Press "Enter" to skip to content

பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் சுவிட்சர்லாந்தில் 198 கோடி ரூபாய்க்கு ஏலம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் மிகவும் அரிதான பர்புள் – பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று சுவிட்சர்லாந்தில் 26.6 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள் தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும் அரிதான 14.8 கேரட் வைரக்கல் ஆகும்.

அதன் அளவு, நிறம் மற்றும் அமைப்பு ஆகியவையே இந்தக்கல் இவ்வளவு விலைபோக காரணம்.

இதனை ஏலம் எடுத்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.

அல்ரோசா என்ற ரஷ்ய சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வைரக்கல்லிற்கு, ரஷ்ய – போலாந்து பாலே நடனக்கலைஞரான நிஜின்ஸ்கி என்று பெயரிடப்பட்டது.

2017ஆம் ஆண்டு ரஷ்யாவில் இந்தக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »