Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பும் மலேசிய தமிழ் பள்ளிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது மலேசிய அரசு. இதையடுத்து அங்குள்ள தமிழ் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

தினந்தோறும் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்துவது, உடல் வெப்ப நிலையை பரிசோதிப்பது, வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விவரிக்கப்படுகிறது. மேலும் உணவைப் பகிர்தல் கூடாது, முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகியனவும் அறிவுறுத்தப்படுகிறது..

தொடக்கத்தில் இத்தகைய நெறிமுறைகளை மாணவர்கள் விரும்பவில்லை என்றும், அவர்களின் மனநிலை மகிழ்ச்சியாக இல்லை என்றும் குறிப்பிடும் ஆசிரியர்கள், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பு குறித்து முழுமையாகப் புரிந்து கொண்ட பின்னர் பெரும்பாலான மாணவர்கள் புதிய இயல்பு நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தினமும் பள்ளியை சுத்தப்படுத்துவது, மதிய உணவு வேளையில் மாணவர்கள் வெளியே செல்வதை தடுக்கும் வகையில் வகுப்பறைகளுக்கே உணவு கொண்டு வரப்படுவது உள்ளிட்ட பணிகளில் மலேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »