Press "Enter" to skip to content

விளாடிமிர் புதின்: 2036 வரை ரஷ்ய அதிபர் பதவியில் நீடிக்க வாய்ப்பு மற்றும் பிற செய்திகள்

ரஷ்யாவின் அரசியலமைப்பை திருத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ரஷ்யாவின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புதின் 2036ஆவது ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளில் இதுவரை 87 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகும், அவற்றில் 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அரசியலமைப்பின்படி அதிபர் பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியில் நீடிக்க முடியாது.

ஏற்கனவே தொடர்ந்து இரு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்த விளாடிமிர் புதின் ஒருமுறை அந்நாட்டு பிரதமராக இருந்த பின்பு மீண்டும் அதிபரானார்.

இந்த முறையும் தொடர்ந்து இரண்டு பதவிக்காலங்கள் முடிவடைய உள்ளது என்பதால் 2024ஆம் ஆண்டில் அவரது பதவிக் காலம் முடிந்த பின்பு அவரால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால் புதிதாக திருத்தப்படும் அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் தேர்தலில் வெல்லும்பட்சத்தில், ஆறு ஆண்டுகள் கொண்ட இரண்டு பதவி காலங்களுக்கு அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.

“தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை நிரந்தர தீர்வொன்று எட்டப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

கொழும்பிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விரிவாக படிக்க:”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ

கொரோனா வைரஸ் தொற்று: சீன பாரம்பரிய மருந்தை ஊக்குவிக்கும் அரசு

கோவிட்-19 நோய்த் தடுப்புக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வரும் இந்த வேளையில், இந்த நோய் சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் (TCM) முக்கியத்துவத்தை சீனா முன்னிறுத்தி வருகிறது.

நாட்டில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு வகையில் பாரம்பரிய மருத்துவ முறைகள் கையாளப்பட்டன என்று சமீபத்தில் சீன அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பாரம்பரியத்தை நாடும் சீனா

சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் காவலர் யார்?

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சமூகத்தின் அனைத்து தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

விரிவாக படிக்க:ரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் காவலர் – யார் இவர்?

ரத்தம் தோய்ந்த முதியவரின் சடலத்தின் மீது 3 வயது சிறுவன் – நடந்தது என்ன?

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபோர் என்னுமிடத்தில் புதன்கிழமை காலை தீவிரவாத தாக்குதல் நடந்தபோது ஒரு முதியவர் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த பேரன் தப்பிப் பிழைத்தான். அந்த சிறுவனின் படமும், காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

விரிவாக படிக்க:காஷ்மீர் தாக்குதல்: ரத்தம் தோய்ந்த முதியவரின் சடலத்தின் மீது 3 வயது சிறுவன் – நெஞ்சை உலுக்கும் படம், நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »