Press "Enter" to skip to content

எப்ராஹீம் ரையீசி: இரானின் புதிய அதிபர் குறித்து எச்சரிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

இரானில் எப்ராஹீம் ரையீசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான லியோர் ஹையட், ரையீசி இரானின் ஆதீத கடும்போக்காளர் என தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய தலைவர் இரானின் அணு திட்டங்களை அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், ஊழலை ஒழிக்கவும் தம்மால் முடியும் என்று வாதிட்டு இரானின் அதிபர் தேர்தலை சந்தித்த இப்ராஹிம் ரையீசி வெற்றிப் பெற்றதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு மாதம் பதவியேற்கவுள்ள ரையீசி, இரானின் உயர் நீதிபதிகளில் ஒருவர். பழமைவாத கொள்கைகளை கொண்டவர். அவருக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கியதில் தொடர்புடையவர் என அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

வெற்றியை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் ரையீசி, அரசின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தப்போவதாகவும், நாட்டில் அனைவருக்குமான தலைவராக இருக்கப்போவதாகவும் உறுதியளித்தார்.

raisi

பட மூலாதாரம், Getty Images

கடினமான உழைப்பு, புரட்சி மற்றும் ஊழலற்ற அரசை உருவாக்குவேன் என ரையீசி தெரிவித்ததாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லியோர் ஹையட், 1988ஆம் ஆண்டு அரசியல் கைதிகளுக்கு கூண்டாக மரண தண்டை விதிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டில் “டெஹ்ரானின் கசாப்புக்காரர்” ரையீசி என தெரிவித்துள்ளார். மேலும் இரானின் வேகமாக வளர்ந்து வரும் அதி நவீன ஆணு திட்டத்திற்கு பொறுப்பானவர் ரையீசி எனவும் தெரிவித்துள்ளார்.

`மரண குழு` என்று அழைக்கப்பட்ட குழுயின் நான்கு நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் ரையீசி. அந்த குழு 5 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மரண தண்டனை விதித்ததாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவிக்கிறது.

இருப்பினும் டிவிட்டரில் சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஹையட் தெரிவித்துள்ளார் இதே எண்ணிக்கையைதான் இரானின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.

இரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒரு நீண்டகால நிழல் போரில் ஈடுபட்டு வருகின்றன. அதன் விளைவாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் வெளிப்படையான ஒரு மோதலை தவிர்த்து வருகின்றன.இந்த மோதல் போக்கு கடந்த சில நாட்களாக அதிகரித்தது.

சூழல் சற்று கடினமானது. இருப்பினும் பதற்றத்துக்கு முக்கிய காரணம் இரானின் அணுத் திட்ட நடவடிக்கைகள்.

இஸ்ரேல், கடந்த வருடம் இரானை சேர்ந்த முக்கிய அணுவிஞ்ஞானி ஒருவரை கொலை செய்ததாகவும், ஏப்ரல் மாதம் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகளில் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் மீது இரான் குற்றம் சுமத்துகிறது.

மறுபுரம் இரானின் அணுதிட்டம் அமைதிக்கானது மட்டுமே என இஸ்ரேல் நம்பவில்லை. இரான் அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கி வருகிறது என இஸ்ரேல் நம்புகிறது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அணுஆயுத திட்டத்தின் மூலம் இரான் அணுதிட்ட பணிகளை நிறுத்தியதால் அதன் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான தண்டனைகள் நீக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டு டிரம்ப் அந்த இரான் அணு திட்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக தெரிவித்தார். பின் இரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். தற்போது பைடன் நிர்வாகம் அந்த ஆணு திட்ட ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த ஆலோசித்து வருகிறது.

இதன் காரணமாக இரான் தனது அணு திட்ட செயல்பாடுகளை மேலும் அதிகரித்தது. எப்போதும் இல்லாத அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்கி வருகிறது. இருப்பினும் ஆணு ஆயுதம் தயாரிக்க தேவையான அளவு யுரேனியத்தை உருவாக்கவில்லை.

இரான்

பட மூலாதாரம், Reuters

பிற உலக நாடுகள் என்ன சொல்கின்றன?

இரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உள்ள “பாரம்பரியமான நட்பு மற்றும் நல் உறவை” சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இப்ராஹிம் ரையீசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிரியா, இராக், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாட்டின் தலைவர்களும் இதேபோன்றதொரு வாழ்த்து செய்தியையும் தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

காசாவை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்திதொடர்பாளர், இரான் வளமும் வளர்ச்சியும் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

“அடக்குமுறைகள் நிறைந்த நீதித்துறையின் தலைவரான ரையீசியின் பார்வையில் இரானின் சமீபத்திய வரலாற்றில் பல கொடூரமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அதற்கு அவரைப் பொறுப்பாக்கி விசாரிக்க வேண்டுமே தவிர தேர்தல் நடத்தி உயர் பதவியை வழங்க வேண்டியதில்லை” என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை சேர்ந்த மைகல் பேஜ் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »