Press "Enter" to skip to content

இஸ்ரேல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய வரலாற்றுப்பூர்வ உடன்பாடு: மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

இஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவற்றின் சமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அபு தாபி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், வரலாற்றுப்பூர்வ திருப்பமாக அமையும் இந்த உடன்பாடு, மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்த உதவும் என்று கூறியுள்ளனர்.

இந்த உடன்பாட்டின் விளைவாக, “ஆக்கிரமிப்பு மேற்குக்கரையின் பெரும்பாலான பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை இஸ்ரேல் இடைநிறுத்தும்” என்றும் அந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுநாள்வரை வளைகுடா அரபு நாடுகளுடன் ராஜீய ரீதியிலான உறவை இஸ்ரேல் வளர்த்துக் கொண்டதில்லை.

எனினும், வளைகுடா பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கு தொடர்பான கவலைகள் அதிகரித்து வருவதால், அலுவல்பூர்வமற்ற வகையில் உடன்பாட்டை எட்டியிருக்கும் நாடுகளுக்கு இடையே தொடர்புகள் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான இந்த வரலாற்றுப்பூர்வ உடன்பாடு தொடர்பான மேலதிக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »