Press "Enter" to skip to content

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் – கேரி சாம்சன் திருமணம் எளிமையாக நடந்தது

பட மூலாதாரம், REBECCA FULTON/DOWNING STREET/PA WIRE

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு நிச்சயமான பெண் கேரி சைமண்ட்ஸை வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் மணந்து கொண்டார்.

சனிக்கிழமை பகல் சிறிய விழாவில் இந்த திருமணம் நடந்து முடிந்தது என பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தம்பதியினர் அடுத்த கோடை காலத்தில் தங்கள் திருமணத்தை குடும்பத்தினர், உறவினர்களுடன் மீண்டும் கொண்டாடுவார்கள் என அச்செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த 200 ஆண்டுகளில், பிரிட்டனில் பதவியில் இருந்த போது திருமணம் செய்து கொண்ட முதல் பிரதமர் என்கிற பெருமையையும் பெற்று இருக்கிறார் போரிஸ் ஜான்சன்.

இது ஒரு அருமையான செய்தி என தடுப்பூசி அமைச்சர் நதீம் சஹாவி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தான் போரிஸ் ஜான்சனின் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை என்றும், ஸ்கை நியூஸ் ஊடகத்திடம் கூறியுள்ளார் சஹாவி.

“அவர்கள் திருமணம் செய்து கொண்டது இருவருக்குமே ஒரு அருமையான விஷயம்” என சஹாவி கூறினார்.

“உங்கள் திருமண நாளில் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்” என ட்வீட் செய்திருக்கிறார் வேலை மற்றும் பென்ஷன் செயலர் தெரெசெ காஃபே

போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், Getty Images

“பெரிய வாழ்த்துக்கள்” என வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் ஆர்லேன் ஃபாஸ்டர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

போரிஸ் ஜான்சன் இதற்கு முன், இரு முறை திருமணம் செய்துள்ளார். ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியே முந்தைய திருமணம் நடந்திருந்தால், விவாகரத்து ஆனவர்களின் மறுமணம் செய்து கொள்வதை கத்தோலிக்கத் திருச்சபை ஆதரிக்க முடியும்.

பிரிட்டன் பிரதமரின் திருமணத்துக்கு கொரோனா விதிமுறைகள் படி 30 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டது என தி மெயில் என்கிற பத்திரிகை தன் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது.

பிரிட்டன் அரசின் உயர் அதிகாரிகளில் பலருக்கே இந்த திருமணம் குறித்து தெரியாது என தி சன் பத்திரிகை கூறியுள்ளது.

பிரிட்டன் நேரப்படி பொது மக்கள் பகல் 1.30 மணிக்கு வெஸ்மின்ஸ்டர் தேவாலயத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

சுமார் அரை மணி நேரம் கழித்து 33 வயதான சைமண்ட்ஸ் லிமுசீன் காரில் வெள்ளை நிற ஆடையோடு, போரிஸ் ஜான்சனை திருமணம் செய்து கொள்ள வந்திறங்கினார்.

இசைக்கலைஞர்கள்

சனிக்கிழமை இரவு, பிரதமர் அலுவலகம் மற்றும் வீட்டை விட்டு இசைக் கலைஞர்கள் வெளியேறியபோது படமெடுக்கப்பட்டனர்.

கடந்த 1822 ஆம் ஆண்டு, ராபர்ட் பேங்க்ஸ் ஜென்கின்சன் என்கிற பிரதமர்தான், கடைசியாக தான் பதவியில் இருந்த போது திருமணம் செய்து கொண்டார்.

சைமண்ட்ஸ் கடந்த 2010ஆம் ஆண்டு கன்மேலாய்வுட்டிவ் கட்சியில் பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு போரிஸ் ஜான்சனை இரண்டாவது முறையாக லண்டன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகுவதற்கு முன், அவர் கட்சியின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.

தான் கர்பமாக இருப்பதையும், தங்களுக்கு நிச்சயமாகி இருப்பதாகவும் கடந்த பிப்ரவரி 2020-ல் அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், இவர்களுக்கு வில்ஃப்ரெட் (மகன்) பிறந்தார்.

போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது முன்னாள் மனைவி மரீனா வீலர் கடந்த 2018ஆம் ஆண்டு, விவகாரத்து செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர்.

அவருக்கு முன் அலெக்ரா மோஸ்டின் ஓவனை மணந்தார் போரிஸ் ஜான்சன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »