Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): நேர்மறை தாக்கம் – இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ்: நேர்மறை தாக்கம் – இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 595,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் உலகம் முழுவதும் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளதால் மாசுபாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. படிம எரிபொருளின் காரணமாக ஏற்படும் மாசுபாடு இது.

கீழே சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளோம். அவை மாசுபாடு எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என்பதைத் தெளிவாக விவரிக்கும்

கொரோனா வைரஸ்: 2ம் நிலையை நோக்கி நகரும் தமிழகம், கடை திறக்க கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் முதல் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க: கொரோனா: 2ம் நிலையை நோக்கி நகரும் தமிழகம், கடை திறக்க கட்டுப்பாடு

கொரோனாவால் இறக்கும் முன் திருவிழாவில் பங்கேற்ற முதியவர்

பஞ்சாபில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்க, அவருடன் தொடர்பில் இருந்ததாக 20 கிராமங்களை சேர்ந்த 40,000 பேரை அம்மாநில அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

70 வயது மதிக்கத்தக்க முதியவர் சமீபத்தில் உயிரிழக்க, அவர் உயிரிழந்த பின்னர்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விரிவாகப் படிக்க:கொரோனாவால் இறக்கும் முன் திருவிழாவில் பங்கேற்ற முதியவர்: தனிமைப்படுத்தப்பட்ட 40,000 பேர்

கொரோனாவின் 3ம் கட்ட அலையை எதிர்நோக்கி மலேசியா: ‘சுனாமி போல் தாக்கும்’

மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மூன்றாம் கட்ட சுனாமி போன்ற அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவே மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

விரிவாகப் படிக்க:‘சுனாமி போல் கொரோனா தாக்கும்’: 3வது அலையை எச்சரிக்கும் மலேசிய அரசு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை.

பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்காகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் மேட்.

விரிவாகப் படிக்க:பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா: நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »