Press "Enter" to skip to content

பெண்கள் டி20 இந்தியா – பாகிஸ்தான்: ஜெமிமா, ரிச்சா அதிரடியில் இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம், Mike Hewitt/Getty

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 19வது சுற்றில் 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 4 மட்டையிலக்கு இழப்புக்கு 149 ஓட்டத்தை எடுத்திருந்தது. ஆனால், இரண்டாவது விளையாடிய இந்திய அணி 19வது ஓவரின் முடிவில் 3 மட்டையிலக்குடுகளை மட்டுமே இழந்து 151 ஓட்டத்தை எடுத்து வெற்றிக் கோட்டை தொட்டது. அதிரடியாக விளையாடிய இந்திய பேட்ஸ்வுமன் ஜெமிமா ரோட்ரிகியூஸ் 19வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி விளாசி அணியை வெற்றிக் கோட்டுக்கு இட்டுச் சென்றார்.

இந்திய மட்டையாட்டம் வரிசையில் ஜெமிமா ரோட்ரிகியூஸ் 38 பந்துகளில் 53 ஓட்டத்தை குவித்து ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 31 ஓட்டத்தை எடுத்தார். இருவரும் இணைந்து 4வது மட்டையிலக்குடுக்கு 58 ஓட்டத்தை குவித்தது இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான்

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் எடுத்த ஸ்கோரும் நல்ல எண்ணிக்கையாகவே தோன்றியது. ஆனால், ஆட்டத்தின் இறுதியில் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃப் கூறியதுபோல பாகிஸ்தான் பௌலிங் வலுவாக இல்லாததால் அவர்கள் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃப்

பட மூலாதாரம், Matthew Lewis-ICC/getty

ஆனால், உண்மையில் ஸ்கோர் போர்டு காட்டுவதைப் போல இந்த போட்டி இந்தியாவுக்கு மிக எளிதான போட்டியாக இல்லை என்ற கருத்தையும் கிரிக்கெட் வல்லுநர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

பாகிஸ்தான் மட்டையாட்டம்கை பார்த்தபோது, முதலில் பேட் செய்வது என்ற முடிவு சரி என்றே தோன்றியது. அந்த அணித்தலைவர் பிஸ்மா அபாரமாக விளையாடி 55 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்திருந்தார். நசீம் 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் ராதா 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 மட்டையிலக்கு வீழ்த்தி சிறப்பான பௌலராக மிளிர்ந்தார்.

இந்தியாவுக்கு சிறந்த தொடக்கம்

வெற்றிக்கு 150 ஓட்டங்கள் வேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் நல்லவிதமாக இருந்தது. வேகமாக ஓட்டங்கள் வரத் தொடங்கின. ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்தில் யாஷிகா பாட்டியா அவுட் ஆனார். அப்போது அவர் 20 பந்துகளில் 17 ஓட்டத்தை அடித்திருந்தார். இந்த மட்டையிலக்கு இழப்புக்குப் பிறகும் இந்திய ஓட்டத்தை குவிப்பில் தொய்வோ, தயக்கமோ ஏற்படவில்லை. தொடர்ந்து நல்ல ஷாட்களை அடித்தார்கள் களத்தில் இருந்த இந்திய பேட்ஸ்வுமன். பவர் பிளேயில் இந்திய அணி 43 ஓட்டங்கள் ஸ்கோர் செய்தது. இதன் பிறகு, இந்தியாவின் இன்னொரு ஓப்பனரான ஷெஃபாலி வர்மா 10வது சுற்றில் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் அவுட் ஆனார். அவர் 25 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இந்திய வீரர் ரிச்சா கோஷ் அடித்த ஒரு ஷாட்

பட மூலாதாரம், Mike Hewitt

அடுத்து களமிறங்கிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் 12 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜெமிமா, ரிச்சா ஆட்டம் தொடங்கியது. மீண்டும் மட்டையிலக்கு விழ அனுமதிக்காத இந்த இணை இந்தியாவை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றது.

யார் இந்த ஜெமிமா ரோட்ரிகியூஸ்?

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்வுமன். (அதுதான் தெரியுமே என்கிறீர்களா…?) களத்தில் மட்டையை சுழற்றுவது மட்டுமின்றி ஹாக்கி ஸ்டிக்கால் கோலும் அடிப்பவர்.இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நம்பகமான பேட்ஸ்வுமன்களில் ஒருவரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தவர்.

அவர் 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதே ஆண்டில் இலங்கைக்கு எதிரான டி 20 தொடரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்தப் போட்டிக்கு முன்பாக, ஜெமிமா விளையாடிய 74 டி20 போட்டிகளில் 1564 ஓட்டங்கள் எடுத்திருந்தார், அவரது ஸ்ட்ரைக் ரேட் 113.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »