Press "Enter" to skip to content

“இரான் வசம் செறிவூட்டிய யூரேனியம் அனுமதிக்கப்பட்டதைவிட 10 மடங்கு அதிகம் உள்ளது”

பட மூலாதாரம், EPA

சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிக செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை இரான் வைத்துள்ளது என ஐநாவின் சர்வதேச அணு சக்தி முகமை தெரிவிக்கிறது.

இரான் வசம் தற்போது 2,105 கிலோ செறிவூட்டப்பட்ட யூரேனியம் இருக்கிறது என்கிறது அணு சக்தி முகமை.

இது ஒப்புக் கொள்ளப்பட்ட அளவான 300 கிலோவைக் காட்டிலும் பெரிய அளவுக்கு அதிகமாகும்.

இரனில் உள்ள சந்தேகத்துக்குரிய இரண்டு முன்னாள் அணுக்கருத் தளங்களைப் பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமையை இரான் அனுமதித்த பிறகு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது முகமை.

இரான் தனது அணுக்கரு திட்டங்கள் அனைத்தும் அமைதிக்கானவை என்று தெரிவிக்கிறது.

இரண்டாவது தளத்தில் இந்த மாத இறுதியில் சோதனை செய்யப்படும் என அந்த முகமை தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு இரான், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, தாமும் வெளியேறுவதாக இரான் வெளிப்படையாகத் தெரிவித்தது.

அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்க இரான் 1,050 கிலோ வரையிலான 3.67% செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை தயாரிக்க வேண்டும்.

மேலும் அதை 90% செறிவூட்ட வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அணு ஆயுத பாதுகாப்பு குறித்து நிலவி வரும் சர்வதேசப் பிரச்சனையை சரி செய்ய “நல்ல எண்ணத்தில்” ஆயுத கண்காணிப்பாளர்கள் அணுக்கருத் தளத்தை சோதனையிட அனுமதி வழங்கியதாக இரான் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் இந்திய, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

மாஸ்கோ பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், ANI

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய, சீனா இடையே நீடித்து வரும் ஆத்திரமூட்டல் செயல்பாடுகள் மற்றும் பதற்றம் தொடர்பாக மாஸ்கோவில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வே ஃபெங் க, இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கடந்த மே மாதம் லடாக் எல்லையில் இந்திய படையினருக்கும் சீன படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பிறகு, இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்கள், இப்போதுதான் முதன்முதலாக நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இந்த சந்திப்பின்போது, இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமாரும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேச வர்மாவும் உடனிருந்தனர். சீன பாதுாப்புத்துறையின் வேண்டுகோளின்படியே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் கைது

ரியா

பட மூலாதாரம், RHEA CHAKRABORTY / INSTAGRAM

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் அவரது முன்னாள் தோழி ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியை போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக்கிடம் போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பிறகு சோஷவிக், சாமுவேல் மிராண்டா ஆகிய இருவரையும் அதிகாரிகள் விசாரணைக்காக அவர்களின் அலுவலகத்துக்கு அழைத்தச் சென்றனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் இன்று 9 மணியளவில் தெரிவித்தனர்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அறிவுத் திருட்டில் ஈடுபட்டாரா?

ராதா கிருஷ்ணன்

பட மூலாதாரம், J. WILDS/GETTY IMAGES

இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் முன் இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர், ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியது மற்றும் தனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பிய நண்பர்கள் மற்றும் மாணவர்களிடம் அதை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் தாம் மிகவும் மகிழ்வேன் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த 1962 முதல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது ஆகியவை பரவலாக அறியப்பட்ட தகவல்களே.

விடுதலைப்புலிகளை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர்

மகாதீர் மொஹம்மது

பட மூலாதாரம், Getty Images

தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.

தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என்றும் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் தெளிவுபடுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »