Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு முன்பே உயரும் பங்குச் சந்தைகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என இதுவரை முறையாக அறிவிக்கப்படவில்லை. இப்படி ஒரு நிலையற்ற தன்மை நிலவும் போதும், கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த அடுத்த நாளே, அமெரிக்க பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டு இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. ஏற்கனவே எதிர்பார்த்த அளவுக்கு இருவரும் பெற்ற வாக்குகளுக்கு இடையே பெரிய வேறுபாடு இல்லாமல், போட்டி மிகவும் நெருக்கமாக இருப்பதால், தொழில் துறையில் பெரிய மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்து இருக்கிறது.

எனவே முதலீட்டாளர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலை கவனத்தில் எடுத்துக் கொண்டும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து இருக்கிறார்கள். பங்குகள் விலை ஏற்றம் கண்டு இருக்கின்றன.

தொழில்நுட்ப மற்றும் சுகாதார நிறுவனங்கள், புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்ப்புகள் குறைவு என்பதால் அவற்றின் பங்குகளின் விலை அதிகரித்து இருக்கின்றன.

ஃபேஸ்புக் நிறுவன பங்குகளின் விலை 8 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. அதே போல சில பெரிய மருத்துவக் காப்பீட்டு நிறுவன பங்குகளின் விலை இரட்டை இலக்கத்தில் விலை ஏற்றம் கண்டன.

அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் பங்குச் சந்தை குறியீடு 1.3 % ஏற்றம் கண்டு நிறைவடைந்து இருக்கிறது. எஸ் & பி 500 பங்குச் சந்தை குறியீடு 2.2 % ஏற்றம் கண்டிருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிகம் இருக்கும் நாஸ்டாக் 3.9 % ஏற்றம் கண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு அடுத்த நாள், எஸ் & பி 500 மற்றும் டவ் ஜோன்ஸ் பங்குச் சந்தை குறியீடுகள், ஒரே நாளில் அதிக ஏற்றம் கண்டு இருப்பதுதான், கடந்த 40 ஆண்டுகளில் அதிகமானது.

இந்தியாவில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் இருப்பது போல, அமெரிக்காவில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அவைகள் இருக்கின்றன. இந்த அதிபர் தேர்தலில், இந்த இரண்டு அவைகளிலுமே ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

A farmer and his son selling apples from the back of a car

அதிபர் தேர்தலில் வென்று, அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதை ஆங்கிலத்தில் Divided Government என்கிறார்கள். அதாவது அரசு ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிலும், நாடாளுமன்றம் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

“யார் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு வந்தாலும், அமெரிக்காவில் தற்போது, இரு அவைகளிலும் பெரும்பான்மை இல்லாத அரசு அமைய வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறது பங்குச் சந்தை. அதாவது யார் வந்தாலும் பெரிய சட்ட மாற்றங்கள், பெரிய செலவீன மாற்றங்கள் மற்றும் வரித் திட்டங்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆக இது குறைந்த அளவிலான நிலையற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது”என்கிறார் எஃப்.ஹெச்.என் ஃபைனான்ஷியல் எனும் நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் க்றிஸ் லோ.

இன்னும் பல லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டி இருக்கிறது. இதுவரை பைடன் மற்றும் டிரம்ப் இருவருக்குமிடையில், முக்கிய மாகாணங்களில் கடுமையான போட்டி நிலவுகிறது.

ஜோ பைடன் ஒரு பெரிய வெற்றி பெறுவார் என்கிற கணிப்பு பலிக்கவில்லை. தான் வெற்றி பெற்றதாக, புதன்கிழமையே அவசரப்பட்டு அறிவித்துவிட்டார் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் பைடன் வெற்றி பெற்று, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நிவாரண நிதி ஒதுக்கப்பட்டு, பங்குச் சந்தைகள் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை, முதலீட்டாளர்கள் மத்தியில் குறைந்தது. எனவே நேற்று இரவோடு இரவாக அமெரிக்காவின் ஃப்யூச்சர் மார்க்கெட்டுகளில், குறைந்த விலையில் பங்குகளை சற்று நேரம் விற்பது நீடித்தது.

ஆனால், முதலீட்டாளர்கள் அதிபர் தேர்தலை கவனத்தில் கொண்டும், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தது, பங்குகளின் விலையை ஏற்றம் காணச் செய்துவிட்டது. டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதால், ஜோ பைடன் அறிவித்த கார்ப்பரேட் வரி அதிகரிப்பு போன்ற விஷயங்களுக்கான சாத்தியங்கள் குறைந்து இருக்கின்றன.

தேர்தல்

“இரு அவைகளிலும் பெரும்பான்மை இல்லாத அரசு (Divided Government), தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வருவதை மிகவும் கடினமாக்கி இருக்கிறது. கொரோனா நிவாரண நிதி தவிற மற்ற பொருளாதார கொள்கைகள், சட்டமாக்கப்படுவது சந்தேகமே” என வெல்ஸ் ஃபார்கோவின் பொருளாதார வல்லுநர் மைக்கெல் புக்லிஸ் சொல்லி இருக்கிறார்.

இந்த தேர்தல், வர்த்தக நலன்களுக்கு கிடைத்த வெற்றி எனச் சொல்கிறது வர்த்தக அமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ். குடியரசுக் கட்சி, அமெரிக்க செனட் மற்றும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேடிவ் அவைகளில், எதிர்கொண்டு நிற்கும் திறனை சுட்டிக் காட்டுகிறது சேம்பர் ஆஃப் காமர்ஸ்.

பரவலாக அமெரிக்க வாக்காளர்கள் வளர்ச்சிக்கு ஆதரவான, வியாபாரத்துக்கு ஆதரவான கொள்கைகளில் கவனம் செலுத்துவதை ஆதரிக்கிறார்கள் எனச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

டிரம்ப் வெற்றி பெற்றதாக தானே அறிவித்துக் கொண்ட உடன் திடீரென இறக்கம் கண்ட ஐரோப்பிய சந்தைகள், நேற்று வர்த்தக நேர முடிவில், ஏற்றத்திலேயே வர்த்தகம் நிறைவடைந்தன. பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகளிலும் நேற்று ஏற்றத்திலேயே வர்த்தகம் நிறைவடைந்தது.

கொரோனாநச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சந்தை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படலாம் என்கிறார் பந்தியன் மேக்ரோ எகனாமிக்ஸ்-ன் ஐயன் ஷெப்பர்ட்சன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »