்…

கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி – மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி:  இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா…

நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், *…

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட்…

தமிழகத்தில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை- வெற்றி பெற்றதாக அதிகாரிகள் மகிழ்ச்சி

சென்னை உள்பட 17 இடங்களிலும் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி அடைந்ததால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை: கொரோனா பரவலை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. சென்னை, நீலகிரி,…

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது- தாதாசாகேப் பால்கே தென்னிந்திய திரைப்படம் விருதுகள் முழு விவரம்

சென்னை: அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய திரைப்படம் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில்…

சாதாரண மக்கள் யாரும் தி.மு.க.வில் எந்த காலத்திலும் பதவிக்கு வர முடியாது- எடப்பாடி பழனிசாமி

சாதாரண மக்கள் யாரும் தி.மு.க.வில் எந்த காலத்திலும் பதவிக்கு வர முடியாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மதுரை: தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மதுரை விமான…

‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- பல் மருத்துவர் கைது

‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக மாணவியின் தந்தையான பல் டாக்டரை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மருத்துவ படிப்பில்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 8.43 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.43 கோடியைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர்…

புதுச்சேரியில் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

புதுச்சேரி மாநிலத்தில் இன்று 9 மையங்களில் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. புதுச்சேரி: கொரோனா உயிர்க்கொல்லி நோய் சீனாவின் மத்திய நகரமான ஊகான் நகரில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது.…

தமிழ்நாட்டில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி

தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கொண்டாட்டத்துக்கு தடையால் கடந்த ஆண்டைவிட ரூ.17½ கோடி விற்பனை குறைந்தது. சென்னை: தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கொண்டாட்டத்துக்கு தடையால்…

விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை – ப.சிதம்பரம்

வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் பூத் குழு உறுப்பினர்கள்…

சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் 80 ஊழியர்களுக்கு கொரோனா

சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆலந்தூர்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.   சென்னை மாநகராட்சி   பகுதியிலும் 300-க்கும்…

சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் குறைப்பு

சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி புத்தகத்துடன் ஏஜென்சிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். சென்னை: சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி…

மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.25 கோடியை கடந்தது

மெக்சிகோ நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 1.25 கோடியைத் தாண்டியுள்ளது. மெக்சிகோ: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும்…

நெல்லை தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

அணைகளில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால், நெல்லை தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை: வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.…

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்- வைகோ நம்பிக்கை

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். சென்னை: புத்தாண்டு தினமான நேற்று, சென்னை எழும்பூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும்- தமிழக அரசு உத்தரவு

கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் தற்போதுள்ள பொது  ஊரடங்கு…

உயரதிகாரிகள் பெயரில் போலி போன் அழைப்புகள் – ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தான் உளவாளிகள் இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து கொள்ள உயரதிகாரிகள் போல் பேசுவதாக ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: இந்திய உளவுத்துறை ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து…

இண்டேன் கியாஸ் சிலிண்டர் பெற மிஸ்டு கால் வசதி அறிமுகம்

இண்டேன் கியாஸ் சிலிண்டர்கள் புக்கிங் செய்யவும், புதிய இணைப்புகளைப் பெறவும் மிஸ்டு கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இண்டேன் கியாஸ் சிலிண்டர்கள் புக்கிங் செய்யவும்,…