Press "Enter" to skip to content

அமெரிக்காவில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்தப்பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் இருப்பதால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என இரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

தான் ஏதேனும் உணவு அளிக்கும்போது அது இரண்டு வாய்களையும் திறக்கும் என்கிறார் அந்தப் பூனைக்குட்டியின் உரிமையாளர்.

தற்போது நல்ல உடல்நலத்தோடு இந்தப்பூனைக்குட்டி இருந்தாலும், இதன் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் விமான விபத்து: ஐவரின் உடல்களை தேடும் பணி தீவிரம்

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

விரிவாக படிக்க: பாகிஸ்தான் விமான விபத்து: 97 பேர் பலி, ஐவரின் உடல்களை தேடும் பணி தீவிரம்

தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது என என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா தாக்கத்திற்கு ஆளான 786 நபர்களில், 95 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

786 நபர்களில் 569 நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள்.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,753ஆக உயர்வு

தமிழக அரசால் வழங்கப்படும் ஹோமியோபதி மருந்து கொரோனா தடுப்புக்கு உதவுகிறதா?

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை அளிக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த ஆர்சனிகம் ஆல்பம் 30 சி கொரோனாவுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது?

விரிவாக படிக்க: ஆர்சனிகம் ஆல்பம் – 30 சி: தமிழக அரசால் வழங்கப்படும் ஹோமியோபதி மருந்து கொரோனா தடுப்புக்கு உதவுகிறதா?

நெடுந்தூர பயணம், அதீத சோர்வு, சாலை விபத்துகள் – உயிரிழக்கும் தொழிலாளர்கள்

இந்தியாவில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முடக்க நிலை தொடங்கியதில் இருந்து இதுவரை ஒவ்வொரு நாளும் சராசரியாக நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாடு தழுவிய முடக்க நிலையை அறிவித்து 50க்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துவிட்டன.

ஆனால், பிரதமரின் திடீர் அறிவிப்பால், கால அவகாசம் ஏதும் கொடுக்கப்படாமல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: நெடுந்தூர பயணம், அதீத சோர்வு, சாலை விபத்துகள் – உயிரிழக்கும் தொழிலாளர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »