Press "Enter" to skip to content

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி: டிரம்ப் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்வதற்கு தேவையான 270 தேர்தல் சபை உறுப்பினர்களை விட அதிகமான எண்ணிக்கையை ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் பெற்று வெள்ளை மாளிகைக்கு செல்லும் போட்டியில் டொனால்டு டிரம்பை வீழ்த்தியுள்ளார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சரி. அடுத்தது என்ன?

தேர்தல் முடிவுகள் வந்த தேதிக்கும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு இடையில் சில நடைமுறைகள் உள்ளன.

இவை வழக்கமாக எளிமையான நடைமுறைகள்தான். ஆனால் இந்த முறை டிரம்ப் தரப்பு சட்டரீதியான நெருக்கடிகளை தரும் என்பதால் இப்போது சற்று சிக்கல்கள் எழலாம்.

Section divider

பைடன் எப்போது அமெரிக்க அதிபர் ஆவார்?

தேர்தல் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி நற்பகல் முதல் அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் தொடங்குகிறது என்று அமெரிக்க அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

அந்தத் தேதியில் தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

எனவே ஜனவரி 20-ஆம் தேதி கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Joe Biden at Trump's inauguration

இந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்கும் நடைமுறையில் ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு.

அமெரிக்க அதிபராக பதவியில் இருப்பவர் தனது பதவிக் காலத்தின்போது உயிரிழந்துவிட்டால் அலல்து பதவியிலிருந்து விலகி விட்டால் துணை அதிபராக இருப்பவர் எவ்வளவு சீக்கிரமாக முடியுமா அவ்வளவு சீக்கிரத்தில் அதிபராக பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.

Section divider

அதிகாரத்தைக் மாற்றும் நடைமுறை என்பது என்ன?

தேர்தல் முடிவுகள் வெளிவந்த தேதிக்கும் ஜனவரி 20ஆம் தேதி புதிய அதிபரின் பதவிக்காலம் தொடங்குவதற்கும் இடைப்பட்ட காலத்தில் இது நடக்கும்.

புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் அதிபர் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்கும் பொறுப்பு ஏற்பதற்கான குழுவொன்றை நியமிப்பார். இது Transition Team எனப்படும்.

அதிபராக பதவியேற்ற உடன் நிர்வாக நடவடிக்கைகளை தொடங்குவதற்கான வேலைகளில் இக்குழு ஈடுபடும். பைடன் ஏற்கனவே அப்படி ஒரு குழுவை அமைத்து அதற்கான இணையதளத்தையும் தொடங்கிவிட்டார்.

இந்தக் குழுவினர் பைடனின் அமைச்சரவையில் யார் இருப்பார்கள் என்பதை முடிவு செய்வது மட்டும் அல்லாமல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் முடிவு செய்வார்கள்.

இந்தக் குழுவினர் அமெரிக்க ஒன்றிய அரசின் துறைகள் மற்றும் அமைப்புகளை அணுகி எந்த பதவியில் இருப்பவர் என்ன கடமைகளை நிறைவேற்ற வேண்டும், ஏதாவது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கடைசித் தேதி நெருங்குகிறதா, அரசின் வரவு செலவு கணக்கு உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ளும்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அமைச்சரவைக்கு தேவையான அனைத்து தகவல்களையும் சேகரிப்பதுடன் பதவியேற்பு தொடங்கிய பின்பு அவர்களுக்கு நிர்வாக நடவடிக்கைகளிலும் இந்த குழுவினர் உதவுவார்கள்.

இந்தக் குழுவில் உள்ள சிலரே கூட புதிய அதிபரின் அமைச்சரவையில் பங்கேற்பார்கள்.

Transition Team -ஐ அமைப்பதற்கு ஜோ பைடன் பல மாதங்களாகவே முயற்சி எடுத்து வருகிறார்.

அதற்கான நிர்வாக செலவுகளுக்கு நிதி திரட்டவும் அவர் தொடங்கிவிட்டார். கடந்த வாரம் இந்த குழுவுக்கான அதிகாரப்பூர்வ அலுவலக இணையதளம் தொடங்கப்பட்டது.

Trump and Obama in Oval Office

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரின் ‘ஓவல் ஆஃபீஸ்’ அலுவலகத்தில் பதவிக் காலம் முடிந்த அதிபர் பராக் ஒபாமா புதிய அதிபராக பதவியேற்க இருந்த டிரம்பை சந்தித்தார்.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் அவர்களுக்குள் நல்லிணக்கம் எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே இருந்தன.

அந்த நிலைமைதான் தற்போதும் தொடர்கிறது.

Section divider

புதிய அரசு – சில முக்கிய பதங்கள்

President-elect (ப்ரெசிடெண்ட் எலெக்ட்) – புதிய அதிபர் பதவி ஏற்கும் வரை அவர் president-elect என்று அழைக்கப்படுவார்.

Cabinet (கேபினெட்) – அமெரிக்காவின் அனைத்து துறைகள் மற்றும் அரசின் அமைப்புகளுக்கு தலைமை தாங்குவோரின் குழுவில் உள்ளவர்கள் கேபினட் என்று அழைக்கப்படுவார்கள்.

கேபினெட் என்பது ‘அமைச்சரவை’ என்று பொருள்பட்டாலும் பெரும்பாலும் இக்குழுவில் உள்ளவர்கள் ‘செயலாளர்’ என்றே அழைக்கப்படுவர்.

இதில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து பைடன் விரைவில் அறிவிப்பார்.

Confirmation Hearing – அமெரிக்க அதிபர் தனது அமைச்சரவை பதவிகளுக்கு முன்மொழியும் நபர்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை யான செனட் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அவர்கள் செனட் குழுக்களால் நேர்காணல் செய்யப்படுவார்கள். அதன் பின்பு அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பும் நடக்கும். இது அங்கு ‘கண்ஃபர்மேஷன் ஹியரிங்’ எனப்படுகிறது.

Celtic அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்பான சீக்ரெட் சர்வீஸ் அதிபர் பொறுப்பேற்க உள்ள பைடனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும். தங்கள் எந்த குறியீட்டு பெயர்களில் அழைக்கப்பட வேண்டும் என்பதை அந்த பாதுகாப்பு பெறும் நபரே முடிவு செய்யலாம்.

Celtic (செல்டிக்) எனும் பெயரை ஜோ பைடன் தேர்ந்தெடுத்துள்ளார். Moghul எனும் பெயரை தேர்ந்தெடுத்திருந்தார் டிரம்ப். கமலா ஹாரிஸ் Pioneer என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Section divider

சட்ட ரீதியான சிக்கல்கள் வருமா?

ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்றாலும் பைடன் வெற்றி பெற்றுள்ள மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்ததாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடங்குவதற்கு வழக்கறிஞர்களை அவரது பிரசாரக் குழுவினர் தேடி வருகின்றனர்.

தாமதமாகக் கிடைத்த பல தபால் வாக்குகளை செல்லாத வாக்குகள் என்று அறிவிக்க வேண்டும் என்று டிரம்ப் தரப்பு கோரிக்கை வைக்கும் முயற்சி ஒருவேளை உச்சநீதிமன்றம் வரை செல்லலாம்.

ஆனால், அந்த வழக்கில் முடிவு தேர்தல் முடிவை மாற்றுவதற்கான வாய்ப்பில்லை என்றே சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சில மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூட உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம். எனினும், தேர்தல் முடிவுகளில் இதனால் பெருமளவில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

Section divider

டிரம்ப் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?

தேர்தல் முடிவுகளுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிப்பேன் என்று டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். தேர்தல் முடிவுகளை மாற்றும் அவரது முயற்சிகள் ஒருவேளை பலனளிக்கவில்லை என்றால் அவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பொது அழுத்தம் அதிகமாகும். ஆனால் அதை அவர் செய்வாரா?

ஜோ பைடன் வெற்றி உறுதி: இனி வரும் நாட்களில் என்னவெல்லாம் நடக்கும்?

தேர்தலில் தோல்வியடையும் வேட்பாளர் வெற்றி அடையும் வேட்பாளரிடம், தமது தோல்வியை ஒப்புக்கொண்டு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வது அமெரிக்க அரசியல் பாரம்பரியத்தில் ஒரு மதிக்கத்தக்க வழக்கமாக உள்ளது. எனினும் இது கட்டாயம் இல்லை.

எனினும் சமீப கால அமெரிக்க அதிபர் தேர்தலில் இது நிகழாமல் இருந்ததில்லை.

தனது தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் டிரம்புக்கு இல்லை; அல்லது எதையும் காட்டிக் கொள்ளாமல் ஜோ பைடனின் பதவியேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆனால் டிரம்ப் சட்ட ரீதியாக வேறு சில கட்டாயங்கள் உள்ளன.

பைடனின் குழுவினர் பொறுப்பேற்தற்கான நடவடிக்கைகளுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்வதற்கு அவரது நிர்வாக குழுவினருக்கு டிரம்ப் சட்டரீதியான ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதை அவர் ஏற்கனவே செய்து விட்டார் என்று டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பல காலமாக பின்பற்றப்பட்டு வந்தது பழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களை பற்றி கவலைப்படாமல் 2016இல் அதிபர் பதவிக்கு வந்தார் டிரம்ப். விரும்பினால் அவ்வாறான ஒரு வழியிலேயே அவர் அதிபர் பதவியில் இருந்து வெளியேறவும் செய்யலாம்.

Section divider

கமலா ஹாரிஸ் என்ன செய்வார்?

அமெரிக்காவின் துணை அதிபர் பொறுப்பேற்கும் முதல் பெண்ணான கமலா ஹாரிஸ் தனது அலுவலக நிர்வாகத்திற்கான அதிகாரிகளை நியமனம் செய்வதுடன் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகும் நிர்வாகத்திடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் .

துணை அதிபர்கள் வெள்ளை மாளிகையில் உள்ள வெஸ்ட் விங் பகுதியிலிருந்து பணியாற்றுவார்கள். ஆனால் வெள்ளை மாளிகையில் குடியேறுவது இல்லை.

Doug Emhoff and Kamala Harris

வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் பத்து நிமிட நேரம் பயணத்திற்கு பின்பு அடையக்கூடிய யு.எஸ் நேவல் அப்மேலாய்வுட்டரி பகுதியில் தொழிலதிபர்கள் துணை அதிபரின் அலுவல் பூர்வ இல்லம் அமைந்திருக்கும்.

கமலா ஹாரிஸின் கணவர் டோக் ஏமோஃப் பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றும் ஒரு வழக்கறிஞர் ஆவார். ஏமோஃபுக்கு அவரது முதல் திருமணம் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Section divider

வெள்ளை மாளிகை – சில சுவாரசிய தகவல்கள்

1800இல் அதிபர் பொறுப்பேற்ற ஜான் ஆடம்ஸ் அவரது மனைவி அபிகைல் ஆடம்ஸ் உடன் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது இந்தக் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை.

வெள்ளை மாளிகை பராமரிப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் தனி நிதி ஒதுக்குகிறது.

இங்கு 132 அறைகள் மற்றும் 35 குளியல் அறைகள் உள்ளன.

மெலானியா டிரம்ப் ஃபேஷன் துறையில் இருந்தவர் என்பதால், அங்கு பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதிக பொருட் செலவில் அங்கு நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும் அவரே பொறுப்பாக இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »