Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ரெம்டெசிவீர் தடுப்பூசி போட்டால் உயிர் பிழைக்க முடியுமா?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிர்ப்பு மருந்தாக கருதப்படும் ரெம்டெசிவீர் போட்டுக் கொள்வதால், நோயாளியின் உயிர் பிழைக்கும் சாத்தியம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் முக்கிய முடிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த ஆய்வில் ரெம்டெசிவீர், ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் உள்பட நான்கு மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் ரெம்டெசிவீர் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிர்ப்பு மருந்து, கொரோனா வைரஸால் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தபோது அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அந்த எதிர்ப்பு மருந்து செலுத்தப்படும் நோயாளிக்கு, அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு, இல்லவே இல்லை அல்லது சிறிதளவு மட்டுமே தாக்கம் கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த மருந்தின் தயாரிப்பு நிறுவனமான கில்லியாட், உலக சுகாதார அமைப்பின் ஆய்வுத்தரவு முடிவுகளை நிராகரிப்பதாக கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலக சுகாதார அமைப்பின் ஆய்வு முடிவுகள் மற்ற முடிவுகளுடன் “பொருத்தமற்று உள்ளன” என்றும் இந்த தரவுகள் மேலும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஆய்வு முடிவு என்ன?

தற்போதைய பரிசோதனை நிலையிலான ஆய்வுகளில், கோவிட்-19 நோயாளிகளில் அதி தீவிர பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் நான்கு முக்கிய மருந்துகளை ஆய்வுக்கு உலக சுகாதார அமைப்பு உட்படுத்தியது.

இந்த பட்டியலில் ஈபோலா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்தான ரெம்டெசிவீர், மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுவின், நோய் எதிர்ப்பணுக்களை அதிகரிக்க பயன்படுத்தப்படும் இன்டெர்ஃபெரான், ஹெச்ஐவி கலவை மருந்தான லோப்பினாவிர் மற்றும் ரிட்டோனாவிர் ஆகியவை இடம்பெற்றன.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

இதே சமயம், பிரிட்டனில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு செலுத்த பயன்படுத்தப்படும் டெக்ஸாமெத்தசோன் என்ற குறைந்த விலை ஸ்டீராய்டு மருந்தை உலக சுகாதார அமைப்பு தமது ஆய்வில் சேர்க்கவில்லை.

உலக அளவில் 30க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 500 மருத்துவமனைகளில் மொத்தம் 11 ஆயிரத்து 266 நோயாளிகளிடம் இந்த நான்கு மருந்துகளும் செலுத்தப்பட்ட நோயாளிகளின் நிலையை உலக சுகாதார அமைப்பு கண்காணிப்புக்கு உட்படுத்தி ஆய்வு மேற்கொண்டது.

அவற்றின் முடிவுகள் படிப்படியாக ஒருவர் பின் ஒருவராக மறுஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையில், இந்த நான்கு மருந்துகளும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவோ அல்லது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த காலத்தில் அந்த நோயாளிகளின் உடல்நிலை முன்னேற்றத்தில் சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறியுள்ளது.

முன்னதாக, அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறும்போது, ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மற்றும் லோபினார், ரிட்டோனோவார் கலவை மருந்துகள், நோயாளிகளின் கொரோனா வைரஸுக்கு எதிர்வினையாற்ற போதுமானதாக இல்லை என்பதால் அவற்றின் பயன்பாடு கடந்த ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை, இந்த மாத தொடக்கத்தில் கிலியாட் மருந்தக நிறுவனம் நடத்தியிருந்த ஆய்வு முடிவுடன் முரண்பட்டிருப்பதை அறிய முடிகிறது. கிலியாட் நிறுவன ஆய்வில், கொரோனா வைரஸில் இருந்து மீளும் காலத்தை ரெம்டெசிவீர் எதிர்ப்பு மருந்து குறைக்கிறது என்றும் தமது பரிசோதனை நடவடிக்கையில் சுமார் ஆயிரம் நோயாளிகள் பங்கெடுத்தனர் என்றும் அந்த அமைப்பு கூறியிருந்தது.

ரெம்டெசிவீர்

ரெம்டெசிவீர் மருந்தின் அனுமதியும் சர்ச்சையும்

ரெம்டெசிவீர் மருந்தை நோயாளிகளுக்கு பயன்படுத்த அவசரகால அனுமதியாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கடந்த மே 1ஆம் தேதி வழங்கியது. பிறகு ஒரு மாதம் கழித்து பிரிட்டனிலும் அந்த மருந்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதித்தது. அதன் பிறகு இந்தியா, உள்பட பல நாடுகளில் ரெம்டெசிவீர் மருந்து வரம்புகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று தீவிரமான காலம் தொட்டு அந்த மருந்து, நோயாளிகள் குணமடைய சாத்தியம் மிகுந்த தீர்வாக இருப்பதாக பல நாடுகளும் கூறி வருகின்றன. ஆனால், உலக சுகாதார அமைப்பின் ஆய்வு முடிவுகள் பலவும், அந்த மருந்து நோயாளிகளுக்கு உரிய பயனைக் கொடுக்காது என்றே கூறி வந்தன.

தற்போதைய நிலையில், கொரோனா வைரஸுக்கு தீர்வாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கொடுக்கப்படும் மலேரியா தடுப்பு மருந்து, ஹெச்ஐவி தடுப்பு மருந்து, ஈபோலா தடுப்பு அனைத்தும் பலன் கொடுக்காத நிலையில், பழைய ஸ்டீராய்டு மருந்தான டெக்ஸாமெத்தசோன் மட்டுமே உயிர்காக்கும் எதிர்ப்பாற்றலை நோயாளிகளிடம் தோற்றுவிப்பதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும் அதன் மீதான முழுமையான பரிசோதனை தரவுகளும் இன்னும் மதிப்பீட்டு அளவிலேயே இருப்பதால், இன்னும் எந்தவொரு மருந்தும் கொரானா வைரஸுக்கு நிரந்தர தீர்வு தராது என்பதே யதார்த்தம்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

16 அக்டோபர், 2020, பிற்பகல் 1:56 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »