Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கோவிட் பெருந்தொற்று உங்களின் கனவுகளை மாற்றுகிறதா?

  • ஜார்ஜினா ரன்னார்ட்
  • பிபிசி

கடந்த ஆண்டு, கோவிட் பெருந்தொற்று ஆரம்பித்தது முதல், பலருக்கும் மிகவும் விசித்திரமான கனவுகள் வருவது தொடர்பான செய்திகள் வெளியாகின.

கோவிட் தொற்று பரவ ஆரம்பித்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், மக்கள் இந்த தொற்றோடு வாழ ஆரம்பித்துள்ள சூழலில், உங்களின் கனவுகளும் இந்த புதிய சுழலில் வாழ பழகிவிட்டனவா என்பதை நாங்கள் அறிய நினைத்தோம்.

முகக்கவசம், ஆளிலில்லாத தெருக்கள், சமூக இடைவேளியை கடைபிடித்தல் ஆகியவை உங்களின் அன்றாட கனவுகளில் அங்கம் ஆகிவிட்டதா? நீங்கள் தூங்கும்போது என்ன பார்க்கிறீர்கள்?

’சுறாக்கள் முதல் கை கழுவுதல் வரை`

கனவு

தங்களின் கனவுகள் குறித்து வாசகர்கள் சிலர் அனுப்பிய கருத்துகள் இதோ உங்களுக்காக.

ஸ்காட்லாந்து பகுதியில் வசிக்கும் ஃபியோனா, “கடற்கரையில் நான் நடந்து செல்வது போலவும், கடலின் பல பகுதிகளிலும் சுறாக்கள் வட்டமிடுவது போலவும் இருக்கும். மக்கள் ஏன் சமூக இடைவேளையை கடைபிடிக்கவில்லை என்று தோன்றும்,” என்கிறார்.

தனது தினசரி கனவுகளில் கூட, இந்த பெருந்தொற்று ஒரு அங்கமாகிவிட்டதாக அவர் கூறுகிறார். சில நேரங்களில் கனவில் வரும் இருமல்கூட இவரை பயமுறித்தியுள்ளதாக கூறுகிறார்.

ஜப்பானிலிருந்து குடும்பத்துடன் பிரிட்டனுக்கு குடியேறியுள்ள சயாகா, தனது ஏழு வயது மகளுக்கு வரும் கனவுகளை விளக்குகிறார். ‘கனவில் பெரும்பாலும் அவள் வீட்டிலேயே இருப்பாள். அவளின் பெற்றோர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் கனவில்கூட கைகளை சுத்தமாக வைத்திருப்பார்கள்.’

சிலி நாட்டில் வழும் மரிலா என்பவர், “எனக்கு கனவில் வரும் நாய், பூனைகள் ஆகியவை ஏன் முகமூடி அணியவில்லை என்று தோன்றும்,” என்கிறார்.

எங்களின் வாசகர்கள் மூலமாக நாங்கள் சில கனவுகள் குறித்து அறிந்தோம். ஆனால், மாதக்கணக்கில் விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஹாவர்ட் மருத்துவப்பள்ளியில், சைக்காலஜி பிரிவில் உள்ள டெய்ர்ட்ரி பாரெட் என்பவர், 15,000 கனவுகள் குறித்த தரவுகளை இணையதள மேலாய்வு மூலம் சேகரித்துள்ளார்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களுடையதாக உள்ளது. இதன்மூலமாக அவர் உருவாக்கியுள்ள புத்தகமான ’பாண்டமிக் டிரிம்ஸ்’, பெருந்தொற்றின் முதலாம் அலையை குறித்து கவனத்தில் கொண்டு உருவானது. பெருதொற்று தாக்கத்தொடங்கிய நேரத்தில் மக்கள் பலர், தங்களை விலங்குகள் சில தாக்குவது போலவும், சுவாசிக்க முடியாமல் சிரமப்படுவது போலவும் கனவு கண்டுள்ளனர் என்கிறார். பிறகு ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் கணினிமய கல்வி முறையால், கனவில் மக்கள் பலர் எதோ சிறையில் மாட்டிக்கொண்டது போலவும், திடீரென திட்டமிடப்பட்ட கணித தேர்வை எழுதச் சொன்னது போலவும் கனவு கண்டுள்ளனர்.

இருப்பினும், அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, மக்களில் பலரும், தாங்கள் முகக்கவசம் அணியாமல் சாலையில் வந்ததுபோலவும், மக்கள் சிலர் முக்க்கவசம் அணியாமல் சுற்றித்திரிவது போலவும் கனவுகள் வரத்தொடங்கியது தெரிய வந்தது.

சமூகப்பதற்றம் குறித்த கனவுகள் அதிகமாகத் தொடங்கியது முதல், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தன்னைத்தாக்கும் என்று எழுந்த அச்சம் குறித்த கனவுகள் குறையத்தொடங்கிவிட்டதாக கூறுகிறார் மருத்துவர் பார்ரெட்.

‘பலரும் ‘நான் முகக்கவசம் அணிய மறந்துவிட்டேன்’ என்ற கனவுடனோ அல்லது அதனால் ஏற்படக்கூடிய சமூக அவமானம் குறித்தோ கனவு கண்டுள்ளனர்.

முகக்கவசம் இல்லாமல் சூப்பர் மார்க்கெட் பயணம்

கனவு

சமூக அவமானம் அல்லது இது குறித்த பதற்றம் ஆகியவை அடங்கிய கனவுகளை கண்டுள்ளதாக, பல வாசகர்கள் எங்களிடம் கூறினர்.

‘நான் கடையில் வாங்குதல் மால் போன்ற, அதிக கூட்டம் நிறைந்த இடத்தில் உள்ளேன். திடீரென நான் முகக்கவசம் அணியவில்லை என்பதை உணர்கிறேன். என்னை சுற்றியுள்ள யாருமே முகக்கவசம் அணியவில்லை. ஏதோ ஆபத்தில் உள்ளதுபோல உணர்கிறேன். என்னை சுற்றியுள்ள மக்கள் குறித்து தீடீரென எனக்கு அதிக கவனம் ஏற்படுகிறது.’ என்கிறார் பிரிட்டனை சேர்ந்த டிலெட்டா.

கேம்பிரிட்ஜ்ஷேரில் வசிக்கும் நவோமி ஹார்வி, தனது அண்ணனின் குழந்தையை கட்டி அணைப்பது போல கனவு கண்டதாகவும், அவர் அவ்வாறு செய்யும்போது, தனது குடும்பத்தினர் அவரை நோக்கி வந்ததாகவும், உடனடியாக பெருந்தொற்று குறித்த நியாபகம் வந்து அலறிஅடித்து எழுந்ததாக கூறும் அவர், ‘ஒருவித பயத்தோடு எழுந்தேன். எதோ கட்டுப்பாடுகளை மீறிவிட்டது போலவும், அதனால், எங்கள் இருவரையுமே நோய் தாக்கும் சூழலுக்கு தள்ளிவிட்டது போல உணர்ந்தேன்.’ என்கிறார்.

மனிதர்களின் தூக்கத்தில் உள்ள மூளைக்கும், விழித்திருக்கும் மூளைக்கும் நடுவே மிகவும் சிக்கலான ஒரு தொடர்பு உள்ளது என்கிறார், லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் வல்தாஸ் நோரெயிகா.

சில விஷயங்கள் இந்த இருமுறைகளுக்கு நடுவிலும் நகரக்கூடியவை. ஆனால், வாழ்க்கையில் சில விஷயங்கள் குறித்து நாம் கனவுகாண மட்டோம். உதாரணமாக, இணையதள தேடல் குறித்து நாம் கனவு காண்பதே இல்லை என்கிறார்.

பகல் நேரங்களில் கோவிட் தொற்று குறித்து நமக்கு ஏற்படும் எண்ணங்கள், நமது கனவுகளை பாதிக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக பலரின் கனவுகள் குறித்த தகவல்களை இவரும், உடன் பணியாற்றும் பேராசிரியரும் சேமித்து வருகிறார்கள்.

உங்களின் உணர்வுகளை அதிகம் தூண்டக்கூடிய விஷயங்களை பொதுவாக கனவுகளில் தோன்றும்.

‘இந்த பெருந்தொற்றால், மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய ஒருவர், பல ஆண்டுகளால் இதுகுறித்த கனவுகளை தூக்கத்தில் சந்திக்கலாம். இது மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்றாலும், வருத்தமளிக்கக்கூடிய ஒன்றே.’ என்கிறார்.

ஆனால், நமது அன்றாட கனவுகளில் இந்த கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மற்றும் அதை சுற்றியுள்ள விஷயங்கள் குறித்த தகவல்கள் இயல்பான ஒன்றாக இடம் பெற தொடங்கிவிட்டனவா என்ற நமது யோசனை குறித்து என்ன ஆனாது? – முகக்கவசம் மற்றும் சமூக இடைவேளியில் அது உள்ளது ஆனால், நமது அன்றாட வாழ்க்கையிலுமா?

இவ்வாறான ஒரு கனவை இதுவரை தான் கேள்விப்படவில்லை என்கிறார் மருத்துவர் பர்ரெட். ‘பொதுவாக நாம் வாழும் காலத்திற்கும், கனவுகள் நடக்கும் காலத்திற்கும் இடையே ஒரு இடைவேளி இருக்கும். பெரும்பாலும் நாம் கடந்த காலம் குறித்தே கனவு காண்போம். நமது வருங்காலம் குறித்து அல்ல. ஆனால், இந்த பெருந்தொற்று முடிந்த பிறகு, நமது கனவுகள் இந்த காலத்தை நோக்கி சென்று, இத்தகைய கனவுகள் வரக்கூடும்’ என்கிறார்.

‘அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், ஒருவர் உணவகத்திற்கு சென்றுள்ளது போலவும்,அங்கு அனைவருமே முகக்கவசம் அணிந்துள்ளது போலவும், கனவு கண்டு, எழுந்தவுடன் அதை பெருந்தொற்று காலத்தோடு பொருத்திப் பார்த்தால், நான் ஆச்சரியம் கொள்ள மாட்டேன்.’ என்கிறார் அவர்.

தடுப்பூசிகள் குறித்த கனவுகளே இதில் தற்போது சேர்ந்துள்ள புதிய விஷயம் என்கிறார் அவர்.

‘தடுப்பூசிகளுக்கான அனுமதி அளிக்கப்பட்ட பின்பு, அவை கனவில் வரத்தொடங்கின என்றாலும், எதிர்மறையான வகையிலேயே அவை பெரும்பாலும் வந்தன. எடுத்துக்காட்டாக, ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்வார், ஆனால், தனது ஊசியில் சைனைட் என்று எழுதப்பட்டுள்ளதை பிறகு கவனிப்பது போல வந்துள்ளது.’ என்று விளக்குகிறார்.

தடுப்பூசிகளுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு இவ்வாறு வரும் என்று தொடர்புபடுத்திக்கொள்வதைவிட ஊசிகள் பிடிக்காதவர்களுக்கு தனது மூளையில் உள்ள விருப்பமற்ற தன்மையை இது குறிப்பதாக புரிந்துகொள்ளுமாறு அவர் விளக்குகிறார். (கோவிட் தடுப்பூசிகளால் மரணம் ஏற்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை.)

பெருந்தொற்று குறித்த 90% கனவுகள் எதிர்மறையாகவே உள்ளது என்று அவரின் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. ஆனால், இந்த வைரஸை தாண்டிய வாழ்க்கை குறித்த நல்ல கனவுகளை கண்டதாக, அண்மை காலங்களில், குறைவான மக்கள் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

‘சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளது போலவும், தூய்மையான கடல், குறைந்த குப்பைகளுடம் சமூகம் உள்ளது போன்ற கனவுகளும் மக்களுக்கு வந்துள்ளன. அதில் பலவற்றில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பெரிதாக உள்ள திமிங்கலங்கள் கடற்கரைக்கு அருகாமையில் மிதந்துள்ளன. பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, வீட்டை விட்டு வெளியே வந்த பெண், திமிங்கலங்கள் பறக்கக்கற்றுக்கொண்டதை பார்க்கிறார். அவர் வானத்தில் மிதக்கிறான.’ என்கிறார்.

ஆனால் சிலருக்கோ, பெருந்தொற்று காலத்தில் உறக்கம் என்பது, கோவிட் நோயிலிருந்து ஓய்வு அளிப்பதாக உள்ளது.

‘இந்த கடினமாக ஆண்டில், எனது கனவுகள் மட்டுமே ஒரேமாதிரியாக அமைந்துள்ளன என்று கூறுவேன். மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்வது போலவோ, ஒருவரை ஒருவர் தொடாமல் வாழ்வது போலவோ எனக்கு கனவு வந்ததே இல்லை. அத்தகைய ஒரு வாழ்க்கை என் கனவில் இல்லை.’ என்கிறார் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வசிக்கும் கிசா கே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »