Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இரண்டாம் பொது முடக்கத்தால் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், சில நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மீண்டும் பொது முடக்க விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதுபோன்று பொது முடக்கம் அறிவிக்கப்படுவதால் பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கி செல்லும் மற்றும் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையுமென்ற அச்சம் நிலவுவதே இந்த விலை வீழ்ச்சிக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளதாலும், அதுசார்ந்த தாக்கத்தின் காரணமாகவும் பங்குச் சந்தைகள் மந்தமாக செயல்பட்டு வருகின்றன.

ஆசியாவில் இன்றைய வர்த்தக நேரத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 35.74 டாலராகக் குறைந்தது. இது கடந்த மே மாதத்திற்கு பிறகான குறைந்தபட்ச விலையாகும்.

லண்டனில் வர்த்தகம் தொடங்கியதும், இதன் விலை சற்றே அதிகரித்து 37.86 டாலராக வணிகமாகி வருகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ப்ரெண்ட் கச்சா எண்ணையின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 45 சதவீதம் குறைந்துள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பொது முடக்கத்தால் கச்சா எண்ணையின் தேவை குறைந்ததால், பல்வேறு எரிசக்தி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கின. இந்த பணிநீக்கம் மேலும் தொடருமென்று கருதப்படுகிறது.

தேர்தல் குறித்த அச்சம்

அமெரிக்க கச்சா எண்ணெயின் விலையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக, இன்று (திங்கட்கிழமை) மட்டும் அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை ஏழு சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 33.64 டாலருக்கு வணிகமானது.

நாளை நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையில் நிலவி வரும் கடுமையான போட்டி மற்றும் தள்ளிப்போடப்பட்டு வரும் அமெரிக்க அரசின் நீட்டிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாகவே உலகம் முழுவதும் சந்தைகளில் மந்தமான சூழ்நிலை நிலவுவதாக கருதப்படுகிறது.

“நீங்கள் எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும், இந்த வாரம் அமெரிக்கா மற்றும் உலக சந்தைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கப்போகிறது” என்று முதல் அபுதாபி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சைமன் பல்லார்ட் கூறுகிறார்.

“சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மைக்கு இந்த வார நிகழ்வுகள் மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் கொரோனாவின் தாக்கமும் காரணமாக உள்ளதாக கருதுகிறோம்.” என்கிறார் பல்லார்ட்.

கச்சா எண்ணெய்

சீனாவில் பொருளாதார வளர்ச்சி

இருப்பினும், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முதன்முதலில் பரவியதாக அறியப்படும் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகளவில் முதலிடத்தில் உள்ள சீனா வரும் ஆண்டு, தனியார் நிறுவனங்களுக்கு 20 சதவீத அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க உள்ளதாக திங்கட்கிழமை அறிவித்தது.

சீனாவில் கடந்த மாதம், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு உள்நாட்டு தேவை அதிகரித்ததால், அந்த நாட்டின் தொழில்துறையின் செயல்பாடு விறுவிறுப்படைந்துள்ள சூழ்நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கத்தில் இருந்து விரைவாக மீண்டு வருவதாக கூறுகிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஒப்பிடும்போது, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் தங்களது பொருளாதாரம் 4.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »