Press "Enter" to skip to content

வீட்டிலிருந்து வேலை குறித்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் கூறுவதும், ட்விட்டர் நிறுவனத்தின் முடிவும்

பட மூலாதாரம், Getty Images

வீட்டிலிருந்து வேலை

வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நேர்மறையான எந்த விளைவுகளும் இல்லை என்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல திட்டங்கள், யோசனைகள் குறித்து விவாதிப்பதும் கடினமாக உள்ளது என அவர் கூறி உள்ளார்.

வால்ஸ்ட்ரீட் நாளிதழ் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறாகப் பதில் அளித்துள்ளார். “மக்கள் ஒன்றுகூட முடியாமல், குறிப்பாக சர்வதேச அளவில் தனிப்பட்ட முறையில் ஒன்றுகூட முடியாமல் இருப்பது நிச்சயம் எதிர்மறையான விஷயம்,” என அவர் கூறி உள்ளார்.

ஆனால், அதே நேரம் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் வரை நிறுவனத்தின் 8600 ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெருந்தொற்று காலம் முடிவுக்கு வந்த பின்பும் கூட வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.

இந்த சூழலில் பிரிட்டன் அரசாங்கத்தின் ஒரு பிரசார காணொளி ஊழியர்களை பணியிடங்களுக்குத் திரும்ப வலியுறுத்துகிறது.

நெட்ஃப்ளிக்ஸிற்கு உலகெங்கும் 20 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர்.

வீட்டிலிருந்து வேலை குறித்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் கூறுவதும், ட்விட்டர் நிறுவனத்தின் முடிவும்

பட மூலாதாரம், Getty Images

ட்விட்டர் மே மாதம் வெளியிட்ட அறிவிப்பொன்றில், கொரோனாவுக்கு பிறகு ஊழியர்கள் விரும்பினால் அவர்கள் காலம் முழுவதும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம்.

ட்விட்டர் நிறுவனம் வீட்டிலிருந்து பணியாற்றுவதை நேர்மறையாகப் பார்க்கிறது.

இலங்கை கப்பல் தீ

இலங்கை கப்பல் தீ

பட மூலாதாரம், ICG

MT New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் கோமாவில் இருந்து மீண்டதாக தகவல்

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் கோமாவில் இருந்து மீண்டதாக தகவல்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி, நச்சு வேதிப்பொருள் தாக்கத்துக்கு ஆளாகி ஜெர்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோமா நிலையில் இருந்து அவர் மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

44 வயதாகும் நவால்னி, நோவிசோக் எனப்பபடும் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய ரசாயன தாக்குதலுக்கு ஆளானதாக ஜெர்மன் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“அருணாசல பிரதேசத்தை இந்திய பகுதியாக அங்கீகரிக்கவில்லை”

"அருணாசல பிரதேசத்தை இந்திய பகுதியாக அங்கீகரிக்கவில்லை"

பட மூலாதாரம், Getty Images

இந்திய ராணுவத்துக்காக சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 5 பேர் அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன விவகாரத்தில் தொடர்ந்து முரண்பட்ட தகவல்கள் வருகின்றன.

வார இறுதியில் காணாமல் போன அந்த ஐந்து பேரும் சீன ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று இந்திய ராணுவம் கேட்டிருந்தது.

அதிமுக எம்.பி விஜயகுமார் பாஜகவுக்கு தாவுகிறாரா?

அதிமுக எம்.பி விஜயகுமார் பாஜகவுக்கு தாவுகிறாரா?

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் தேர்வான அ. விஜயகுமார், கட்சியிலும் ஆட்சியில் உள்ளவர்களாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

2016இல் மாநிலங்களவைக்கு தேர்வான இவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவு பெறுகிறது.

இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக கட்சித் தலைமையால் ஓரம் கட்டுப்படுவதாகக் கூறும் இவர், பாஜக மேலிட தலைவர்களுடன் நெருக்கமாக பழகுவது, அதிமுகவின் செயல்பாடு, தொகுதியில் எதிர்கொள்ளும் அவமதிப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அவரது நேர்காணலின் எழுத்து வடிவத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »