Press "Enter" to skip to content

வைட்டமின் டி: கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள உதவுமா?

மனிதர்களின் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின்-டி உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் இதற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். எனவே, கோவி 19 நோயை எதிர்த்துப் போராட இதுவும் உதவலாம்.

வைட்டமின் – டி என்றால் என்ன?

”வெயில் மூலம் கிடைக்கும் விடமின்” என்று பொதுவாக அறியப்படுகிறது வைட்டமின் – டி. ஏனென்றால், நம் உடலில் வெயிலில் படுபோது, அது சுறக்கும் ஒரே விடமின் இதுவே.

ஆய்வுகளின் அடிப்படையில், இந்த விடமின் நம் உடலுக்குள் சென்றவுடன், உடல் அதிகமாக கேல்ஷியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை உள்வாங்க பெருமளவில் உதவுவதாகவும், இந்த சத்துகள் பற்கள், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகின்றன என்றும் கூறப்படுகிறது.

எலும்புகள் மிருதுவாகி, வலுவிழக்கும் சூழலுக்கு தள்ளக்கூடிய ரிக்கெட்ஸ், ஆஸ்டியோமலாசியா உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வைட்டமின் – டி குறைபாட்டே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

வைட்டமின் டி

பட மூலாதாரம், Getty Images

இந்த ஊட்டச்சத்தில் இதைவிட அதிகமான நலன்கள் இருப்பதாக கூறுகிறார், அயர்லாந்திலுள்ள கோர்க் பல்கலைக்கழகத்தின் ஊட்டசத்து மற்றும் எலும்புகள் ஆரோக்கியம் குறித்த பேராசிரியரான கெவின் கேஷ்மேன். இந்த ஊட்டச்சத்தில் குறைபாடு ஏற்பட்டால், இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட, நோய்த்தொற்று, வீக்கம் உள்ளிட்டவற்றால், மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது” என்கிறார்.

“கடந்த 20ஆண்டுகளில், மனிதர்களின் எலும்புப்பகுதியையும் தாண்டி, வைட்டமின் – டி உடல்நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.”

கோவிட் 19 உடன் போராடுமா?

மிகவும் குறைவாக அளவு வைட்டமின் – டி குறைபாடு ஏற்பட்டாலும், ”நம் உடலில், இதயநோய், நீரிழிவு நோய், சில வகை புற்றுநோய்கள், தொற்று மூலம் வரும் நோய்கள் ஆகியவை உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்தும்” என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்வதாக கூறுகிறார் பேராசிரியர் கெவின்.

ஆனால், வைட்டமின் – டி மற்றும் கோவிட் 19க்கு இடையே ஏதும் தொடர்பு உள்ளதா?

”வைட்டமின் – டி குறைபாட்டிற்கும், கோவிட் 19 தாக்கத்தால் உடல்நலன் எவ்வாறு செல்கிறது என்ற பாதைக்கும் நிச்சயமாக ஒரு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.” என்று சில அறிவியல் ஆய்வுகள் தெரிவிப்பதாக பேராசிரியர் கெவின் தெரிவிக்கிறார். ஆனால், ”நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளவோ, நோய்கான சிகிச்சையின் போதோ, வைட்டமின் – டி குறைப்பாட்டை சரிசெய்வதற்கான மருந்துகளை பரிந்துரைக்கும் அளவிற்கு இந்த ஆதாரங்கள் இல்லை என்பதையும் அவர் கூறுகிறார்.

வைட்டமின் டி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த ஆய்வு சரியான பாதையில்தான் செல்கிறது என்றும், ”உலகில் வைட்டமின் – டி குறைபாடு எவ்வளவு பெரிய விஷயமாக உள்ளது என்பதை பெருந்தொற்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

“பொதுவான எண்ணம் என்னவென்றால், இதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் இல்லை என்பதே. ஆனால் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. புது ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. கோவிட் 19 வந்து ஒரு வருடம் மட்டுமே ஆகிறது. அதிக தரவுகள் கிடைக்க இன்னும் நாட்கள் ஆகும்.”

”இது எங்கு சுவாரஸ்யம் ஆகிறது என்றால், சுவாச நோய், சளி உள்ளிட்ட நோய்கள் உருவாக, வைட்டமின் -டி குறைபாடும் காரணம் ஆகிறது என்று எடுத்துகொள்ளும்போது தான். எலும்பு பிரச்னைகளுக்கு வைட்டமின் -டி தேவை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், இது, சுவாசம் சம்மந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும் நேர்மறையான தாக்கத்தை அளிக்கவோ உதவுகிறது என்னும்போது, இது நமக்கு கூடுதல் லாபம் தானே.”

வைட்டமின் -டி எங்கு கிடைக்கிறது?

பேராசிரியர் கெவினை பொருத்தவரையில், வைட்டமின் – டி கிடைக்க முக்கிய காரணம் சூரியன். ஆனால், அதன் முழு தரம் என்பது, உங்களில் தோலைச் சார்ந்தும் உள்ளது. இது, நீங்கள் பூமியில், எந்த பகுதியில் எந்த சூழலில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் மாறும்.

பொதுவான விஷயம் என்னவென்றால், நீங்கள் பூமத்திய ரேகைக்கு அருகில் வாழ்ந்தால், சூரியக்கதிர்கள் அதிகம் கிடைக்கும், இதனால் உங்களுக்கு அதிக வைட்டமின் – டி கிடைக்கும் என்பதே. அப்படி இருந்தாலும், இந்தியா, ஆஃப்ரிக்கா போன்ற நாடுகள்தான் வைட்டமின் -டி குறைப்பாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எது எதனால்?

“அதற்கு கலாசார காரணங்களும், மத ரீதியான விஷயங்கள், உடை, ஒரு மனிதர் பகல் நேரத்தில் வரும் வெயிலின் வெப்பம் காரணமாக வீட்டிற்குளேயே இருப்பதும், நகரங்களில் சுற்றுச்சூழல் மாசுபாடு சூரியக்கதிர்களை மறைப்பதும்கூட காரணமாக அமையலாம்.” என்கிறார் பேராசிரியர் கெவின். ஒருவரின் தோலின் நிறமும் இதற்கு காரணம் ஆகலாம் என்கிறார். ஐரோப்பியன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் வெளியிட்ட தரவுகளில், ஐரோப்பாவில் வாழும் 12% பேருக்கு வைட்டமின் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. “இந்த அளவு, அங்குள்ள சில இனக்குழுக்களுக்கிடையே இரு மடங்கு, சில நேரங்களில் மூன்று மடங்காகவும் உள்ளது.” தோலில் இருக்கும் மெலனின், சூரிய கதிர்கள் வருவதை அது தடுக்கிறது என்பதே காரணம்.

நம் உணவில் கிடைக்கும் வைட்டமின் -டி

வைட்டமின் டி

பட மூலாதாரம், Getty Images

மீன், சிவப்பு இறைச்சி, முட்டைக்கறு மற்றும் பால் வகை பொருடகளிலிருந்து நமக்கு வைட்டமின் – டி கிடைக்கிறது. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு, உணவின்மூலமாக, வைட்டமின் – டி பெறிவது சிரமமான விஷயமாகும்.

”வைட்டமின் –டி சத்துள்ள உணவுகள் பெரும்பாலும், மிருகங்கள் மூலம் கிடைக்கும் கிடைக்கின்றன, பயிர்கள் மூலம் அவை கிடைப்பதில்லை என்ற பொதுவான கருத்து உள்ளது. அப்படியென்றால், காய்கறிகளை மட்டும் சாப்பிடும் பழக்கமுள்ள மக்களுக்கு, குறிப்பிட்ட வகையான உணவுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லாத மக்களுக்கும், வைட்டமின் – டி குறைபாடு ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.” என்கிறார் அவர்.

இதுதான் மங்கோலியாவின் நிலை. பிபிசியின் தி ஃபூட் செயின் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட தரவில், அந்நாட்டில் 70-80% பெரியவர்களும் 90% குழந்தைகளும் வைட்டமின் –டி குறைபாடுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

”பலவீனமான சமூகத்தில் வாழும் மக்களுக்கு, வைட்டமின் –டி சத்துள்ள உணவுகள் மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளன” என்கிறார், மங்கோலியாவில் கிரிஸ்டீனா நோபல் குழந்தைகளுக்கான அறக்கட்டளையை நிர்வகிக்கும் அமாரா போர்.

அரசு, நாட்டில் உணவில் பெரும்பாலும் சேர்க்கப்படும் கோதுமை மாவில் வைட்டமின் – டி –யை சேர்க்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம், அனைத்து மக்களுக்கு ஊட்டச்சத்து போய் சேர்வதை உறுதி செய்ய முடியும் என்கிறது.

வைட்டமின் –டி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதா?

வைட்டமின் டி

பட மூலாதாரம், Getty Images

தினமும் 10 மைக்ரோ கிராம் அளவு வைட்டமிண்டி நம் உடலுக்கு தேவை என்பதை பெரும்பாலான பொது சுகாதார அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், 100 மைக்ரோ கிராம்களுக்கு மேல் இது போனால், உடலுக்கு ஆபத்தாக அமையும். இவ்வாறு வைட்டமின் –டி அதிகமாகினால், உடலில் எலும்புகள் பாதிக்கப்படும், கிட்னி மற்றும் இதயத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

“வைட்டமின் –டி ஊட்டச்சத்தை அளிக்கக்கூடிய சப்ளிமெண்ட் உணவுகளை நீங்கள் எடுத்துக்கொண்டாலோ, அத்தகைய மாத்திரைகளை நீங்கள் அதிகம் உண்டாலோ இவ்வாறு ஆகலாம்.” என்கிறார் பேராசிரியர் கெவின்.

ஆனால், உணவின் மூலம் இவ்வாறு நடப்பது கடினம், ஏனென்றால், உணவில் இதன் அளவு மிகவும் மிதமாகவே இருக்கும்.”

உங்களுக்கு வைட்டமின் –டி கிடைக்க வேறென்ன வழிகள் உள்ளன?

வைட்டமின் டி

பட மூலாதாரம், Getty Images

வைட்டமின் மாத்திரைகள் அல்லது சப்ளிமெண்ட் பொடிகளை எடுத்துக்கொள்வது ஒரு வழி என்றாலும், அது உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு விலை உயர்ந்த ஒரு வழியாகும்.

“வைட்டமின் –டி கிடைக்க மாற்றுவழி நம் உணவில்தான் உள்ளது. நாம் தினமும் சாப்பிடும் உணவில் அதை சேர்த்துக்கொள்ள வேண்டும்.” என்கிறார் கெவின்.

இந்த முறைக்கு ஃபோர்ட்டிபிகேஷன் என்று பெயர். கடந்த 80 ஆண்டுகளாக பல நாடுகளில் இது கடைபிடிக்கப்படிகிறது. ஊட்டச்சத்து குறைப்பாடு குறித்த நிபுணர்கள் பலரும், வைட்டமின் –டி குறைபாட்டை கையாள உலகளவில் இதை ஒரு சிறந்த வழியாக பார்க்கிறார்கள்.

வைட்டமின் டி

பட மூலாதாரம், Getty Images

நாம் வாழும் ஊரிற்கு ஏற்றதுபோல உணவில் மாற்றம் இருக்கலாம் என்றாலும், உணவில் பால் அல்லது பயிர்களின் அடிப்படையில் கிடைக்கும் பால், பழச்சாறுகள், தயிர், கோதுமைமாவு, எண்ணெய், முட்டை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம். நாட்டில் உள்ள வைட்டமின் –டி குறைபாட்டின் அடிப்படையில், எந்த அளவிற்கு உணவில் வைட்டமின் –டி சேர்க்கப்பட வேண்டும் என்பதை உணவு நிறுவனங்களே முடிவு செய்துகொள்ள அரசு கூட அனுமதி அளிக்கலாம் அல்லது, அரசே அதற்கான திட்டத்தை உருவாக்கிக் கொடுக்கலாம். தற்போது, குறைவான சூரிய வெளிச்சம் கிடைக்கும் நாடுகளில், கனடா மற்றும் ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் மட்டுமே இத்தகைய வைட்டமின் –டி ஃபோர்ட்டிபிகேஷன் திட்டத்துடன் செயல்படுகிறது.

“நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ற கவலை இல்லாமல், உணவின் மூலமாக, மக்களுக்கு வைட்டமின் –டி சத்து பெரும்பான்மையான மக்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.” என்கிறார் ஃபின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கிரிஸ்டெல் லாம்பெர்க் என்ற பேராசிரியர். இவர், அந்நாட்டு அரசுடன் இணைந்து வைட்டமின் –டி சத்தை மக்களிடையே அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பெருந்தொற்று, ஃபின்லாந்து போன்ற நாடுகள் பயன்படுத்தும் திட்டத்தை மற்ற நாடுகளும் எடுத்து நடத்தும் எண்ணத்தை ஊக்குவிக்கும் என்று பேராசிரியர் கெவின் நினைக்கிறார்.

வைட்டமின் டி

பட மூலாதாரம், Getty Images

கோதுமை மாவில் வைட்டமின் –டியை சேர்ப்பது அவ்வளவு விலை உயர்ந்த விஷயமல்ல என்கிறார் அவர். ஆனால், மிகவும் வலுவான ஊட்டச்சத்துடன் வாழும் ஒரு பெரிய மக்கள் சமுதாயம் இதன்மூலம் கிடைக்கும் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு, ஜெர்மனியில் இந்த ஃபோர்ட்டிபிகேஷன் முறை குறித்து எடுக்கப்பட்ட தரவில், ரொட்டியில் வைட்டமின் –டி சேர்க்கப்படுவதன்மூலம், 65 வயதிற்கும் மேற்பட்ட பெண்களிடையே எலும்பு முறிவதை 10 சதவிகிதத்திற்கு மேல் இது குறைப்பதாகவும், சுகாதாரத்துறைக்கு இதன்மூலம் ஆண்டென்றிற்கு 380 மில்லியன் டாலர்கள் லாபம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

“இந்த வகை சேமிப்பு என்பது பெரிய எண்ணிக்கையாக உள்ளது.” என்கிறார் பேராசிரியர் கெவின் கேஷ்மேன்.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »