Press "Enter" to skip to content

தங்கம் விலை பற்றி யோசிக்காமல் வாங்க வேண்டியது ஏன் அவசியம்? ஆனந்த் ஸ்ரீனிவாசன் பதில்

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தைப் பொறுத்தவரை அடுத்த 18-24 மாதங்களில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. அதே விலை நீடிக்கும். அல்லது சிறிய அளவில் சரியலாம். ஏனென்றால் அமெரிக்காவில் பணவீக்கம் காணப்படுகிறது என்கிறார் பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

2022ல்தான் ஜெரோம் பவுலை மீண்டும் ஃபெடரல் வங்கியின் ஆளுநராக நியமிப்பதா இல்லையா என்பதை ஜோ பைடன் முடிவுசெய்வார். அதுவரை வட்டி விகிதத்தில் பெரிய மாற்றம் இருக்காது.

இப்போது ஒவ்வொரு மாதமும் 120 பில்லியன் டாலர்களை அமெரிக்கா தற்போது அச்சிட்டு வருகிறது. அதைக் குறைப்பார்கள். வட்டியை அதிகரிப்பார்கள். அந்தத் தருணத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்.

இதற்கிடையில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு குறைந்து, ஒரு டாலருக்கு 80 என்ற அளவுக்கு சரியும் வாய்ப்புகள் இருக்கின்றன. மாறாக, இதே மதிப்பில் நீடித்தால் தங்கத்தின் விலை குறையும்.

ஆனந்த் ஸ்ரீநிவாசன்

பட மூலாதாரம், Anand Srinivasan facebook page

ஆனால், இதெல்லாம் வெகு நாட்களுக்கு நீடிக்காது. ஆகவே, ஒரு சிறிய விலை இறக்கத்திற்குப் பிறகு தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பிக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்யும்படி திரும்பத் திரும்பச் சொல்வது ஏனென்றால், நெருக்கடியான தருணங்களில் அதுதான் கைகொடுக்கும். இப்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் கைகொடுத்தது தங்கம்தான். பல மத்திய தர குடும்பத்தினர், தங்கத்தை அடகு வைத்தே செலவுகளைச் சமாளித்தனர்.

இப்போது ஒரு கிராமிற்கு 3,500 ரூபாய் தருகிறார்கள். உங்களிடம் 400 கிராம் தங்கம் இருந்தால், 15 லட்ச ரூபாய் வரை கிடைக்கலாம். வேலைக்குச் செல்ல முடியாவிட்டால்கூட, மூன்றாண்டுகளுக்கு வீட்டிலிருந்தபடியே சமாளிக்கலாம்.

மூன்றுவிதமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஒன்று கணினி மயமான தங்கம். அடுத்ததாக, கூகுள், பேடிஎம் மூலம் வாங்குவது, அடுத்ததாக அரசின் கோல்டு பாண்டுகள். இதில் அரசின் கோல்ட் பாண்டுகளில் போட்ட முதலீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. பங்குச் சந்தையில் விற்கலாம் என்றாலும், 15- 20 சதவீதம் குறைவாகத்தான் விற்க முடியும். அந்த பாண்டை அடகு வைக்க முடியும் என்றாலும் அதில் சிரமங்கள் இருக்கின்றன. இதனால், அரசின் கோல்ட் பாண்டுகளைத் தவிர்க்கலாம்.

தங்கம் வாங்க வேண்டியது ஏன் அவசியம்? ஆனந்த் ஸ்ரீனிவாசன் பதில்

பட மூலாதாரம், Getty Images

அடுத்ததாக, பேடிஎம், கூகுள் போன்றவற்றின் மூலம் வாங்கப்படும் தங்கம். இப்படி வாங்கிவிட்டு தங்கமாகப் பெறப்போனால், வரி அதிகம், இழப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே, நமக்குத் தெரிந்த வழியில் தங்கத்தை வாங்கி வைப்பது சிறந்தது. அல்லது டிமேட் மூலமும் தங்கத்தை வாங்கலாம்.

தங்கத்தில் வேறு எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம், ஏன் செய்ய வேண்டும், இதில் எந்த அளவு வரி விதிக்கப்படும் என்பதெல்லாம் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் அளிக்கும் ஆலோசனைகளை இங்கே முழுமையாகக் காணலாம்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »