Press "Enter" to skip to content

ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்?

  • சாரா ரெய்ன்ஸ்ஃபோர்டு
  • பிபிசி நியூஸ், ரஷ்யா

ரஷ்யாவின் குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ளது ஸ்புட்னிக் எனும் கிராமம். இந்த கிராமத்தில் ரஷ்யா உள்நாட்டிலேயே தயாரித்த ஸ்புட்னிக்-V தடுப்பூசியை தாங்கள் வழங்க உள்ளதாக அதிகாரிகள் அறிவித்த பின்பு, அதைத் தங்கள் உடலில் செலுத்தி கொள்ள ஓய்வூதியம் பெற வெறும் 28 பேர் மட்டுமே உள்ளூர் மருத்துவ மையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

ஸ்புட்னிக்-V தடுப்பூசி கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு எதிராக 91.6% செயல்திறன் கொண்டது என்று லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் தரவுகள் வெளியிடப்பட்ட பின்னர் இந்த ரஷ்ய தடுப்பூசிக்கு உலகெங்கிலும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் உலகெங்கிலும் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசிகளுள் அதிக செயல்திறன் மிக்க தடுப்பூசிகளில் ஒன்றாக ஸ்புட்னிக்-V உள்ளது.

தாங்கள் உருவாக்கிய தடுப்பூசி குறித்து ரஷ்ய அரசு மிகவும் பெருமையாகப் பேசினாலும் இந்த தடுப்பூசியை மேற்கத்திய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்துடன்தான் பார்த்தன.

ஆனால் இதன் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக லேன்செட் சஞ்சிகையில் ஆய்வுக்கட்டுரை வெளியான பின்பு இது ரஷ்யாவுக்கு அரசியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் ஒரு வெற்றியாக அமைந்தது.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஸ்புட்னிக் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மும்முரம் காட்டி வந்தாலும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ரஷ்யர்கள் அவ்வளவு ஒன்றும் ஆர்வம் காட்டவில்லை.

“இது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும் என்று அனைவரும் எனக்கு அச்சமூட்டினார். ஆனால் அப்படி எதுவுமே இல்லை,” என்று இக்கிராமத்தில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு ஓய்வூதியதாரர் ஒருவர் தெரிவிக்கிறார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அவர் இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு சில நாட்களுக்கு மது அருந்தக் கூடாது என்று அங்கிருந்த செவிலியர் ஒருவர், இன்னொரு ஓய்வூதியதாரர் காதில் கூறிக்கொண்டிருந்தார்.

ஸ்புட்னிக் கிராமம், ஸ்புட்னிக்-V தடுப்பூசி

ஸ்புட்னிக் கிராமம் தலைநகர் மக்கள் விரும்பத்தக்கதுகோவில் இருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் இருக்கிறது.

அங்கு ஒரு கால்நடைப் பண்ணையும் ஒரே மாதிரியான தோற்றமுடைய சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன.

சோவியத் கால விண்கலமான ஸ்புட்னிக் எனும் பெயர் இந்த கிராமத்துக்கு ஏன் சூட்டப்பட்டது என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

ஆனால் இந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக் என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு காரணமிருக்கிறது.

Galina Bordadymova

“1957இல் ஏவப்பட்ட ஸ்புட்னிக் செயற்கைக்கோள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இந்த தடுப்பூசியும் அப்படிப்பட்ட ஒன்றுதான்,” என்று அந்த கிராமத்தில் இருக்கும் அரசு அலுவலரான கலினா போர்தாடிமோவா சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

25 பேருக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்றுதான் நாங்கள் தொடக்கத்தில் திட்டமிட்டோம் ஆனால் இப்போது 28 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் அவர்.

ஆனால் ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும் அந்த கிராமத்தில் வெறும் 28 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வந்திருப்பது கவலைக்குரிய விஷயம் அல்ல என்று அவர் அந்த கூற்றையே நிராகரிக்கிறார்.

கலினாவின் குழுவினர் கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள முதியவர்களை முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.

மேற்கத்திய நாடுகள் – புவி அரசியல்

ஸ்புட்னிக்-V தடுப்பூசியை ரஷ்யா அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மேற்கத்திய வல்லுநர்கள் அதன் செயல் திறனை நம்ப மறுத்தனர்.

ஆனால் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் இந்த தடுப்பூசி அதிக செயல்திறன் கொண்டது என்பதை நிரூபித்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை ஒத்த பக்க விளைவுகளையே ஸ்புட்னிக்-V தடுப்பூசியும் கொண்டிருந்தது.

இதன் பின்பு சர்வதேச நாடுகளும் இந்த தடுப்பூசி மீது அதிக ஆர்வம் காட்டத் தொடங்கின.

“எங்களை விமர்சிப்பவர்களுக்கு கூட இப்பொழுது வாதிட எதுவுமில்லை,” என்று ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு நிதி வழங்கி வரும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரியேவ் கூறியுள்ளார்.

மார்ச் மாத நிலவரப்படி ஸ்புட்னிக்-V தடுப்பூசி வேண்டும் என்று 39 நாடுகள் ரஷ்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளன.

Pop-up vaccination clinic in a Moscow shopping mall

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதால் அங்கும் இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளது ரஷ்யாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே அவசரகால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக்-V தடுப்பூசியை முதன்முதலில் அங்கீகரித்த நாடு ஹங்கேரி.

அதன் பின்பு ஸ்லோவாகியா, சுமார் 2 லட்சம் தடுப்பூசிகளை வாங்கியது.

ரஷ்யா தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்வதற்கான கருவியாக ஸ்புட்னிக்-V தடுப்பூசியை பயன்படுத்தும் எனும் கூற்றை நிராகரிக்கும் வகையில் இந்த நாடுகள் செயல்பட்டன.

புவி அரசியலைப்பற்றி கோவிட்-19 தொற்று கவலைப்படுவதில்லை என்று ஸ்லோவாக்கியாவின் பிரதமர் இகோர் மாட்டோவிச் தெரிவித்தார்.

தற்போது இருக்கும் தங்களது உற்பத்தி திறனை விட அதிகமான அளவிலேயே தங்களுக்கு ஸ்புட்னிக்-V வேண்டும் என்ற கோரிக்கைகள் வருவதாக ரஷ்ய அரசு கூறுகிறது.

உள்நாட்டில் தயாராகும் தடுப்பூசிகள் ரஷ்ய மக்களுக்கு மட்டுமே. வெளிநாடுகளில் இருக்கும் உற்பத்தி மையங்கள் மூலம் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

ஆனால் அது குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் காலக்கெடு ஆகியவை குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

விளாடிமிர் புதினுக்கு ஒரு வாய்ப்பு

“ரஷ்யா ஒரு முன்னேறிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதையும் திறன் மற்றும் தொழில்நுட்பம் அதிகம் தேவைப்படும் துறைகளில் தங்களால் வெற்றி பெற முடியும் என்பதையும் நிரூபிக்க இந்த தடுப்பூசி ரஷ்ய அதிபர் புதினுக்கு ஒரு வழியாக அமைந்துள்ளது என்று ஆர்.பொலிடிக் எனும் பகுப்பாய்வு நிறுவனத்தைச் சார்ந்த தாஷியானா ஸ்டெனோவாயா கூறுகிறார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்துமே இந்த தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்படுவது கடினமானதுதான்.

A staff member at the entrance to a temporary Covid-19 vaccination site in the Gagarinsky shopping and leisure centre

பட மூலாதாரம், Getty Images

“ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பயன்படுத்த நீங்கள் ஒப்புதல் அளிப்பது என்பது, விளாடிமிர் புதினை தனிப்பட்ட அளவிலும் அவரது ஆட்சி நிர்வாகத்திற்கும் ஒப்புதல் அளிப்பதாகவே பொருள்படும்,” என்று அவர் கூறுகிறார்.

இந்த சர்வதேச புவி அரசியல் குறித்த விவாதங்கள் எதுவும் ஸ்புட்னிக் கிராமத்தில் எழவில்லை.

அங்கு குடியிருக்கும் சிலருக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சம் கடுமையாக நிலவுகிறது. இந்த கிராமத்தில் 50 வயதை கடந்த இருவர் கொரோனாவின் முதல் அலையில் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும் கூட தங்கள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அந்த கிராமத்தில் இருக்கும் அனைவரும் ஆர்வம் காட்டவில்லை.

விரும்பாத ரஷ்யர்கள்; வேகம் காட்டாத அரசு

மார்ச் மாதத் தொடக்கத்தில் லெவேடா சென்டர் எனும் சமூகவியலாளர்கள் அமைப்பு ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் 30 சதவிகித ரஷ்யர்களே தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்று தெரியவந்தது.

இதன் பாதுகாப்பு தரவுகள் வெளியிடுவதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் போது கூட 38% பேர் இதை செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர்.

“மக்கள் அச்சமாக உள்ளனர்; பின்விளைவுகள் குறித்து அனைத்து விதமான வதந்திகளும் வலம் வருகின்றன,” என்று கூறுகிறார் சமீபத்தில் கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட லிடியா நிக்கோலேவ்னா.

அவருக்கு உடனடியாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி தேவையில்லை என்று அவரது மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

“இது நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள்; ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாமே சரியாக நடக்கும் என்றால் இன்னும் நிறைய பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வருவார்கள்,” என்கிறார் லிடியா.

“ரஷ்யர்கள் மிகவும் பழமைவாதிகள். அவர்கள் அரசை நம்ப மாட்டார்கள். இந்த அரசிடம் இருந்த எது வெளிவந்தாலும் அதை முழுமையாக நம்ப மாட்டார்கள்,” என்று அந்த ஊரைச் சேர்ந்த ஆண்டெரி குர்துனோவ் கூறுகிறார்.

தேசிய பொது முடக்கம் குறித்தும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மரணங்கள் குறித்தும் பெருமளவிலான செய்திகள் அங்கு வெளியாவதில்லை.

ஆறு மாத காலத்தில் ரஷ்யாவில் இருக்கும் வயது வந்தவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு ஸ்புட்னிக்-V தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது.

எனினும் மார்ச் மாதம் தொடக்கம் வரை சுமார் 40 லட்சம் ரஷ்யர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தது.

தற்போதைய சூழலில் பற்றி தடுப்பூசியின் உற்பத்தியும் தட்டுப்பாடும் ஒத்திசைந்து இருப்பதாக ரஷ்ய அரசு கூறி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »