Press "Enter" to skip to content

வெள்ளை நிற தோள் மட்டுமே அழகா? நிற பாகுபாட்டுக்கு எதிரான ஓர் போராட்டம்

  • பிரிஷ்டி பாசு
  • பிபிசி ஃயூச்சர்

நிறவாதம் என்பது ஒரே இனக்குழுவில் மென்மையான நிறம் கொண்டவர்களுக்குச் சாதகமான பாகுபாடாக உள்ளது. உலகம் முழுக்க சமுதாயங்களில் இதனால் பெரிய தாக்கம் உள்ளது என்றாலும், இதுவரையில் அபூர்வமாகத்தான் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஹர்ஷரின் கௌர் பருவ வயதைக் கடந்த பிறகு, தன்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த இந்தியாவைப் பார்ப்பதற்காக முதன்முறையாக பயணம் மேற்கொண்டபோது, தங்களுடைய தோலின் நிறத்தை மாற்றிக் கொள்வதில் மக்களிடம் எந்த அளவுக்கு மன அழுத்தம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மென்மையான நிறம் கொண்டவர்கள் மட்டுமே இந்திய திரைத்துறையில் பிரபலமாக இருக்க முடியும் என்று காட்டுபவையாக, திரைப்படங்களில் விளம்பரப் பதாகைகள் அமைந்திருந்தன. மென்மையான நிறத்தில் தோல் இருக்கும் பெண்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது, திருமணம் அமைகிறது, அல்லது மகிழ்வாக இருக்கிறார் என்பதைப் போல, தோல் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தொலைக்காட்சி விளம்பரங்கள் காட்டுகின்றன.

“நியூசிலாந்தில் கார்னியர் மற்றும் லோரியால் நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்து நான் பார்த்தது கிடையாது. ஆனால் இந்தியாவில், அதுகுறித்து நிறைய விளம்பரங்கள் செய்யப் படுகின்றன” என்று கௌர் கூறினார். அவர் The Indian Feminist என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிர்வகித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மக்களின் எழுச்சிக்குப் பணிந்த லோரியால் நிறுவனம் “வெள்ளை”, “அழகு” மற்றும் “மென்மை நிறம்’ ஆகிய வார்த்தைகளை தங்கள் தோல் பொருட்களில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

குறிப்பாக கார்னியர் வரிசைப் பொருட்களில், இவ்வாறு செய்வதாக அறிவித்தது. வெள்ளையாக மாற்றும் பொருள் என்று தான் அதை தெற்காசிய நாடுகளில் அந்த நிறுவனம் விளம்பரப்படுத்தி வந்தது.

நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு கருப்பான தோல் உள்ள நாட்டில் இவ்வாறு விளம்பரம் செய்து வந்தது. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாட்டில் சூரியக் கதிரில் புறஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு இதைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வந்தது.

பாகுபாடும் நிறவாதமும்

ஒரே இனக்குழுவில் மென்மையான நிறம் கொண்டவர்களுக்கு ஆதரவான பாகுபாடு காட்டப்படுவது நிறவாதம் எனப்படுகிறது. கருப்பின சமுதாயத்தினர் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படும் விஷயமாக இது இருக்கிறது. மன அழுத்தம் நிறைய இருந்தபோதிலும், இதனால் மரணங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், மிக சமீப காலம் வரையில் தெற்காசியப் பகுதிகளில் அதிக அளவுக்கு பேசப்படவில்லை.

வெள்ளை நிற தோள் மட்டுமே அழகா?

ஆனால் மே 2020-ல் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட போது, உலகம் முழுக்கப் போராட்டங்கள் வெடித்தன. இன எதிர்ப்பு குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதனால் தெற்காசிய நாடுகளிலும், அவர்கள் வசிக்கும் நாடுகளிலும் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது.

Indian Matchmaking என்ற தலைப்பில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் புதிதாக ரியாலிட்டி ஷோ தொடர் நிகழ்ச்சிகள் நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்த, உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்தியப் பெண் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு இணையர்களைத் தேடும் நிலையில், அவர்களை மென்மையான நிறத்தில் இருப்பது போன்ற படங்களை பதிவிட்டிருந்தார். அதனால் அதுபற்றி நிறைய பேசப்பட்டது.

இந்தப் போராட்டங்களை தொடர்ந்தும், பாப் கலாச்சாரத்தில் பாகுபாடுகளை ஊக்குவிக்கும் சிந்தனைகள் தொடர்ந்ததாலும், நிறவாத சிந்தனைகள் நிறைய பேர் புறக்கணிக்கத் தொடங்கினர். மென்மை நிறம் தருவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பொருட்களுக்கான ஆதரவையும் விலக்கிக் கொள்கின்றனர்.

`ஃபேர் & லவ்லி’

சில நிறுவனங்கள் இதற்கு ஏற்ப செயல்பாடுகளைக் காட்டியுள்ளன. பிரபலமாக இருக்கும் ஃபேர் அண்ட் லவ்லி’ யின் தாய் நிறுவனமான யுனிலிவர் நிறுவனம், “அழகு,” “வெண்மையாதல்” மற்றும் “மென்மை நிறமாதல்” என்ற வார்த்தைகளை நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் ஃபேர் அண்ட் லவ்லியின் பெயர் க்ளோ & லவ்லி என மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்றாலும், சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து வேகப்படுத்தப் பட்டிருப்பதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடைகளில் விற்பனையில் இருக்கும் ஃபேர் அண்ட் லவ்லி பொருட்களை திரும்பப் பெறுவ வேண்டும் என்று பரவலாகக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. திட்டமிட்ட அணுகுமுறையில் இனவாதத்தை ஊக்குவித்து வருவதாக யுனிலிவர் சிஇஓ ஆலன் ஜோப் -க்கு சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்தன. இனவாதத்தை ஊக்குவித்து ஆண்டுக்கு £256 மில்லியன் லாபம் ஈட்டும் தொழிலை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நிறுவனத்தின் பெயரை க்ளோ அண்ட் லவ்லி என மாற்றியதால் நிறுவனத்திற்கு கொஞ்சம் பாராட்டு கிடைத்தாலும், அது போதாது என்று நிபுணர்கள் கூறுகின்றன. அவை இன்னும் கடைகளில் விற்பனையில் உள்ளன.

ஜொலிப்பு விமர்சனம்

“இதில் ஏதும் வித்தியாசம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. அதிக அங்கீகாரம் பெற்ற பிராண்ட்டாக இருப்பதால், இந்த நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஆனால் `க்ளோ & லவ்லி’ என்ற பெயரும் கூட என் மனதுக்குப் பிடிக்கவில்லை.

ஏனென்றால் க்ளோ என்பது `மென்மையான நிறம்’ என்பதைக் குறிக்கும் வேறொரு சொல்லாக உள்ளது” என்று வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக இருக்கும் நிக்கி கன்னா கூறியுள்ளார். இனவாத உறவுகள் மற்றும் நிறவாதம் குறித்து இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தி வருகிறார்.

“இதில் `க்ளோ’ ன்ற வார்த்தையும் – அது குறிப்பிடும் படம் மற்றும் வருடக்கணக்கில் உருவாக்கிய விளம்பரங்களும், இந்த மின்னும் வெண்மையைப் பெறும் பெண்கள் என்பதைக் குறிப்பிடுவதாக உள்ளது. திட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதாவது இந்தப் பொருளையே முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

நிறவாதமும் தொடர்விளைவுகளும்

இதுகுறித்து இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், நிறவாதத்தால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

வெள்ளை நிற தோள் மட்டுமே அழகா?

மன ஆரோக்கியம் பாதிக்கிறது என்பது இதில் ஒரு விஷயம். உதாரணமாக, மன அழுத்தத்திற்கான அறிகுறிகள், தோலின் கருப்பு நிறத்துக்கு எதிரான பாரபட்சமான சிந்தனை ஆகியவை தென்னமெரிக்க பெண்களிடம் ஏற்பட்டிருப்பதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

“வரலாற்று ரீதியாக, பல்வேறு சமுதாயங்களில் `கருப்பு’ நிறம் கெட்ட அம்சமாக பார்க்கப்படுகிறது. கருப்பாக இருக்கும் மக்கள் `அழுக்காக’ அல்லது `குறைந்த கல்வி கற்றவர்களாக’ இருப்பார்கள் என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதுவே காலப்போக்கில் அவர்களின் குழுக்களுக்கு உள்ளும், வெளியிலும் ஆழமாகப் பதிந்துள்ளது’ என்று ஆய்வுக் கட்டுரை உருவாக்கியவர்களில் ஒருவரான அலிசா (ஜியாக்-தாவோ) ட்ரான் கூறியுள்ளார். இவர் அரிசோனா அரசு பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் உளவியல் துறை அசோசியேட் பேராசிரியராக இருக்கிறார்.

“தெற்காசிய சமுதாயங்களில், ஜாதிய அமைப்பு மற்றும் சமூக பாரம்பரியம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக நீண்ட வரலாறு கொண்டதாக இந்த விஷயம் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஜோடிப் பொருத்தம்

இந்தியாவில் பழைய தலைமுறைகளில் தோலின் நிறம் குறித்த சிந்தனைகள் திருமணத்தின் போது அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் திருமணத்துக்கு இணையரைத் தேர்வு செய்யும் நடைமுறைகளில் இதைக் காணலாம்.

தெற்காசிய சமுதாயங்களில், பருவம் வந்த ஆண்களின் பெற்றோர், பெண்ணின் வீட்டிற்குக் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து முடிவு செய்வது பொதுவான வழக்கமாக உள்ளது. பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே இளைஞரும், இளம் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பது வரலாற்றுப்பூர்வமான விஷயமாக உள்ளது. சமீப காலமாக நிறைய இளைஞர்கள் “காதல் திருமண” வழிமுறையைத் தேர்வு செய்து கொள்கிறார்கள்.

தன்னுடன் வாழக் கூடியவரை தாமே தேர்வு செய்து கொள்கிறார்கள், சில சமயங்களில் தங்கள் குடும்பத்தினரை பகைத்துக் கொண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்தியாவில் பெற்றோர் ஏற்பாட்டில் நடக்கும் திருமணங்கள் பற்றி நடந்த ஓர் ஆய்வில், மென்மையான நிறம் கொண்டவர்களைக் காட்டிலும், கருப்பான நிறத்தில் உள்ள மணமகன் அல்லது மணமகளை மாமியார்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் எதிர்மறை விஷயங்கள்

இந்தத் தகவல்கள் ஆச்சர்யமானவை அல்ல. பெற்றோர் ஏற்பாட்டில் நடக்கும் திருமணங்களுக்கு பத்திரிகைகளில் தரப்படும் விளம்பரங்களைப் பார்த்தால், மென்மையான நிறத்தை விரும்பும் போக்கு பரவலாக இருப்பதை உணர முடியும். வாய்ப்புள்ள மணமகன்களை ஈர்ப்பதற்கு, நல்ல நிறமான (மென்மை நிறம்) பெண் என்ற அம்சம் விளம்பரங்களில் பிரதானமாக இடம் பெற்றிருக்கும்.

வெள்ளை நிற தோள் மட்டுமே அழகா?

விண்ணப்பம் செய்பவர்கள் தங்களுடைய தோலின் நிறத்தை “அழகானது” மற்றும் “கோதுமை நிறத்திலானது” முதல் “அடர்த்தியாக” (அதாவது கருப்பு நிறம்) என்ற வரிசையில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு திருமண வரன்பார்க்கும் இணையதளம் வலியுறுத்துகிறது. அதேபோல தன்னுடைய வாழ்க்கைத் துணைவரின் தோலின் நிறம் எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யும்படியும் கேட்கப்படுகிறது.

தோல் பில்ட்டர்கள்

“விருப்பம் தெரிவிப்போரை வடிகட்டுவதற்கான ஓர் அம்சமாகப் பத்திரிகைகள் – தோலின் நிறத்தை – பயன்படுத்துகின்றன. நாங்கள் அதையே பின்பற்றுகிறோம். மக்களைப் போல, நிறுவனங்களும் செயல்பாட்டை மாற்றிக் கொள்கின்றன. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, திருமண ஜோடி தேடும் நடைமுறையில் தோலின் பில்ட்டர்கள் என்ற அம்சத்தில் இருந்து விலகியிருக்க நாங்கள் முடிவு செய்தோம்” என்று shaadi.com இணையதளத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் அதிஷ் ஜவேரி தெரிவித்தார்.

ஆனால் தோலின் நிறம் குறித்த மிச்சங்கள் இணையதளத்தில் இருக்கின்றன. தோலின் நிறத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான பயனாளர் இடைமுகப் பகுதி அந்த இணையதளத்தில் இருக்கிறது. இருந்தாலும் உண்மையில் தகவல்கள் தேடுதல் நிலையில், தோலின் நிறம் குறித்த கேட்புகள் நிராகரிக்கப்படுவதாக இணைதளத்தினர் கூறுகின்றனர்.

வட அமெரிக்காவில் வாழும் தெற்காசிய பெண்களின் முகநூல் குழுவிற்கு இந்தத் தகவல் கிடைத்ததும், இதுகுறித்து shaadi.com இணையதளத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு உடனடியாகக் கடிதம் அனுப்பப்பட்டது.

“24 மணி நேரத்துக்குள், 1500 பேர் கையெழுத்திட்டனர்” என்று கடிதத்தை உருவாக்கிய டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் வசிக்கும் ஹெட்டல் லகானி தெரிவித்தார். “Shaadi.com இணையதளம் இந்த பில்ட்டரைக் கைவிட முடிவு செய்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

கலாசார நிலை மாற்றம்

கடந்த தசாப்தம் வரையில் தெற்காசிய சமுதாயங்களில் நிறவாதம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் ஆகியவை அதை மாற்றி வருகின்றன.

வெள்ளை நிற தோள் மட்டுமே அழகா?

இந்திய – அமெரிக்க கலப்பினப் பெண்மணியான கன்னா, Whiter: Asian American Women on Skin Color and Colorism என்ற புத்தகம் எழுதியுள்ளார். அமெரிக்காவில் வாழும் தெற்காசியப் பின்னணி கொண்ட பல பெண்கள், நிறவாதம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அது உள்ளது. நிறவாதம் என்பது போன்ற தலைப்புகளின் மீதான விவாதங்களை, இன்றைய கணினி மயமான தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பதற்கு இது நல்ல உதாரணம் என்று தெரிய வருவதாக அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகப் பிரசாரங்கள்

கருத்துகளை அனுப்புமாறு கேட்டு முகநூல் பதிவிட்டு 2017ல் கன்னா இந்த ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கினார். “என்னுடைய சமூக தொடர்புகளைக் கடந்தும் உள்ள பெண்களிடம் இருந்து இதுபற்றிய கருத்துகளைப் பெறுவதில் சமூக ஊடகம் உண்மையிலேயே உதவிகரமாக இருந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

ஆசியர்கள் மத்தியிலும், வெளிநாடுகளில் வாழும் ஆசியர்களிடமும் நிறவாதம் என்ற விஷயம் குறித்த சிந்தனையே இல்லை என்பது முதலில் அவருக்கு ஆச்சர்யத்தைத் தந்துள்ளது.

ஆனால், காலப்போக்கில் அதில் நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருமை அழகு மற்றும் #brownisbeautiful (பிரவுனாக இருப்பது அழகு) என்பவை போன்ற சமூக ஊடகப் பிரச்சாரங்களால் இது ஓரளவுக்கு சாத்தியமானது. தெற்காசியர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மௌனத்தை உடைக்கவும், தங்கள் சமுதாயத்தில் நிறவாதம் பற்றிய கருத்துகளை மாற்றவும் இதுபோன்ற பிரச்சாரங்கள் உதவியாக இருந்தகன.

பல நூறாண்டு கால நம்பிக்கைகளை தகர்த்தெறிவதில் சமூ ற்றி கேள்வி எழுப்பக் கூடிய, ஒருமித்த கருத்து கொண்டவர்கள் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்ஊடகங்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்று ட்ரான் ஒப்புக்கொள்கிறார். நிறவாத கருத்துகள் பபு இதன் மூலம் கிடைக்கிறது. இனவாதம் மற்றும் நிறவாதம் பற்றிய கருத்தாடல்களில் தலைமுறை இடைவெளி இருப்பதை, இன்றைய தலைமுறையினர் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் தருவதற்குப் பதிலாக, அதை நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

“இந்தச் சிறிய கலந்துரையாடல்கள், சிறிய கலந்தாடல்கள் முக்கியமானவையாக உள்ளன. நமது சமூகங்களில், பல தலைமுறைகளாகப் புரையோடிப் போயிருக்கும் பாரபட்ச எண்ணங்களை முறியடிப்பதற்கு இவை உதவியாக உள்ளன” என்று ட்ரான் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »