Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் – என்ன நடக்க இருக்கிறது? மற்றும் பிற செய்திகள்

ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம்

உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் சமாளித்துவிடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். பணியிடங்களில் மனித ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ரோபோக்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் ஃபோர்ட், உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா மாற்றி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தத் தொடங்கிவிட்டன. வால்மார்ட் தரைகளைச் சுத்தப்படுத்தவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேனிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.

2021ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த சமயத்தில் பல இடங்களில் ரோப்போக்களின் பயன்பாடு அதிகமாகும், இது எதிர்காலத்தில் பெரும் சவாலாகவும், பேரபாயமாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

கொரோனா வைரஸ்: தமிழகம் வாங்கிய ‘ரேபிட் டெஸ்ட் கிட்’டின் விலை அதிகமாக இருப்பது ஏன்?

கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பதைத் துரிதமாகக் கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’கள் தமிழகத்தை வந்தடைந்திருக்கும் நிலையில், அவற்றின் விலை அதிகமாக இருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’ இன்று தமிழகத்தை வந்தடைந்துள்ளன. தமிழ்நாடு சுகாதாரத் துறை ஆர்டர் செய்த 5,00,000 கிட்களில் 24,000 கிட்களும் மத்திய அரசுக்கு வந்த கிட்களில் 12 ஆயிரம் கிட்களும் தமிழகத்தை வந்தடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

விரிவாகப் படிக்க:கொரோனா: தமிழகம் வாங்கிய ‘ரேபிட் டெஸ்ட் கிட்’டின் விலை அதிகமாக இருப்பது ஏன்?

கொரோனா வைரஸ் ஊரடங்கு: ஒரு மாதத்தின் பின்னர் முடக்க நிலையை தளர்த்தும் இலங்கை

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் ஒரு மாத காலமாக அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைமையை பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 20ம் தேதி முதல் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

விரிவாகப் படிக்க:ஒரு மாதத்தின் பின்னர் முடக்க நிலையை தளர்த்தும் இலங்கை

கொரோனா ஊரடங்கால் டாஸ்மாக் மூடல் – இணையத்தை பார்த்து மது தயாரிக்க முயன்றவர்கள் கைது

இணையதளத்தில் காணொளியைப் பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க முற்பட்ட இருவர் தமிழக காவல் துறையால் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர் என பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. பல நாட்கள் ஆகும் இந்த மது தயாரிக்கும் முறையை அவர்கள் முடிக்கும் முன்னரே போலீஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் இருவரும் மது தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

விரிவாகப் படிக்க:டாஸ்மாக் மூடல்- இணையத்தை பார்த்து மது தயாரிக்க முயன்றவர்கள் கைது

தமிழ்நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

தமிழகத்தில் புதிதாக 49 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் 82 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது என்றும் விரைவாக சோதனைகளை மேற்கொள்ள ‘ரேபிட் டெஸ்ட் கிட்களை’ தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

விரிவாகப் படிக்க:தமிழ்நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா – அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை

இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மொத்தம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள்
மகாராஷ்டிரம் 3323 331 201
டெல்லி 1707 72 42
மத்தியப் பிரதேசம் 1355 69 69
தமிழ்நாடு 1323 283 15
குஜராத் 1272 88 48
ராஜஸ்தான் 1229 183 11
உத்திரப் பிரதேசம் 969 86 14
தெலங்கானா 791 186 18
ஆந்திரப் பிரதேசம் 603 42 15
கேரளம் 396 255 3
கர்நாடகம் 371 92 13
ஜம்மு & காஷ்மீர் 328 42 5
மேற்கு வங்கம் 287 55 10
ஹரியாணா 225 43 3
பஞ்சாப் 202 27 13
பிகார் 85 37 2
ஒடிஷா 60 21 1
உத்திராகண்ட் 42 9 0
இமாச்சல பிரதேசம் 38 16 1
சத்தீஸ்கர் 36 24 0
அசாம் 35 9 1
ஜார்கண்ட் 33 0 2
சண்டிகர் 21 9 0
லடாக் 18 14 0
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 12 11 0
கோவா 7 6 0
புதுவை 7 3 0
மணிப்பூர் 2 1 0
மிசோரம் 1 0 0

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »