Press "Enter" to skip to content

6 மாதத்தில் அரைக்கிலோ எடையில் பிறந்த குழந்தைகள் தற்போது எப்படி உள்ளனர்?

என் மகள் பிறந்தபோது, அவள் உள்ளங்கையை விட சின்னவளாக இருந்தாள். என் மகளை முதன்முறையாகப் பார்த்தபோது அவள் கண்கள் திறந்திருந்தன. அவள் உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கையை அது எனக்கு அளித்தது என்கிறார் ஷிவன்யாவின் தாய் உஜ்வலா.

ஜியானா உயிர் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அவளுக்கு இப்போது நான்கு வயதாகிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் அவளை ஒரு சாதாரண குழந்தை போலவே வளர்த்து வருகிறேன் என்று ஜியானாவின் தாய் தீனல் கூறினார்.

இரண்டு வெவ்வேறு கருவறைகளில் இருந்து குறைமாதத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளின் கதை இது. அவர்கள் உயிர்வாழ்வது ஒரு அதிசயம் என்றே கருதப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் வசிக்கும் உஜ்வலா பவார், கர்ப்பமான 22வது வாரத்தில் ஷிவன்யாவைப் பெற்றெடுத்தார்.

உஜ்வாலா பவாருக்கு பைகார்னுவேட் கருப்பை இருந்தது. குழந்தையால் அவரது கருப்பையில் முழுமையாக வளர முடியவில்லை. அதன் காரணமாக அவருக்கு விரைவிலேயே வலி தொடங்கியது,” என்று மும்பையில் இருந்து பிபிசியிடம் பேசிய மருத்துவர் சச்சின் ஷா கூறினார்.

உஜ்வலாவுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார். அந்த பிரசவத்தில் அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானபோது அதாவது ஷிவன்யா அவர் வயிற்றில் வந்தபோது பிரச்னைகள் ஆரம்பித்தன.

குழந்தையின் முழு வளர்ச்சி கருப்பையில் நடக்காததால் ஒன்பது மாதங்கள் முடிவதற்கு முன்பே உஜ்வலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

பைகார்னுவேட் கருப்பை என்பதை எளிய வார்த்தைகளில் சொன்னால், கருப்பை இரண்டு குழிகளாக பிரிந்து விடுகிறது. இது அரிதான ஒன்றுதான்.

ஒரு பெண்ணுக்கு பைகார்னுவேட் கருப்பை இருந்தால் பல சமயங்களில் அந்த பெண்ணால் ஒன்பது மாத கர்ப்பத்தை பூர்த்தி செய்ய முடியாது. ஒன்று அவருக்கு கருச்சிதைவு ஏற்படும் அல்லது அத்தகைய பெண்களுக்கு முன்கூட்டியே பிரசவ வலி தொடங்கி பிரசவம் நடந்துவிடும்.

ஒரு பெண்ணுக்கு 28 வாரங்களுக்கு முன்பு பிரசவம் நடந்தால், அத்தகைய நிலை ப்ரீமெச்சூர் அல்லது முன்கூட்டிய பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

உஜ்வலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அல்ட்ராசவுண்டில் குழந்தையின் எடை சுமார் 500 கிராம் இருக்கும் என்று கண்டறியப்பட்டதாகவும் புனேயில் உள்ள சூர்யா மருத்துவமனையில் பிறந்த சிசுக்கள் மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை சேவையுடன் தொடர்புடைய மருத்துவர் சச்சின் ஷா தெரிவித்தார்.

பிறந்த சிசுக்களுக்கு, பிறப்பிற்குப்பின் எழும் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் நியோனேட்டாலஜிஸ்ட் என்று அறியப்படுகிறார்.

சசிகாந்த் பவார் மற்றும் உஜ்வலா தங்கள் மகள் ஷிவன்யாவுடன்.

நம்பிக்கை அளிக்கும் இரண்டு கதைகள்

பிரசவம் நடந்தபோது பெண் குழந்தையின் எடை 400 கிராம் மட்டுமே இருந்தது. அவள் உள்ளங்கையின் அளவை விட சிறியவளாக இருந்தாள். எப்படியாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர்.

“என் மகளைப் பார்த்தபோது அவள் முகம் மட்டுமே தெரிந்தது.அவளது கண்கள் திறந்திருந்தன.அவள் உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கையை அது எனக்கு ஏற்படுத்தியது. எந்த ஒரு எதிர்மறையான உணர்வையும் என் இதயத்திற்குள் நுழைய விடவில்லை. வாழ்க்கையின் மீதான இந்த நேர்மறை உணர்வு எங்களுக்கு உதவியது.” என்கிறார் ஷிவன்யாவின் தாய் உஜ்வலா.

“ஷிவன்யா பிறந்த பிறகு அவளிடம் செல்ல நான் அனுமதிக்கப்பட்டபோது, அவளுடைய சிறிய சுண்டு விரல் என்னைத் தொட்டது. அப்போது நான் உணர்ந்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் மகள் பாதுகாப்பாக இருப்பாள் என்ற உணர்வை அது எனக்கு அளித்தது,” என்று தந்தை சசிகாந்த் பவார் கூறினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் சூரத்தில் ஜியானா 22வது வாரத்தில் பிறந்தார். பிறந்த போது ஜியானாவின் எடை 492 கிராம்.

ஜியானா 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.

தீனல் என்னிடம் வந்தபோது அவரது வாட்டர் பேக் அதாவது Sac கசிந்து கொண்டிருந்தது என்று அகமதாபாத்தை தளமாகக் கொண்ட அர்பன் ந்யூ பார்ன் கேர் செண்டரின் இயக்குநரும் தலைமை நியோனேட்டாலஜிட்டுமான மருத்துவர் ஆஷிஷ் மேத்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

தீனல் இரட்டைக் குழந்தைகளை சுமந்து கொண்டிருந்தார். அவற்றில் ஒன்றின் பேக் கசிந்து கொண்டிருந்தது.

ஜியானாவின் குடும்பத்துடன் மருத்துவர் ஆஷிஷ் மேத்தா

பட மூலாதாரம், DR ASHISH MEHRA

“தீனல் கர்ப்பத்தின் 21 வது வாரத்தில் இருந்தார். அத்தகைய சூழ்நிலையில் இரட்டை குழந்தைகள் பிழைப்பது மிகவும் கடினம். 21வது வாரத்தில் பிரசவம் முடிந்து எந்த குழந்தையும் உயிர் பிழைத்த சந்தர்ப்பம் மருத்துவ வரலாற்றில் இல்லை என்பதால் மகப்பேறு மருத்துவர்களும் கைகளை விரித்துவிட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.

”நானும் பல ஆய்வுகளை மேற்கொண்டேன். அத்தகைய பிரசவத்திற்குப் பிறகு குழந்தை உயிர்வாழும் சாத்தியம் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தினேன்,” என்று ஆஷிஷ் மேத்தா கூறினார்.

தீனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இதற்கிடையில் அவரது 22வது வாரம் நிறைவடைந்தது. தீனல் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என குடும்பத்தினர் விரும்பினர்.

இருப்பினும் 24-வது வாரத்திற்கு முன் பிரசவம் நடந்தால் குழந்தைக்கு கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“எங்கள் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மருத்துவர்களிடம் சொன்னோம். ஒரு குழந்தையை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. அத்தகைய சூழ்நிலையில் அதிக தைரியமும் நிதானமும் தேவை,” என்று தீனல் குறிப்பிட்டார்.
மும்பை மற்றும் சூரத் ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும், 24 வது வாரங்களுக்கு முன்பே குழந்தைகள் பிறந்தன.

அத்தகைய குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்ன?

முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு ஐந்து முதல் பத்து சதவிகிதம் என்று மருத்துவர்கள் சச்சின் ஷா மற்றும் ஆஷிஷ் மேத்தா கூறுகிறார்கள்.

அத்தகைய குழந்தைகளின் மூளையின் சோனோகிராஃபியில் ரத்தக்க்கசிவு காணப்பட்டால் எதிர்காலத்தில் உடல் உறுப்புகள் சரியாக செயல்படாமல் போகும் ஆபத்து அதிகரிக்கிறது.

குழந்தை பிறந்த மூன்று-நான்கு வாரங்களில், குழந்தைக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

கண்கள் வளர்ச்சியடையவில்லை என்றால் கண்பார்வை இழக்கும் ஆபத்து உள்ளது.
காது கேளாமை ஏற்படும் அபாயமும் உள்ளது.

அத்தகைய குழந்தைகளில் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்காது.

செப்சிஸ் ஏற்படும் ஆபத்து

தொற்று ஏற்படலாம்

சிறுநீரக செயலிழப்பு அபாயமும் உள்ளது.

24 வது வாரம் அல்லது அதற்கு முன்னதாகவோ பிரசவம் நடக்கும் போதெல்லாம், குழந்தை அழுவதில்லை மற்றும் உடல் குளிர்ச்சியடைந்து விடுகிறது. இது மிகப்படுத்துதல்போதெர்மியா என்று அழைக்கப்படுகிறது என்று இரு மருத்துவர்களும் கூறுகிறார்கள்.

தற்போது நான்கு வயதாகும் ஜியானா தனது தாயுடன்

பட மூலாதாரம், DINAL

எடைக்கு ஏற்ப உடலில் கொழுப்பு இல்லாதபோது மிகப்படுத்துதல்போதெர்மியா ஏற்படும். உடல் முழு வளர்ச்சியடையாததால் அந்தக்குழந்தைகள் பலவீனமாக இருப்பார்கள்.

அத்தகைய சூழ்நிலையில் குழந்தை இன்குமின்கலவடுக்கு (பேட்டரி)ல் வைக்கப்படும். குழந்தையின் உடல் சூடாக இருக்கும் வகையில் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.

“நுரையீரல், சிறுநீரகம், குடல், இதயம் போன்ற குழந்தைகளின் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கும். சுயமாக சுவாசிக்க முடியாத நிலையில் மூக்கில் (CPAP) என்ற ஒரு முககவசத்தை பொருத்தி பிராண வாயு நேரடியாக நுரையீரலுக்கு வழங்கப்படுகிறது,” என்று மருத்துவர். ஆஷிஷ் மேத்தா கூறினார்.

“குழந்தைக்கு வாய்வழியாக பால் குடிக்க முடியாது. எனவே புரதம், கொழுப்பு சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தொப்புள் வடி குழாய் (umblical catheter) மூலம் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. இதனால் எல்லா ஊட்டச்சத்துக்களும் குழந்தைக்கு கிடைக்கும்,”என்று அவர் விளக்கினார்.

“இதனுடன் வாயிலிருந்து வயிறு வரை ஒரு ரைல்ஸ் குழாயை செருகி பால் ஊட்டப்படுகிறது. மேலும் குழந்தை எப்படி இருக்கிறது என்று கண்காணிப்போம். வயிறு வீங்குகிறதா, வாந்தி ஏற்படுகிறதா என்று கவனிப்போம். இந்த இரண்டு செயல்முறைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.” என்றார் அவர்.

“குழந்தையின் வளர்ச்சி தெரிய ஆரம்பித்து, குழந்தையால் பாலை ஜீரணிக்க முடிகிறது என்று மருத்துவர் திருப்தி அடைந்தால், குழந்தையின் தொப்புள் வடிகுழாய் அகற்றப்படும்,”என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு குழந்தையின் எடையை அதிகரிக்கும் வேலை செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் குழந்தை 11-12 வாரங்களுக்கு இன்குமின்கலவடுக்கு (பேட்டரி)ல் வைக்கப்படுகிறது.
34 வது வாரத்தில் குழந்தையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்த பிறகு, தாயின் பாலை சொந்தமாக குழந்தையால் உறிஞ்ச முடிகிறதா இல்லையா என்பது பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்ய முடிந்தால் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறது.

மூன்று, ஆறு மற்றும் எட்டு மாதங்களில் குழந்தைக்கு வழக்கமான பரிசோதனை செய்யப்படுகிறது.

குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்

ஷிவன்யா பவார்

பட மூலாதாரம், SHASHIKANT PAWAR

ஜியானா சமீபத்தில் தனது நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

”அவள் கை கால்களை உதைக்கிறாள். கத்துகிறாள், சிரிக்கிறாள். அவள் வளர்ந்து வருவதைக் கண்டு குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,”என்று ஷிவன்யாவின் தந்தை சஷிகாந்த் கூறினார்.

”ஜியானாவுக்குப் பிறகு நான் இரண்டாவது முறையாக கரு தரித்தபோது அந்த ஒன்பது மாதங்களை நான் எப்படி பயத்தில் கழித்தேன் என்று என்னால் விவரிக்க முடியாது. ஜியானாவை சாதாரண குழந்தை போல வளர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாங்கள் அதைத்தான் செய்கிறோம். ஜியானா இப்போது ஒரு அக்கா ஆகிவிட்டாள். தங்கையை நன்றாக கவனித்துக்கொள்கிறாள். எப்போதும் மனம் தளரக் கூடாது என்பதையே நான் சொல்ல விரும்புகிறேன்,” என்று ஜியானாவின் தாய் தீனல் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »