Press "Enter" to skip to content

இந்தோனீசியா நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வில் பலர் மரணம்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

வெள்ளிக்கிழமை இந்த பெரிய நிலநடுக்கம் நிகழ்வதற்கு சற்று முன்பு லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

Collapsed building

மோசமான, நாசகர நிலநடுக்கங்களும், சுனாமியும் பல முறை தாக்கிய நாடு இந்தோனீசியா. 2018ம் ஆண்டு சுலவேசி தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 2 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

மம்ஜு நகரத்தில் மித்ர மனகர்ரா மருத்துவமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர், இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »