Press "Enter" to skip to content

“அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது” – கமல்

அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சுமார் 2 மணி 41 நிமிடங்கள் பட்ஜெட் வாசிக்கப்பட்டது. பட்ஜெட் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டரில், “அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2020
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உறுதியான திட்டம் மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பொருளாதாரம் தாண்டி வரலாறு, பண்பாடு என்று தன் தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று மதுரை தொகுதி எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இது மோசமான பட்ஜெட்; ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவுமில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »