Press "Enter" to skip to content

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு ஜனவரி 20: அமெரிக்காவின் புதிய அரசியல் தலைமை குறித்த சுவாரசிய செய்திகள்

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கின்றனர்.

இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை, பூர்விகம், குடும்பம் உள்ளிட்டவை குறித்து பிபிசி தமிழில் சமீபத்தில் வெளியான சில சுவாரசியமான செய்திக் கட்டுரைகளை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம்.

ஜோ பைடனுக்கு தமிழகத்துடன் தொடர்பு என்ன?

ஜோ பைடன் முன்னோர்கள் அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார்

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்ட தருணத்தில் லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த வருகைதரு பேராசிரியரான டிம் வில்லாஸே – வில்ஸே, ஜோ பைடனின் முன்னோர்கள் சென்னையில் இருந்திருக்கலாம் என சுட்டிக்காட்டி gatewayhouse.in இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

கமலா ஹாரிஸ் – தாய்வழிப் பூர்விகம் தமிழ்நாடு

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், தாய்வழியில் இந்திய, தமிழ் பூர்விகத்தைக் கொண்டவர்.

இவரது தாத்தா கோபாலன் இந்தியாவில் மத்திய அரசுப் பணியில் இருந்தவர். கோபாலனின் மகள் ஷியாமளா, தமது 19ம் வயதில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறினார். அந்த நாட்டின் தலைசிறந்த மார்பகப் புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை நிபுணராக அவர் விளங்கினார்.

அதிபர் ஆவதற்கு ஜோ பைடன் கொடுத்த விலை

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு ஜனவரி 20: சில சுவாரசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் மட்டுமல்ல.

கமலா ஹாரிஸ் – அம்மா, கணவர், குடும்பம்

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் ஜனநாயகக் கட்சியின் உள்கட்சிப் போட்டியில் களமிறங்கிய பிறகுதான், உலக அளவில் இவர் மீது அதிக ஊடக வெளிச்சம் பாயத் தொடங்கியது.

அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும், இப்போது ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றி மூலம் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகிறார் கமலா.

அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஆகப்போகும் ஆங்கில ஆசிரியை

ஜில் பைடன்

அமெரிக்காவில் அதிபரின் மனைவியை முதல் சீமாட்டி என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் அதிபர் ஆகவில்லை என்பதால் பெண் அதிபரின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது.

ஜோ பைடனும், பராக் ஒபாமாவும்

‘அமெரிக்கா இஸ் பேக்’ (பழையபடி திரும்பியது அமெரிக்கா) – அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெறும் கட்டம் வந்தபோது, ஜோ பைடன் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் வெற்றி உரையின்போது இப்படித் தான் முழக்கமிட்டார்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »