Press "Enter" to skip to content

அட்லாண்டிக் பெருங்கடல்: ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுனாமி – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற செய்திகள்

ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுனாமி – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

எதிர்காலத்தில் ஏதோவொரு காலகட்டத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டன் ஃபால்க்லாண்ட் தீவில் மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடலுக்கு அடியே நெடுங்காலமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுவருவதாகக் கூறும் அவர்கள், இந்த நிலச்சரிவின் காரணமாக எதிர்காலத்தில் 300 அடிகளுக்கு மேல் அலைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.

அதே நேரம் இதற்காக யாரும் அஞ்ச வேண்டாம் என்று கூறு அவர்கள், இவ்வாறான சுனாமி ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறைதான் ஏற்படும் என்று தெரிவிக்கிறார்கள். ஃபால்க்லாண்ட் தீவானது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள் மார்ச் 31வரை மூடல்

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் பார்கள், வணிக வளாகங்கள் போன்றவை நாளை முதல் மார்ச் 31 வரை மூடப்பட்டிருக்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விரிவாகப் படிக்க:தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள் மார்ச் 31வரை மூடல்

கொரோனா வைரஸ்: மலேசியாவில் பொது நடமாட்டத்துக்கு இரு வாரங்கள் தடை

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான இரு வார காலத்துக்கு மலேசியாவில் பொது நடமாட்டத்துக்கு (LOCKDOWN) தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திங்கட்கிழமை இரவு மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் வெளியிட்டார்.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: மலேசியாவில் பொது நடமாட்டத்துக்கு இரு வாரங்கள் தடை

தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம்

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, பட்டப்படிப்பு மட்டுமல்லாது, 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் அளவுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் தற்போது அமலில் இருந்துவருகிறது. ஆனால், பட்டப்படிப்பை தமிழில் படித்தால், இந்த 20 சதவீத முன்னுரிமை பிரிவில் இடம்பெற்றுவிட முடியும்.

விரிவாகப் படிக்க: தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம்

இளமதி – “சுயவிருப்பத்தோடுதான் பெற்றோருடன் சென்றேன்” – நீதிபதி முன் வாக்குமூலம்

தனது மனைவியை கடத்திச் சென்றதாக செல்வன் கொடுத்த வழக்கில் ஆஜரான இளமதி, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், சுயவிருப்பத்தில் தான் பெற்றோருடன் சென்றேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மார்ச் 09ஆம் தேதி அன்று கொளத்தூர் காவல்நிலையத்தில் செல்வன் கொடுத்த புகாரில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் தன்னை இளமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும், சாதியின் பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்தி தனது மனைவி இளமதியை கடத்திச்சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

விரிவாகப் படிக்க:“சுயவிருப்பத்தோடுதான் பெற்றோருடன் சென்றேன்” – நீதிபதி முன் இளமதி வாக்குமூலம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »