Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி: ஜி7 நாடுகளின் நூறு கோடி டோஸ் நன்கொடை போதுமானதா?#FACTCHECK

  • பிபிசி உண்மை கண்டறியும் குழு
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், EPA

உலகின் முன்னணி தொழில்துறை ஜி 7 நாடுகள் குழு, ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

ஜி 7 உச்சிமாநாட்டிற்காக பிரிட்டன் வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா 500 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் என கூறினார். மேலும் அமெரிக்காவின் இந்த நன்கொடை உலகில் எந்தவொரு தனி நாடு கொடுக்கும் நன்கொடையிலேயே மிகப் பெரியது எனவும் கூறினார்.

பிரிட்டன் அடுத்த ஆண்டுக்குள் 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்த உறுதியளிப்புகளுக்கு என்ன மாதிரியான எதிர்வினைகள் வந்துள்ளன?

ஜி 7 உச்சிமாநாட்டில் 870 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் டோஸ்கள் நன்கொடையாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2021 முதல் கொரோனா தடுப்பூசி டோஸ்களை நன்கொடையாக கொடுக்க உறுதியளிக்கப்பட்டிருக்கும் டோஸ்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் முக்கியமாக கோவேக்ஸ் தடுப்பூசி திட்டத்தின் மூலம் வழங்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் 20% மக்களை சென்றடையும் நோக்கில் கோவேக்ஸ் திட்டம் செயல்பட்டு வருகிறது.

“எங்களுக்கு இன்னும் நிறைய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தேவை, அதுவும் விரைவாக தேவை” என ஜி 7 நாடுகளின் கொரோனா தடுப்பூசி நன்கொடை உறுதியளிப்புக்கு பதிலளித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ். “பல நாடுகளில் இப்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன – அவர்கள் தடுப்பூசிகள் இல்லாமல் அதை எதிர்கொண்டு வருகிறார்கள்.”

ஜோ பைடன் & போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், Getty Images

“ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் என்றால், ஒரு பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் என்பது 500 மில்லியன் பேருக்கான தடுப்பூசி என்று பொருள். அதை விட எங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அதிகம் தேவை,” என தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறினார்.

“நாங்கள் சொந்தமாக தடுப்பூசிகளை தயாரிக்க விரும்புகிறோம், ஆனால் எங்களிடம் அதற்கான உற்பத்தித் திறன் இல்லை.”

ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து, 500 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை லாப நோக்கற்ற விலையில் வாங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கா கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் தடுப்பூசிகளின் ஆயுதக் கிடங்காக இருக்கும் என கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்கா இந்த ஆண்டு இறுதிக்குள் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை விநியோகிக்கும் எனவும், 2022 ஜூன் மாதத்திற்குள் மேலும் 300 மில்லியன் சோஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளுக்கு 80 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கொடுப்பதாக அமெரிக்கா ஏற்கனவே உறுதியளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

பிரிட்டன் இந்த ஆண்டின் செப்டம்பர் இறுதிக்குள் ஐந்து மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களும் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 25 மில்லியன் டோஸ்களும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் 80 சதவீத டோஸ்கள் கோவேக்ஸ் வழியாக ஏழை நாடுகளுக்கு கொடுக்கப்படும்.

ஏழை நாடுகளுக்கு எத்தனை தடுப்பூசிகள் தேவை?

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், EPA

கவி (தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி) என்கிற அமைப்பு ஜூன் தொடக்கத்தில் நடத்திய ஒரு உச்சிமாநாட்டில், இதுவரை 132 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை பல்வேறு நாடுகள் பகிர்ந்துள்ளதாகக் கூறியது.

பெல்ஜியம், டென்மார்க், ஜப்பான் போன்ற நாடுகள் குறுகிய கால விநியோகத்துக்காக நன்கொடை வழங்கிய 54 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளும், ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் வழங்கிய கூடுதல் விநியோகமும் இதில் அடங்கும்.

“கொரோனா வைரஸின் திரிபுகளை கருத்தில் கொண்டும், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவும் வேகத்தை கருத்திக் கொண்டும், கொரோனா தடுப்பூசிகள் விரைவில் உலகம் முழுவதும் கிடைக்கச் செய்ய வேண்டும்” என கவியின் தலைமை நிர்வாகி சேத் பெர்க்லி பிபிசியிடம் தெரிவித்தார்.

கோவேக்ஸ் திட்டம் ஏற்கனவே 2.5 பில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்கியுள்ளதாக அவர் கூறினார், ஆனால் இவை இந்த ஆண்டின் இருதி வரை வராது.

“செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது 10 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றால் கூட, எங்களுக்கு கூடுதலாக 250 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வேண்டும். அதில் 100 மில்லியன் டோஸ்கள் இந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தேவை” என உலக சுகாதார அமைப்பின் டெட்ரோஸ் கெப்ரேயஸ் கூறுகிறார்.

கோவாக்ஸ் திட்டத்தின் நோக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் உலகளவில் இரண்டு பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக இருந்தது,

ஆனால் இப்போது 2022 ஆம் ஆண்டின் தொடக்க காலத்துக்குள் 92 குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு 1.8 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி டோஸ்களைப் பெறுவது அதன் நோக்கமாக இருக்கிறது.

உலகம் முழுவதும் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட 11 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து தேவைப்படும் என உலக சுகாதார அமைப்பு கணித்திருக்கிறது. அப்போது தான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மக்கள் மத்தியில் பரவுவதை கணிசமாகக் குறையக்கூடும்.

தடுப்பூசி உற்பத்தி பிரச்சனைகள்

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

கோவாக்ஸ் திட்டம் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை நம்பி இருந்தது.

இந்தியா கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட பின், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அத்தடுப்பூசியின் அனைத்து முக்கிய ஏற்றுமதியையும் நிறுத்தியது.

மொத்தம் 1.1 பில்லியன் டோஸ் கோவிஷீல்ட் (ஆஸ்ட்ராசெனீகா) தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுக்கு வாங்குதல் கொடுக்கப்பட்டது.

இதுவரை, சீரம் இன்ஸ்டிட்யூட் கோவேக்ஸுக்கு வெறும் 30 மில்லியன் டோஸ்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது, மேலும் தன் உற்பத்தியை அதிகரிக்க முடியாததால் கிட்டத்தட்ட 190 மில்லியன் டோஸை தானே வைத்துக் கொண்டது.

இந்த ஆண்டின் இறுதியில் தான் ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படும் எனவும், இந்தியாவின் சொந்த தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் சீரம் நிறுவனம் கூறியது.

ஏற்கனவே சில நாடுகளுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை மெதுவாக விநியோகிப்பது குறித்து சில நாடுகளில் ஒரு பிரச்சினை உள்ளது, சில ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தடுப்பூசி காலாவதியாவதற்கு முன் தடுப்பூசி டோஸ்களைப் பயன்படுத்த முடியவில்லை.

“அதிகமான தடுப்பூசிகள் மிக முக்கியமானவை என்றாலும், சில ஆப்பிரிக்க நாடுகள் தங்களிடம் உள்ள தடுப்பூசி டோஸ்களை விரைவாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்” என உலக சுகாதார அமைப்பு கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »