Press "Enter" to skip to content

சிங்கப்பூரில் கொரோனா: பணியாளர்கள் பாகுபடுத்தப்படுவது அம்பலம்

  • ஈவெட் டான்
  • பிபிசி

ஜாகிர் ஹுசேன் கோகான் போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டார்.

11 பேருடன் தங்கியுள்ள அறையில் இருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி கிடைத்து அவருக்கு சில வாரங்கள் ஆகியுள்ளன.

ஆறு மெட்டல் பிரேம்களில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகளைத் தவிர, அந்த அறை காலியாகக் கிடக்கிறது. துணிகளும், டவல்களும் படுக்கைகளுக்கு அருகே தொங்குகின்றன. கொஞ்சம் தனிமையை ஏற்படுத்துபவையாக அவை உள்ளன.

“இரவு, பகலாக நாங்கள் அறைக்குள் தான் இருக்கிறோம். அது உண்மையில் மனதளவில் கொடூரமானது. சிறையைப் போல உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

“அறைக்குள் இடவசதி இல்லை என்பதால் சமூக இடைவெளிகூட பராமரிக்க முடியாது” என்கிறார் அவர்.

ஏற்கெனவே கோவிட்-19 பாதிப்புக்கு ஆளாகி, குணம் அடைந்துள்ள ஜாகிர் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளார். மிக மோசமான நாட்களைக் கடந்து வந்திருப்பதாக அவர் கூறினார். அவர் தங்கியிருந்த அறையில் ஜூன் மாதம் பரிசோதனை நடந்து, நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அற்றது என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த மாதம் அந்த வளாகத்தில் புதியவர்கள் பலர் வந்து தங்கினர். ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் போல, இப்போது அவரும் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டிருப்பதாக சிங்கப்பூருக்கு பாராட்டுகள் கிடைத்த நிலையில், வெளிநாட்டினர் தங்கும் டார்மிட்டரிகள் (பல பேர் தங்கும் துயிற்கூடம்) வசதியில், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவத் தொடங்கிய பிறகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டில் சிங்கப்பூரின் வெற்றி சீர்குலைந்துவிட்டது. பிரச்னை தொலைதூரத்தில் இருக்கும்போதே கணித்திருக்க வேண்டும் என்று சில செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சிங்கப்பூரில் உள்நாட்டு மக்களிடையே நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன. உணவகங்களில் மக்கள் சிரித்துப் பேசும் ஒலி மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் மிகக் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள் வீடுகளிலேயே உள்ளனர், நிச்சயமற்ற நிலையை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

நகரை உருவாக்கியவர்கள்

சிங்கப்பூரில் கொரோனா

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது முதலில் ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்டது. சில வாரங்களில், நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.

தடமறிதல் செயல் திட்டத்தின் அங்கமாக, தேசிய அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)-தடமறிதல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. பொது மக்களுக்கான முன்னெச்சரிக்கைகள் அதிகரிக்கப்பட்டு, தெளிவாக தெரிவிக்கப்பட்டன. சிங்கப்பூரின் அணுகுமுறையை “சரியான பரவல் கண்டறிதலுக்கான சரியான தரம்” என்று ஹார்வர்டு தொற்றுநோய் நிபுணர்கள் கூறினார்கள். ஆனால், மக்கள் தொகையில் பெரும்பாலானோர் பார்த்திராத ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது.

குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் சிங்கப்பூரில் உள்ளனர். இநதியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள். கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் அவர்கள் வேலைபார்க்கிறார்கள்.

அங்கே வேலை பார்ப்பவராக இருந்தால் மட்டுமே சிங்கப்பூரில் தங்கியிருக்க உரிமை கிடைக்கும். அதிலும் அவருக்கு, குறிப்பிட்ட கட்டணத்தில் தங்கும் இடவசதியை முதலாளியே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தங்கள் டார்மிட்டரிகளில் இருந்து கூட்டம் நிறைந்த வேன்களில் கட்டுமானப் பணி நடக்கும் இடங்களுக்கு அவர்கள் செல்கின்றனர். மற்ற டார்மிட்ரிகளில் இருந்து வந்தவர்களும் அங்கு வேலையில் ஈடுபடுவதால் அவர்களுடன் இவர்கள் கலந்து வேலை பார்க்க வேண்டும். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுதலுக்கு மிகவும் வசதியான சூழ்நிலைகளாக இவை உள்ளன.

சிங்கப்பூரில் கொரோனா: பணியாளர்கள் பாகுபடுத்தப்படுவது அம்பலம்

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினர், பெரும்பாலும் அதிக தொழிலாளர்கள் வேலைபார்க்கும் துறைகளில் உள்ளனர்.

அதிகபட்சம் எவ்வளவு பேரை தங்க வைக்கலாம் என்பதற்கு சட்டப்பூர்வ விதி எதுவும் இல்லாத நிலையில், கோவிட் பாதிப்புக்கு முந்தைய நாட்களில், ஒரு தங்கும் அறையில் 20 ஆண்கள் வரை தங்கவைக்கப்பட்டனர்.

“இங்கு தங்கவைக்கப் படுவோரில் புதிய குழுவினரை சேர்ப்பது ஆபத்தானதாக இருக்கும்” என்று கடந்த மார்ச் மாதம், குடிபெயர்ந்த தொழிலாளர் உரிமைகள் குழுவான TWC2 எச்சரிக்கை விடுத்தது.

தேசிய அளவில் பாதியளவுக்கு முடக்கநிலை அமல் செய்யப்பட்ட போது, இந்த நோயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என கூறப்பட்டது. ஆனால், குடயேறி தொழிலாளர்கள் மத்தியில், தினமும் நூறுக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

ஏப்ரல் மாதம் மத்தியில் இருந்து அரசு இரண்டு மாறுபட்ட தெளிவான விவரங்களை வெளியிடுகிறது. உள்நாட்டு மக்களிடம் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் டார்மிட்ரிகளில் தங்கியிருப்போரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை என இரண்டு வகையாக விவரங்கள் வெளியிடப் படுகிந்றன.

தங்குமிடங்களில் வசிப்போர் மற்றும் உள்நாட்டு மக்கள் மத்தியில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் நிறைய வித்தியாசம் காணப்படுகிறது. உள்நாட்டு மக்கள் மத்தியில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், புள்ளிவிவர வரைபடங்களில் பதிவு செய்வதே கஷ்டமாக உள்ளது.

குடிபெயர்ந்த தொழிலாளருக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலம்

“மற்ற பெருநோய்களைப் போல, கோவிட்-19 நோயும்கூட சமநிலையற்று தான் தாக்குகிறது” என்று மக்கள் விரும்பத்தக்கதுஸே பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புத் துறை பேராசிரியராக உள்ள மோகன் தத்தா பிபிசியிடம் கூறினார்.

“சிங்கப்பூரில் இரண்டு மாறுபட்ட புள்ளிவிவரங்கள் என்பதை நாங்கள் எப்படி தெரிவிக்கப் போகிறோம். சமநிலையற்ற தன்மையை இது இன்னும் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது. `தனிமைப்படுத்துதலின்’ அடையாளமாக இது இருக்கிறது என்று யாரும் இதை சொல்லக் கூடும்” என்று அவர் கூறினார்.

முடங்கியிருந்தல்

இதற்கிடையே துயிற்கூடங்களை மூடி விட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருந்த 10 ஆயிரம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் இடங்களை இழந்தனர். நாட்டின் ஓட்டத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பணியில் இருப்பவர்கள் இவர்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆனால் பெரும்பாலானவர்கள் டார்மிட்டரிகளில் சிக்கிக் கொண்டனர். பெரிய எண்ணிக்கைகளில் மருத்துவப் பரிசோதனைகள் நடந்தபோது, தங்கள் அறைகளில் இருந்து வெளியேற பலர் அனுமதிக்கப்படவில்லை. நோய் பாதிப்புள்ள தொழிலாளர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது.

குடியேறி தொழிலாளர்களைத் தவிர, நாட்டின் பிற மக்களுக்கு முடக்கநிலை என்பது மாறுபட்ட அனுபவத்தைக் கொடுப்பதாக இருந்தது. கடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது, தினமும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்பட்டது, எல்லா விற்பனை நிலையங்களும் வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்கும் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டன. இவர்கள் மட்டும் தான் உண்மையிலேயே முடக்கிவைக்கப்பட்டார்கள், அடிப்படை அளவிலான உணவு மட்டும் இவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் கொரோனா: பணியாளர்கள் பாகுபடுத்தப்படுவது அம்பலம்

“முடக்கநிலை அமலில் இருந்தபோது நாங்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அடுத்த அறைக்குச் செல்வதற்குக் கூட அனுமதி கிடையாது” என்று தென்னிந்தியாவைச் சேர்ந்த வைத்தியநாதன் ராஜா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளைப் பார்த்து, குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த சிங்கப்பூரில் பலர் உதவ முன்வந்தனர் – புதிய ஆரோக்கிய நடவடிக்கைகளுடன் இணைந்த கவனிப்பு காரணமாக நல்லெண்ண அடிப்படையிலான செயல்களுக்கு உதவிகள் குவிந்தன. டார்மிட்டரி நடத்தும் பலரும், வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க முயற்சித்தனர்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

18 செப்டம்பர், 2020, பிற்பகல் 3:27 IST

தாம் தங்கியிருக்கும் தங்கிமிட விடுதியில் வசதிகள் பரவாயில்லை என்றாலும், நிறைய பேர் தங்கும் கூண்டு போன்ற அறைகள் தான் பிரச்சனை என்று இந்தியாவில் இருந்து வந்துள்ள 51 வயதான மகாலிங்கம் வெற்றிச்செல்வன் கூறினார். இப்போது அந்தப் படுக்கைகளை மாற்றி தனிப் படுக்கைகளாகக் கொடுத்துள்ளனர். “நல்ல இடைவெளி விட்டு” அவற்றை அமைத்திருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தன்னுடைய தங்குமிடத்தில் எப்படி மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று வேறொரு வெளிநாட்டுத் தொழிலாளர் புகைப்படங்கள் அனுப்பியுள்ளார். 15 படுக்கைகள் இருந்த அறைகளில் இப்போது 8 படுக்கைகள் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேல், கீழ் என இரண்டு படுக்கைகள் கொண்டதாக (இடது) இருந்த தமது படுக்கை, தனி படுக்கையாக (வலது) மாற்றப்பட்டுள்ளதாக வேறொரு குடிபெயர்ந்த தொழிலாளர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா: பணியாளர்கள் பாகுபடுத்தப்படுவது அம்பலம்

தாம் ஓட்டலில் தங்குவதற்கு முதலாளி ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதால், தாம் அதிர்ஷ்டசாலி என்று இன்னொரு தொழிலாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள ஜாகிர் விஷயம் இப்படிப்பட்டதாக இல்லை. அவர் கட்டுமானப் பணியில் திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலைபார்க்கிறார்.

கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, தற்காலிக தங்குமிடத்தில் குணம் பெற்றார். பிறகு டார்மிட்டரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

“ஏப்ரல் 17 ஆம் தேதி நான் டார்மிட்ரியில் இருந்து சென்றேன். ஜூலை 9-ல் நான் திரும்பி வந்தபோது, எந்த மேம்பாட்டையும் காண முடியவில்லை” என்று அவர் கூறினார்.

ஆறு மீட்டர் அகலம் ஏழு மீட்டர் நீளம் என்ற அளவுள்ள அந்த அறையில் 12 ஆண்கள் வரை தங்கியிருப்பதாக ஜாகிர் தெரிவித்தார்.

“சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் எங்களைப் பொருத்தவரை அது வெறும் ஜோக் தான் தெரியுமா” என்று கேட்கிறார் ஜாகிர்.

“அந்த சிறிய அளவு அறையில் நாங்கள் எப்படி சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியும்” என்று அவர் கேட்டார்.

அந்த வளாகத்தில் ஒவ்வொரு மாடியிலும் 15 அறைகள் இதுபோல உள்ளன. அதாவது எல்லா அறைகளிலும், எல்லா படுக்கைகளுக்கும் ஆட்கள் தங்கியிருந்தால் 180 ஆண்கள் வரையில் அங்கு தங்கியிருப்பார்கள். ஒரு கழிவறை, ஆறு வாஷ்பேசின்கள், குளியல் தடுப்பறைகள், சிறுநீர் செல்லும் இடங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் ஜாகிர்.

சிங்கப்பூரில் கொரோனா: பணியாளர்கள் பாகுபடுத்தப்படுவது அம்பலம்

ஒவ்வொரு 15 படுக்கை வசதிகளுக்கும், ஒரு கழிவறை, ஷவர், சிங்க் வசதி இருக்க வேண்டும் என்று அரசு வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

180க்கும் மேற்பட்ட ஆண்கள் பயன்படுத்தும் குளியலறைகளின் ஒரு பாதிப் பகுதி இது.

“சுத்தமாக இருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சோப் டிஸ்பென்ஷருக்குள் சோப் கிடையாது” என்றார் ஜாகிர்.

இதுபற்றி கருத்தறிய டார்மிட்டரி உரிமையாளரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

இதுபோன்ற சூழ்நிலைகளை தான் பல தொழிலாளர்கள் நீண்டகாலமாக அனுபவித்து வருகிறார்கள் என்று Its Raining Raincoats என்ற பெயரிலான குடிபெயர்ந்த தொழிலாளர் உரிமைகள் அமைப்பின் நிறுவனரான தீபா சுவாமிநாதன் கூறினார்.

“இப்போது உங்களுடன் நாம் பேசிக் கொண்டிருக்கும் டார்மிட்ரிகள், உணவு போன்ற விஷயங்கள் எல்லாம் பல ஆண்டுகளாகவே இருப்பவைதான்” என்று பிபிசி நியூஸ் செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

“அவர்கள் புகார் செய்வதில்லை என்பதால் நாம் அதுபற்றி கேள்விப்படாமல் இருக்கிறோம். எதற்காக சிங்கப்பூருக்கு வந்திருக்கிறோம் என்பதில் அவர்களுக்கு தீவிர கவனம் இருக்கிறது. அதற்கு நன்றிக் கடன் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். தங்களால் இனியும் தாங்க முடியாது என்ற நிலை வரும் போதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது” என்றார் அவர்.

இந்த கொள்ளைநோய்த் தொற்று, தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த வருத்தமான தகவல்கள் நிறைய உள்ளன. தற்கொலைகள், மரணங்கள் அல்லது தங்களையே காயப்படுத்திக் கொள்வது போன்ற பல தகவல்கள் உள்ளன.

பரவலாக பகிரப்படும் ஒரு காணொளியில், டார்மிட்ரியின் ஜன்னல் அருகே நிற்கும் ஒரு தொழிலாளியை, அவருடன் தங்கியிருப்பவர்கள் உள்ளே இழுத்துச் செல்லும் காட்சிகள் உள்ளன. இது உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

“என் டார்மிட்ரியில் உள்ள சிலர், தங்கள் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு, இனியும் தாக்குபிடிக்க முடியாது என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன்” என்று குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான தன்னார்வ அமைப்பு நடத்தி வரும் ஜாகிர் கூறினார்.

சிங்கப்பூரில் கொரோனா: பணியாளர்கள் பாகுபடுத்தப்படுவது அம்பலம்

“அவர்கள் அழுகிறார்கள், ஊருக்குச் செல்ல விரும்புகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினர் இவர்களின் வருமானத்தை நம்பியுள்ள நிலையில், சம்பளம் கிடைக்காத பிரச்சினையும் மன அழுத்தத்திற்கு ஓரளவிற்குக் காரணமாக உள்ளது.

“நாங்கள் வெளியில் செல்ல முடியாது என்பதால், பணத்தை அனுப்பி வைக்க முடியாது” என்றார் ஜாகிர். சிலருக்கு வழக்கமான சம்பளமே பட்டுவாடா செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முழு நேரம் உழைக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தற்போதைய சம்பளத்தை வழங்கியாக வேண்டும், ஆனால் வேலைபார்க்க முடியாதவர்களைப் பொருத்தவரையில் “எல்லா தொழிலாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமற்றது” என்று மனிதவள அமைச்சக அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

அதற்குப் பதிலாக தொழிலாளர்களும் முதலாளிகளும் “பொருத்தமான சம்பள ஏற்பாடுகள் குறித்துப் பேசி பரஸ்பரம் ஒப்புக்கொள்வது நல்லதாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் உறுதி அளித்துள்ளது – 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு தொழிலாளருக்கும், குறைந்தபட்சம் 6 சதுர மீட்டர் அளவில் தனிப்பட்ட தங்கும் இட வசதி அளிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

பொது அறைகளில் அதிகபட்சம் 10 படுக்கைகள் இருக்கலாம் – அவை குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.

“நோய்த் தொற்று காலத்திற்கு முன்பே அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி பல அமைப்புகள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளன” என்று பேராசிரியர் தத்தா தெரிவித்தார். டார்மிட்ரிகளில் நிலைமை இவ்வளவு மோசமாகப் போகும் அளவுக்கு எப்படி கவனிக்கப்படாமல் போனது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

டார்மிட்ரிகளில் வாழ்க்கை நிலை குறித்த புகார்களை “ஒதுக்கிவிட முடியாது” என்று பிரதமர் லீ சியன் லூங் ஒப்புக்கொள்கிறார். ஆனால் “பொதுவான தங்கும் இடங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும், ஆபத்து வாய்ப்புகள் இருக்கவே செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் தீவிரப்படுத்தி உள்ளோம். ஒருசமயம் வரையில் அது போதுமானது என்பதாக இருந்தது. ஆனால் டார்மிட்ரிகளில் புதிய குழுக்களாக நிறைய பேர் வந்து தங்கிய போது அச்சுறுத்தல் அதிகரித்துவிட்டது” என்று நாடாளுமன்றத்தில் இந்த மாத ஆரம்பத்தில் பேசியபோது அவர் கூறினார். குடிபெயர்ந்த தொழிலாளர் பிரச்சினைக்கு சிறிதளவே முக்கியத்துவம் பெற்றிருந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆற்றிய உரையாக அது இருந்தது.

சில நடவடிக்கைகள் தவறானவையாக இருந்தன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “போரின் புகை படர்ந்துள்ள சூழ்நிலையில், மிகச் சரியான முடிவுகளை மட்டுமே எப்போதும் எடுக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை” என்று கூறி அவர் முடித்தார்.

சிங்கப்பூரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு டார்மிட்டரி.

டார்மிட்டரிகளில் தங்கியிருக்கும் எல்லா தொழிலாளர்களும் குணம் அடைந்துவிட்டனர் அல்லது கோவிட்-19 தாக்குதல் இல்லை என்று மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என்று கடந்த மாதம் அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் அடுத்த சில வாரங்களில், சில டார்மிட்ரிகளில் புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்கள் கண்டறியப் பட்டுள்ளன.

தம்மை வெளியில் செல்ல எப்போது அனுமதிப்பார்கள் என ஜாகிருக்கு தெரியவில்லை. திரும்பவும் வேலைக்குச் செல்லும் சூழல் அற்பட வேண்டும் என்பது தான் அவருடைய மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. சிங்கப்பூரில் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“நாங்கள் பல ஆண்டுகளை இங்கே கழித்துவிட்டோம். நான் 17 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன் – சிங்கப்பூரின் ஓர் அங்கமாக மாறிவிட்டதைப் போல இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

“குடிமக்களைப் போல நடத்துங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. நாங்களும் சமூகத்தில் ஓர் அங்கம். மனிதர்களை நடத்துவதைப் போல எங்களையும் நடத்துங்கள். அந்த நிலை வந்தால், மிகவும் நல்லதாக இருக்கும்” என்று ஜாகிர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »