Press "Enter" to skip to content

“கொக்கைன் ஹிப்போ” நீர்யானைகளை கொல்ல அறிவுறுத்தும் விஞ்ஞானிகள் – எதற்காக?

பாப்லோ எஸ்கோபார் என்ற பெயரை மறந்து விட கொலம்பியா கடந்த 30 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.

கொலம்பியா எப்போதும் கண்டிராத வகையில், அதிக தொந்தரவுகள் கொடுத்த குற்றவியல்களில் முக்கியமானவராக இருந்த அவர் தான் 1980களில் போதை மருந்துகளை கடத்தும் அமைப்பை உருவாக்கியவர். உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஒரு காலத்தில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

கொலம்பியாவில் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக கொடூரமான தாக்குதல்களை நடத்துவதற்கும் எஸ்கோபார் பெயர் பெற்றவராக இருந்தார். ஆள்கடத்தல், வெடிகுண்டு வீச்சு மற்றும் வரைமுறையின்றி கொலைகள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டவர்.

இப்போது சுற்றுச்சூழல் டைம் பாம் உருவாக அவர் தான் காரணமாக இருந்தார் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் தன்னுடைய தனிப்பட்ட மிருகக்காட்சி சாலைக்கு எஸ்கோபார் சில நீர் யானைகளைக் கொண்டு வந்தார். அவை இனப்பெருக்கம் செய்து இப்போது நாட்டின் பிரதான நீர்வழித்தடமான மக்டாலினா நதியில் உயிர் வாழ்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனவரி 17 ஆம் தேதி உயிரி சூழல் பாதுகாப்பு இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க வேண்டுமானால், இந்த நீர் யானைகளைக் கொல்வது மட்டுமே ஒரே வழி என்று சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

“இந்த விலங்குகளுக்காக நாம் பரிதாபம் கொள்வது இயல்புதான். ஆனால், விஞ்ஞானிகள் என்ற வகையில் நாங்கள் நேர்மையுடன் கூற வேண்டியுள்ளது” ன்று கொலம்பியா உயிரியலாளர் நட்டாலி கேஸ்டெல்பிளான்கோ பிபிசியிடம் கூறினார். இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்களில் இவரும் ஒருவர்.

பாப்லோ எஸ்கோபார்

“கொலம்பியாவைப் பொறுத்தவரையில் நீர் யானைகள் என்பது புதிய விலங்கு. இப்போதுள்ள நீர் யானைகளில் சிலவற்றை நாம் கொல்லாமல் போனால், 10 அல்லது 20 ஆண்டுகளில் அவற்றைக் கடுப்படுத்த முடியாமல் போய், நிலைமை மோசமாகிவிடும்” என்று அவர் கூறுகிறார்.

அதிகரிக்கும் பிரச்சனை

“கொக்கைன் ஹிப்போ” எனப்படும் இந்த நீர்யானைகளின் எண்ணிக்கை வளர்ச்சி, பாப்லோ எஸ்கோபார் 1993-ல் கொலம்பிய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

அவருடைய மரணத்திற்குப் பிறகு, ஹசியென்டா நேப்போலிஸ் என்ற அவருடைய ஆடம்பரமான எஸ்டேட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொலம்பியா தலைநகர் பகோட்டாவில் இருந்து வடகிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவில் அந்த இடம் உள்ளது.

``கொக்கைன் ஹிப்போ'' எனப்படும் நீர்யானைகளைக் கொல்லுமாறு விஞ்ஞானிகள் ஏன் கூறுகின்றனர்?

அவருடைய தனிப்பட்ட மிருகக்காட்சி சாலையை அதிகாரிகள் அகற்றினர். பிற்காலத்தில் அந்த இடம் பிரபமான தீம் பார்க் பகுதியாக மாறிவிட்டது. அந்த எஸ்டேட்டில் இருந்த மிருகங்கள் நாடு முழுக்க உள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் நீர்யானைகள் அவ்வாறு அனுப்பப்படவில்லை.

“அவற்றை கொண்டு செல்வதும் எளிதான விஷயம் கிடையாது. எனவே அவற்றை அங்கேயே விட்டுவிட்டனர். இயல்பாகவே அவை இறந்துவிடும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்” என்று கேஸ்டெல்பிளான்கோ கூறினார்.

ஆனால் அவை உயிர் பிழைத்து வாழ்ந்து வருகின்றன.

ஆண்டுகள் கழிந்த நிலையில், கொலம்பியாவில் நீர்நிலைகளில் எவ்வளவு நீர்யானைகள் வாழ்கின்றன என கணக்கெடுக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.

80 முதல் 120 வரையிலான நீர்யானைகள் இப்போது கொலம்பியாவில் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

“நீர் யானைகளின் தாயகமான ஆப்பிரிக்காவுக்கு வெளியில், இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நீர் யானைகள் வாழ்வது கொலம்பியாவாகத்தான் இருக்கும்” என்று கால்நடை மருத்துவரும், உயிரினப் பாதுகாவலருமான கார்லோஸ் வால்டெர்ரமா பிபிசியிடம் கூறினார்.

இவற்றை இதே நிலையில் அனுமதித்தால் 2034 ஆம் ஆண்டுவாக்கில், இவற்றின் எண்ணிக்கை சுமார் 1,400-க்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று அவரும், அவருடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்களும் கூறுகின்றனர். முதலில் ஒரு ஆண், மூன்று பெண் நீர்யானைகளாக வந்து, இப்போது இந்த அளவுக்கு இவை பெருகியுள்ளன.

இந்த அளவுக்கு இனப்பெருக்கம் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் ஆண்டுதோறும் 30 நீர்யானைகளைக் கொல்ல வேண்டும் அல்லது கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அந்தக் குழு யோசனை கூறியுள்ளது.

``கொக்கைன் ஹிப்போ'' எனப்படும் நீர்யானைகளைக் கொல்லுமாறு விஞ்ஞானிகள் ஏன் கூறுகின்றனர்?

இந்த நீர் யானைகளால் என்ன பிரச்னை?

உயிர்சூழல் ரீதியாக கிடைத்த வாய்ப்பை இந்த நீர் யானைகள் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்று கேஸ்டெல்பிளான்கோ கூறினார்.

இந்த தென்னமெரிக்க நாட்டில் இயற்கையில் இவற்றைக் கொல்லக் கூடிய விலங்குகள் கிடையாது. இவற்றை வேட்டையாடுவதற்கு சிங்கம் அல்லது முதலைகள் இல்லை.

அதனால் இன்னும் அதிக அளவில் இவற்றின் இனப்பெருக்கம் உள்ளது.

பருவநிலையும் இவற்றின் எண்ணிக்கை வளர்ச்சிக்கு உதவிகரமாக உள்ளது. ஆப்பிரிக்காவில் வறட்சி நிலவுவது போன்ற பருவநிலை கொலம்பியாவில் இல்லை. நீர் யானைகள் சீக்கிரத்திலேயே இனப்பெருக்க பருவத்தை அடைவதற்கு உகந்தவாறும் கொலம்பியாவின் பருவநிலை உள்ளது.

“ஆப்பிரிக்காவில் இனப்பெருக்க பருவத்தை அடையும் வயதைக் காட்டிலும், கொலம்பியாவில் முன்னதாகவே அவை இனப்பெருக்க பருவத்தை அடைந்துவிடுகின்றன” என்று கேஸ்டெல்பிளான்கோ தெரிவித்தார்.

``கொக்கைன் ஹிப்போ'' எனப்படும் நீர்யானைகளைக் கொல்லுமாறு விஞ்ஞானிகள் ஏன் கூறுகின்றனர்?

நீர் யானைகளால் சுற்றுச்சூழலில் ஏற்படக் கூடிய தாக்கத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இவற்றால் உயிரிச் சூழல் அமைப்பில் பல வகைகளில் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் மனாட்டீ போன்ற நீர்வாழ் உயிரினங்கள் இடம் பெயர்ந்து செல்லும் நிலை வரும், நீர்வழித் தடங்களில் நீரின் ரசாயனத் தன்மை மாறுபடும், அது மீன்களுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“கொலம்பியாவின் மிகப் பெரிய நீர்ப்படுகை பகுதியில் நீர் யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த நீர்ப் படுகையை நம்பிதான் பல ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்” என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.

“ஹசியென்டா நேப்போலிஸ் பகுதியில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவு வரையில் நீர் யானைகள் காணப்படுகின்றன” என்று கண்டறியப் பட்டுள்ளது.

`ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் வருவது போல இருக்கும்’

இவற்றைக் கொல்ல வேண்டும் என்றும் முதலாவது வரிசை விஞ்ஞானிகளாக கேஸ்டெல்பிளான்கோவும், அவருடைய சகாக்கள் மட்டும் இல்லை. இந்த எண்ணத்தை எதிர்க்கும் நிபுணர்களும் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.

``கொக்கைன் ஹிப்போ'' எனப்படும் நீர்யானைகளைக் கொல்லுமாறு விஞ்ஞானிகள் ஏன் கூறுகின்றனர்?

உலக அளவில் நீர் யானைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கு இந்த நீர் யானைகள் உதவும் என்று கொலம்பியாவின் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியலாளர் என்ரிக் ஆர்டோனெஸ் கூறினார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் போன்ற தன்னார்வ அமைப்புகள், இந்த நீர் யானைகள் ஆபத்து நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளன.

இவற்றின் இனப்பெருக்கத்தைக் கடுப்படுத்த, கருத்தடை நடைமுறைகளைப் பின்பற்றுவது நல்லதாக இருக்கும் என்று சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த நடைமுறைகள் எளிதானவையோ மலிவானவையோ அல்ல. இதில் கார்லோஸ் வால்டெர்ரமாவுக்கு அனுபவம் இருக்கிறது.

2009 ஆம் ஆண்டில் ஒரு ஆண் நீர் யானைக்கு அவர் ஆண்மை நீக்க சிகிச்சை செய்தார். நீர் யானைகள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்த நடைமுறையை கடைபிடிக்கலாமா என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

“மிக மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளக் கூடிய, ஐந்து டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட ஒரு விலங்கு பற்றி நாம் பேசுகிறோம்” என்று கார்லோஸ் வால்டெர்ரமா கூறினார்.

“நீர் யானையை நாங்கள் மயக்கம் அடையச் செய்தாலும், சிகிச்சை நடைமுறையை செய்யும்போது கிரேனில் இருந்து ஏறத்தாழ நழுவும் நிலை ஏற்பட்டது. ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் ஒரு டைனோசருடன் இருப்பதைப் போல தோன்றியது” என்றார் அவர்.

ஆண்மை நீக்கம் மட்டுமே இதற்கான ஒரே தீர்வாக இருக்காது என்பதும், இதற்கு 50 ஆயிரம் டாலர் வரை செலவாகும் என்பதும் இதன் மூலம் நாங்கள் பாடங்கள் கற்றுக் கொண்டோம் என்று அந்த கால்நடை சிகிச்சை நிபுணர் தெரிவித்தார்.

“இவற்றில் பெரும்பாலான நீர் யானைகள் காட்டுப் பகுதிக்குள் நீரில் வாழ்கின்றன. அவற்றை கண்டுபிடிப்பது எளிதானதல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இதற்கிடையில், அவை தொடர்ந்து இனப் பெருக்கம் செய்து கொண்டிருக்கின்றன. இவை பல விலங்குகளுடன் உறவு கொள்ளக் கூடியவை. அதாவது ஒரு ஆண் நீர் யானை பல பெண் நீர் யானைகளுடன் உறவு கொண்டு, கருத்தரிப்புக்குக் காரணமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

மரண அச்சுறுத்தல்கள்

``கொக்கைன் ஹிப்போ'' எனப்படும் நீர்யானைகளைக் கொல்லுமாறு விஞ்ஞானிகள் ஏன் கூறுகின்றனர்?

தவிர்க்க முடியாத மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க முடியாமல் அரசை எது தடுக்கிறது? மக்கள் கருத்து தான் தடுக்கிறது என்பதே இதற்கான பதில்.

இந்த நீர் யானைகளுக்கு மக்கள் தீவிர ஆதரவு காட்டுகிறார்கள் என்று கேஸ்டெல்பிளான்கோவின் அனுபவம் காட்டுகிறது.

அவருடைய ஆய்வு பற்றி கொலம்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோது, இவருக்கு சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்தன, கொலை மிரட்டல்களும் வந்தன.

“மற்ற குற்றச்சாட்டுகளுடன் என்னை `கொலைகாரி’ என்றும் கூறினார்கள். இந்த நீர் யானைகள் பற்றி பேசினால் கொலம்பியாவில் சிலருக்கு அதிக கோபம் வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

“மனிதர்களிடம் இதுபோன்ற எதிர்வினை ஏற்படுவது இயல்பானதுதான். தாவரங்கள் அல்லது சிறிய பிராணிகள் பற்றி நாம் பேசும்போது, புதிதாக ஊடுருவும் இனங்கள் பற்றி அதிகம் புரிந்து கொள்கிறார்கள். பெரிய பாலூட்டிகளை அவர்கள் நல்லவை என கருதுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டார்.

ஹசியென்டா நேப்போலிஸ் பகுதியில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட மிருகக்காட்சி சாலையில், மீண்டும் பிடித்து கொண்டு வரப்பட்ட நீர் யானைகள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. எஸ்கோபார் உயிருடன் இருந்தபோது, மக்களிடம் நல்லெண்ணத்தை பெறுவதற்காக, அவற்றைப் பார்க்க மக்களுக்கு அனுமதி கொடுத்து வந்தார். கேஸ்டெல்பிளான்கோ குழந்தையாக இருந்தபோது, குடும்பத்தினருடன் அங்கு சென்றதை நினைவில் வைத்திருக்கிறார்.

ஆனால் சுற்றுச்சூழலுக்குப் பிரச்னை ஏற்படுகிறது என்பதுடன், அரவணைத்து பராமரிக்கும் இயல்பு கொண்டதாக நீர் யானைகள் கிடையாது.

உலகில் பெரிய ஆபத்தான விலங்குகளின் பட்டியலில் இவை அடிக்கடி இடம் பெறுகின்றன. ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் குறைந்தது 500 பேரின் மரணத்துக்கு நீர் யானைகள் காரணமாக இருக்கின்றன என்று 2016 ஆம் ஆண்டில் செய்தி வெளியிட்டது.

கொலம்பியாவில் நீர் யானையால் யாரும் மரணம் அடையவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் பியூர்ட்டோ டிரியுன்போ என்ற இடத்தில் நீர் யானை தாக்கி, பண்ணை தொழிலாளி ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக அந்தப் பகுதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இந்த இடம் ஹசியென்டா நேப்போலிஸ் அருகே உள்ளது.

``கொக்கைன் ஹிப்போ'' எனப்படும் நீர்யானைகளைக் கொல்லுமாறு விஞ்ஞானிகள் ஏன் கூறுகின்றனர்?

இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் எஸ்கோபாரின் முன்னாள் எஸ்டேட் பகுதியில் வாழும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒரு நீர் யானையை கொலம்பிய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றபோது பொது மக்கள் பெரிய அளவில் கொதித்தெழுந்தனர். சட்டரீதியாக நீர் யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டிய கட்டாயம் அப்போது ஏற்பட்டது. நீர் யானைகளைக் கொல்லும் திட்டங்களுக்கு இந்த விதிகள் தடையாக இருக்கும்.

“புதிதாக வந்துள்ள உயிரினங்களைப் பாதுகாக்க எங்கள் நாட்டில் சட்டம் உள்ளது” என்று கேஸ்டெல்பிளான்கோ தெரிவித்தார்.

பலமான கவலை

ஆனால் நீர் யானைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கொலம்பியா அதிகாரிகள் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

இவற்றைக் கொல்வது என்ற விஷயம் பற்றி ஏற்கெனவே பேசப்பட்டது என்று கொலம்பிய அரசு சுற்றுச்சூழல் ஏஜென்சியில் பணிபுரியும் உயிரியல் நிபுணர் டேவிட் எச்செவ்ரி தெரிவித்தார்.

``கொக்கைன் ஹிப்போ'' எனப்படும் நீர்யானைகளைக் கொல்லுமாறு விஞ்ஞானிகள் ஏன் கூறுகின்றனர்?

“நிலைமை மிகவும் தீவிரமானதாக உள்ளது. பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று எச்செவ்ரி விளக்கினார்.

ஆனால், மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு மக்களின் கருத்துகள் தடையாக உள்ளன. நீர் யானைகளைக் கொல்வது என்ற நடவடிக்கை இப்போதைக்கு எடுக்கப்படாது.

“மக்களை ஒரு பொதுவான நிலைப்பாட்டில் திரட்டுவதற்கான விஷயமாக இது அமையும். அதனால் தான் வேறு தீர்வுகள் பற்றி யோசிக்கிறோம்” என்று அவர் கூறினார்.

எஸ்கோபாரின் ஆதிக்கம்

கேஸ்டெல்பிளான்கோ

இந்த நீர் யானைகளின் இனப் பெருக்கத்தைவிட, இதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கான முட்டுக்கட்டைகள் பற்றி கேஸ்டெல்பிளான்கோ மற்றும் அவருடைய சகாக்கள் அதிக அச்சம் தெரிவிக்கின்றனர்.

2011ல் இருந்து 2019 வரையிலான காலத்தில் 4 நீர் யானைகளுக்கு மட்டுமே கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று அரசு தகவல்களை மேற்கோள் காட்டி அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“இதுவரையில் கொலம்பியாவை சொர்க்க பூமியாகக் கருதி நீர் யானைகள் வாழ்ந்து வருகின்றன” என்று கேஸ்டெல்பிளான்கோ கூறுகிறார்.

பாப்லோ எஸ்கோபாரின் மரணத்துக்குப் பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து, கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல்காரரின் அடையாளங்களாக நீர் யானைகள் இருந்து வருகின்றன.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »